செவ்வாய், 19 மே, 2009

2009-05-19


சில வருடங்கள் முன்பு வரை விஜய் தீவிர ரஜினி ரசிகர். விஜய் எப்போதும் என்னுடைய ரசிகர் என்று ஒருமுறை மேடையிலேயே பெருமைப்பட்டுக் கொண்டார் ரஜினி.
இந்த தலைவர் - ரசிகர் உறவில் தற்பொது விரிசல். என்னுடைய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். என்று கூறத் தொடங்கியிருக்கிறார் விஜய். தனது படத்தில் அன்பே வா காட்சியை வைத்து எம்.ஜி.ஆரை போலவே நடித்தது, வேட்டைக்காரன் என்று எம்.ஜி.ஆர். படத்தலைப்பை தனது படத்துக்கு வைத்தது என நூறு சதவீத வாத்தியார் ரசிகராக மாறியிருக்கிறார் விஜய்.

ரஜினி ஆன்மீக வழியில் செல்வதால், தனது வருங்கால அரசியல் கனவுக்கு அவர் வழிகாட்ட மாட்டார் என எம்.ஜி.ஆரை தனது குருவாக விஜய் வரித்துக் கொண்டார் என்பது சிலரது கருத்து. தொடர்ந்து அஜித் பட விழாக்களில் ரஜினி கலந்து கொள்வது விஜய்க்கு பிடிக்கவில்லை. அதுதான் இந்த மாற்றம் என்கிறார்கள் வேறு சிலர்.

எப்படியோ... தனது புதிய ரூட்டில் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் விஜய். வேட்டைக்காரனுக்கு அடுத்து தயாராகும் தனது ஐம்பதாவது படத்துக்கும் எம்.ஜி.ஆர். படத் தலைப்பையே வைப்பது என்று முடிவு செய்துள்ளார் விஜய். தற்போதைக்கு தேர்வாகியிருக்கும் பெயர், உரிமைக்குரல். வைப்பது என்று முடிவாகிவிட்டது... அப்புறம் படத்தலைப்பு எதற்கு. பேசாமல் எம்.ஜி.ஆர். என்றே வைக்கலாமே!

அஜீத் 50-வது படத்துக்கு தயாராகிறார். 49-வது படமான "அசல்" படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. சரண் இயக்குகிறார். சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
இப்படம் முடிந்ததும் அடுத்த பட வேலைகள் துவங்கும். 50-வது படம் பிரமாண்டமாக வர வேண்டும் என்பதில் அஜீத் கவனமாக இருக்கிறார். ஏற்கனவே சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. இன்னும் சில படங்கள் தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக "காதல் கோட்டை", "வாலி", "அமர்க் களம்", "தீனா", "வரலாறு", "சிட்டிசன்", "வில்லன்", "பில்லா" போன்ற பல படங்கள் அஜீத்தின் ஹிட் பட வரிசையில் உள்ளன. பெரும்பாலும் ஆக்ஷன், காதல் கதைகளே அவருக்கு அமைந்தன.

50-வது படத்தில் ஆக்ஷன், காதலுடன் காமெடி, குடும்பசென்டி மென்ட் போன்றவைகள் இருக்க வேண்டும் என பிரியப்படுகிறார். அதற்கான கதையை தேடுகிறார். ஆக்ஷன்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை திருப்திபடுத்தியாகி விட்டது. அடுத்து குடும்ப பாங்கான கதையொன்றில் நடிப்பதே அவரது விருப்பமாக உள்ளது என்று அஜீத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இது போன்ற கதைகளுடன் இளம் மற்றும் பழைய இயக்குனர்கள் அஜீத்தை முற்றுகையிட்டுள்ளனர். அந்த கதைகளை கேட்டு வருகிறார். இன்னும் அவர் எதிர்பார்த்த கதை கிடைக்கவில்லை.

"அசல்" பட ரிலீசுக்கு முன் அது மாதிரி கதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

"கண்களால் கைது செய்" படம் மூலம் கதாநாயகியாக அறிமுக மான பிரியாமணி தமிழ், தெலுங்கில் 24 படங்களில் நடித்து விட்டார்.
"பருத்திவீரன்" படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று தந்ததால் இந்தியா முழுவதும் பிரபலமானார். "மலைக்கோட்டை", "தோட்டா" போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களின் ஹீரோக்கள் விஷால், ஜீவன் ஆகியோருடன் இணைத்து ஏற்கனவே கிசுகிசு வெளியானது.

பின்னர் பிருதிவிராஜை காதலிப்பதாகவும் செய்தி அடிபட்டது. இதை பிரியாமணி மறுத்தார்.

தற்போது தெலுங்கு நடிகர் தருணை பிரியாமணி தீவிரமாக காதலிப்பதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் "நவ வசந்தம்" என்ற படத்தில் நடித்த போதே நெருக்கமானதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை மறைத்து வந்துள்ளனர். நீண்ட நாட்களாக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்தார்களாம். இப்போது அது வெளியே கசிந்துள்ளது. காதல் பரிசாக பிரியாமணிக்கு, தருண் புதிய சொகுசு கார் வாங்கி கொடுத்துள்ளார். காதல் விவகாரம் தருண் தாயார் ரோஜாரமணிக்கு தெரிய வந்திருப்பதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்ததும் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கிறார்கள்.

ஏற்கனவே நடிகை ஆர்த்தி அகர்வாலை காதலித்து தருண் கை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.

பெரிய நடிகர்களும், பெரிய தயாரிப்பு கம்பெனியினரும் ஸ்ரேயாவை ஒதுக்கினர். வடிவேலுவுடன் ஆடிய மாதிரி நிறைய இயக்குனர்கள் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட அழைத்தனர்.
இதனால் அதிர்ச்சியான ஸ்ரேயா இனிமேல் எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என முடிவு எடுத்தார். இந்த நிலையில் விஷால் ஜோடியாக "தோரணை" படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இப்படம் மூலம் இழந்த மார்க்கெட்டை மீட்க ஸ்ரேயா கங்கணம் கட்டினார். இதையடுத்து "தோரணை"யில் முந்தைய படங்களில் இல்லாத அளவு கூடுதல் கவர்ச்சி காட்டியுள்ளார். நம்பர் ஒன் நடிகையான நயன் தாராவே நீச்சல் உடைக்கு இறங்கி வந்து விட்டதால் இவரும் "தோரணை" படத்தில் பிகினிக்கு மாறியுள்ளார்.

இந்த காட்சி மிகவும் கிளு கிளுப்பாக படமாக்கப்பட்டு உள்ளது. அப்போது படக்குழுவினர் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்களாம். "தஷன்" இந்திப் படத்தில் கரீனாகபூர் உடுத்திய புது மாதிரியான நீச்சல் உடையை ஸ்ரேயா அணிந்து கவர்ச்சியில் கலக்கியுள்ளார்.

"தோரணை" ஓரிரு வாரத்தில் ரிலீசாவதையடுத்து ரகசியமாக வைத்த இந்த ஸ்டில்களை படக்கம் பெனியினர் இப்போது வெளியிட்டு உள்ளனர்.

ஏற்கனவே "யமதுங்கா" என்ற தெலுங்கு படத்தில் பிரியாமணி இதே நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "தோரணை"யில் பாடல் காட்சிகளிலும் ஸ்ரேயா கவர்ச்சியில் கலக்கியுள்ளார். விஷாலுடன் நெருக்கமாக தோன்றி சூடேற்றியுள்ளராம்.
ஐ .....எனக்கு இன்று பிறந்த நாள் ; ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறேன். பதிவு போட வந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது.
சரின்னு இந்த நாளில் என் பதிவுகளை படிக்கிற மக்களுக்கு எதாவது அடிவே பண்ணலாம்ன்னு ஆசைப்பட்டேன்.
ஆனால் என்ன செய்ய "as usual there are no words in my heart to persuade my feelings to you"....
வழக்கமா நான் இன்று ரொம்ப சந்தோஷமாய் இருந்திற்க்க வேண்டியது ; இரண்டு காரணங்களால் அப்படி இருக்க முடியல......
1. பழைய நினைவுகள்
2. இலங்கையில் இருந்து வரும் நியூஸ்
என்ன செய்ய என்னால் வருத்த பட தான் முடியும் ....



piragu நான் இன்று என்னது சிறு வயது போட்டோ ஒன்றை post பண்ணலாம் ன்னு ஆசைபட்டேன். நேத்து லேப்டாப் yai format பண்ணினேன் அதில் இருந்த பழைய புகைப்படம் எல்லாம் delete ஆகிருச்சு.
நான் இப்போ ஒரு சூர்யா கடவுள் கோவில் kitta இருக்கேன்.
view semaiya இருக்கு ....




இன்று காலை எழுந்து கோவிலுக்கு போக வேண்டும் என்று அம்மா சொல்லிடாங்க. சிறு வயது முதல் நான் எனக்காக என்றுமே கோவிலுக்கு போனது இல்லை. அம்மா தான் ரொம்ப வற்புறுத்தி அழைத்து போவாங்க.
அப்பரும் விவரம் தெரிந்த பிறகு நான் தனியாக கோவிலுக்கு செல்வேன். அங்கு கடவுள் இருக்கிறாரா ; இல்லை அவர் ஒன்றும் இல்லாதவரா என்று தெரியாமல் சுற்றிவிட்டு வருவேன்.



கோவில் என்றதுமே ...
எனக்கு ஸ்ரீரெங்கம் தான் நினைவுக்கு வருகிறது.
பெரிய கோவில் ....
நான் அங்கு கடவுள் இல்லவே இல்லை என்ற அழுத்தமான நம்பிக்கையில் நான் அங்கு அமர்ந்து இருப்பேன். பிறகு கருட பகவான் சிலை அருகே கண்களை முடி நின்று கொண்டு இருப்பேன்.
பிறகு மூலவரை பார்க்க போவேன்.
அது என்னமோ தெரியல. கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கும் ரெங்கநாதர் க்கும் ஒரு நல்ல நட்பு இருக்கு இன்று வரை.


ஸ்ரீரெங்கன் உலா ன்னு ஒரு novel. ரொம்ப அருமை இருக்கும். முகலாயர் படையெடுப்பு ஸ்ரீரெங்கத்தின் மீது நடந்த போது ரெங்கநாதர் எப்படி ஊர் சுற்றினார் ன்னு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. படிக்க நல்ல இருக்கும். எழுதினவர் யார்ன்னு தெரியல ; தெரிந்தால் யாரவது சொல்லுங்க.



படித்த பிறகு உங்களுக்கு ரெங்கநாதர் மேல ஒரு இது வருமுங்க.

இன்று அந்த ஸ்ரீரெங்கம் தந்த நிம்மதி என்னுள் இல்லை.
2007 தான் கடைசி. அதன் பிறகு வந்த இரண்டு பிறந்த நாளும் என் வாழ் நாளில் சிறப்பான நாளாக இல்லை ......
சரிங்க ரொம்ப டைப் பண்ணும் ன்னு தான் ஆசை.
ஆனா நெட்வொர்க் ரொம்ப low வாக இருக்கு ......
இப்போதைக்கு எஸ்கேப் ஆகுறேன் ......
டாட்டா.....



More than a Blog Aggregator

by கார்த்திகைப் பாண்டியன்
சம்பவம் 1: தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை. எங்கள் கல்லூரியில் இருந்து வெளியே வரும் மெயின் கேட்டின் அருகே சென்று கொண்டு இருந்தேன். அங்கே பிஹெச்டி முடித்த புரொபசர் ஒருவர் நின்று சக ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். என்னவென்று தெரிந்து கொள்ளலாமே என அருகில் சென்றேன். அடுத்த நாள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதைப் பற்றி ரொம்பத் தீவிரமாக பேசினார். ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆன ஒரு ஜாதிக்கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என எல்லோரையும் கேட்டுக்கொண்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சம்பவம் 2: கல்லூரியின் எதிரே இருக்கும் டீக்கடை. தேர்தலுக்கு மறுநாள். கடைக்கு பால் ஊற்ற வரும் பெரியவருக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். அவரிடம் டீ மாஸ்டர் கேட்கிறார்..

"என்ன பெரியவரே.. யாருக்கு ஓட்டு போட்டீங்க..?"

"எல்லாம் நம்ம ..................... தம்பி.."

"நீங்க ரொம்ப நாளா காங்கிரஸ் தான?"

"அட போப்பா.. இவ்வளவு நாளா நம்ம ஜாதிக்குன்னு ஒரு கட்சி இல்லாம இருந்தது.. கைக்கு போட்டேன்.. இப்போத்தான் நமக்குன்னு ஒரு கட்சி இருக்குல்ல.. என்னன்னாலும் நம்ம ஜாதிய விட்டுக் கொடுக்க முடியுமா..?
படித்தவர்கள் என்று பெரிதாக சொல்லிக் கொள்பவர்களுக்கும், படிக்காத பாமர மக்களுக்கும் என்ன வேற்றுமை உள்ளது? தங்களுடைய ஜாதி என்று வரும்போது எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்களே? ஜெயித்தால் நாட்டுக்கு என்ன நன்மை செய்வோம் என்பதைத் தாண்டி ஜாதிப்பாசத்துக்காக ஓட்டு போடும் நிலைமைதான் நம் நாட்டில் இன்னும் உள்ளது.எல்லாத்தையும் விடப் பெரிய கொடுமை, என்னுடைய மாணவர்களில் சிலரும் குறுஞ்செய்திகள் மூலம் இந்த கட்சிக்காக ஓட்டு சேகரித்ததுதான்.
எந்த ஒரு கட்சியானாலும் தொகுதிக்குள் இருக்கும் மக்களில் எந்த ஜாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனப் பார்த்துத்தான் வேட்பாளர்களை களம் இருக்குகிறார்கள். இங்கு மட்டும் அல்ல. எல்லா இடத்திலும் ஜாதிகள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. சமீபத்தில் நடந்தே சட்டக் கல்லூரி பிரச்சினை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அடிப்படைக் காரணம் - ஜாதி.இளைஞர்கள் இடையே இந்த ஜாதி உணர்வு பரவுவது மிகவும் ஆபத்தானது.
வேலை பார்க்கும் இடத்தில் இருந்து பள்ளிகள் தொடங்கி குடியிருக்கும் வீடுகள் வரை எல்லா இடத்திலும் கேட்கப்படும் முதல் கேள்வி.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?". அடுத்த தலைமுறையாவது ஜாதிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உண்டாக்கும் என நான் நம்பிக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா இல்லை "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்பது வெறும் பாடப் புத்தகங்களோடு போக வேண்டியதுதானா? விடை தெரியா கேள்வி..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

கருத்துகள் இல்லை: