செவ்வாய், 19 மே, 2009

2009-05-19



More than a Blog Aggregator

by கார்த்திகைப் பாண்டியன்
சம்பவம் 1: தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை. எங்கள் கல்லூரியில் இருந்து வெளியே வரும் மெயின் கேட்டின் அருகே சென்று கொண்டு இருந்தேன். அங்கே பிஹெச்டி முடித்த புரொபசர் ஒருவர் நின்று சக ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். என்னவென்று தெரிந்து கொள்ளலாமே என அருகில் சென்றேன். அடுத்த நாள் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதைப் பற்றி ரொம்பத் தீவிரமாக பேசினார். ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆன ஒரு ஜாதிக்கட்சிக்கு கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என எல்லோரையும் கேட்டுக்கொண்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சம்பவம் 2: கல்லூரியின் எதிரே இருக்கும் டீக்கடை. தேர்தலுக்கு மறுநாள். கடைக்கு பால் ஊற்ற வரும் பெரியவருக்கு எப்படியும் எழுபது வயது இருக்கும். அவரிடம் டீ மாஸ்டர் கேட்கிறார்..

"என்ன பெரியவரே.. யாருக்கு ஓட்டு போட்டீங்க..?"

"எல்லாம் நம்ம ..................... தம்பி.."

"நீங்க ரொம்ப நாளா காங்கிரஸ் தான?"

"அட போப்பா.. இவ்வளவு நாளா நம்ம ஜாதிக்குன்னு ஒரு கட்சி இல்லாம இருந்தது.. கைக்கு போட்டேன்.. இப்போத்தான் நமக்குன்னு ஒரு கட்சி இருக்குல்ல.. என்னன்னாலும் நம்ம ஜாதிய விட்டுக் கொடுக்க முடியுமா..?
படித்தவர்கள் என்று பெரிதாக சொல்லிக் கொள்பவர்களுக்கும், படிக்காத பாமர மக்களுக்கும் என்ன வேற்றுமை உள்ளது? தங்களுடைய ஜாதி என்று வரும்போது எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்களே? ஜெயித்தால் நாட்டுக்கு என்ன நன்மை செய்வோம் என்பதைத் தாண்டி ஜாதிப்பாசத்துக்காக ஓட்டு போடும் நிலைமைதான் நம் நாட்டில் இன்னும் உள்ளது.எல்லாத்தையும் விடப் பெரிய கொடுமை, என்னுடைய மாணவர்களில் சிலரும் குறுஞ்செய்திகள் மூலம் இந்த கட்சிக்காக ஓட்டு சேகரித்ததுதான்.
எந்த ஒரு கட்சியானாலும் தொகுதிக்குள் இருக்கும் மக்களில் எந்த ஜாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனப் பார்த்துத்தான் வேட்பாளர்களை களம் இருக்குகிறார்கள். இங்கு மட்டும் அல்ல. எல்லா இடத்திலும் ஜாதிகள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. சமீபத்தில் நடந்தே சட்டக் கல்லூரி பிரச்சினை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அடிப்படைக் காரணம் - ஜாதி.இளைஞர்கள் இடையே இந்த ஜாதி உணர்வு பரவுவது மிகவும் ஆபத்தானது.
வேலை பார்க்கும் இடத்தில் இருந்து பள்ளிகள் தொடங்கி குடியிருக்கும் வீடுகள் வரை எல்லா இடத்திலும் கேட்கப்படும் முதல் கேள்வி.."தம்பி.. நீங்க என்ன ஆளுங்க..?". அடுத்த தலைமுறையாவது ஜாதிகள் இல்லாத ஒரு சமுதாயத்தை உண்டாக்கும் என நான் நம்பிக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா இல்லை "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்பது வெறும் பாடப் புத்தகங்களோடு போக வேண்டியதுதானா? விடை தெரியா கேள்வி..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)


More than a Blog Aggregator

by கிருஷ்ணா
மே 18, 2009
கறுப்பு தினம்..
தமிழனின் உரிமையின்
இறப்பு தினம்..!

ஒற்றுமை பலத்தை
உணராத இனத்தின்
வெற்று தினம்..

முப்பத்தேழு ஆண்டுகள்
முன்னேறிய பாதையை
மூழ்க வைத்த
முதல் தினம்..

கல்லடி பட்ட
காக்கைகள் போல்
எங்கு நோக்கினும்
குண்டடி பட்ட
யாக்கைகள்!

கறுப்பு நிறமென்பதால்..
தமிழனின்
உணர்ச்சிகள் கூட
கறுமையாக்கப் பட்டுவிட்டது..!

விழி தமிழா..!

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!

ஈழச் சோதரர்கள்
ஈமச் சடங்குகள்
நம் இனத்தின்
பிரிவினைக்கு
கொள்ளி வைக்கட்டும்..!

ஈழத் தமிழனின்
கதறல்..
'தமிழன்' காதுகளில் கூட
கேட்கவில்லையாம்..!

தமிழா..

இனியாவது..
காதுகளோடு
கண்களையும்
திறந்து வை...

உணர்ச்சிவயப் படுவதை
மட்டும்
உணர்ச்சியோடு செய்யாதே..

உண்மைகளை புரிந்துகொள்..
உரிமைகளை புரிந்துகொள்..

ஒற்றுமை இழந்து நின்றால்
உள்ளாடைகள் கூட
களவு போய்விடும்..

இனியாவது..
ஒற்றுமை பலத்தை
உணர்ந்து கொள்..!
  • K.கிருஷ்ணமூர்த்தி

அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

 

இதுவோ தமிழினம் மீதான இனவொடுக்குமுறையின் ஒரு அங்கமாகவே அரங்கேறியுள்ளது. தமிழினத்தின் மேலான பேரினவாதத்தின் வெற்றியாகவே, இதை அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பேரினவாதத்தின் முன்னால் இது வெறும் புலிகளின் மரணம் மட்டுமல்ல, தமிழ் இனத்தின் மரணமுமாகும்.

 

இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தி......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்



More than a Blog Aggregator

by வடகரை வேலன்


More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்


More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்


Early Morning in Dubai Traffic

கருத்துகள் இல்லை: