செவ்வாய், 19 மே, 2009

2009-05-19



More than a Blog Aggregator

by கவிதா | Kavitha
என்னை சுற்றி உள்ள நண்பர்கள் அனைவரும் எனக்கு ஒரு வரப்பிரசாதம். விலகி விலகி தவிர்த்து விட்டு போகும் என் இயல்பை பொருட்படுத்தாமல் என் மேல் அன்பு செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி எத்தனை பேருக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு நாள் இரு நாள் இல்லை வருடங்களாக, அவர்களின் அக்கறையும், அன்பும் என்னை வியப்படையத்தான் செய்கிறது, அப்படி இருப்பவர்களிடம் கூட இன்னமும் நான் தொடர்ந்து அவர்கள் சொல்லுவதை கேட்டு, நல்ல முறையில் நடந்துக்கொள்வதில்லை என்பது வருத்தமாக த்தான் இருக்கிறது. என்ன செய்வது, யாரிடமும் ஒட்டாத தள்ளி தள்ளி போகும் என் இயல்பை என்னால் பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள முடியவில்லை.இந்த நண்பர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.

இப்படி வருடங்களாக என் மீது அன்பும், அக்கறையும் உள்ள ஒரு நண்பர் செயகுமார். அவரின் பெயரை குறிப்பிட்டு எழுதுவதை அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை, ஆனால் குறிப்பிட விரும்புகிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறார், பின்னூட்டம் இடுவதில்லை. ஏனென்று எனக்கு தெரியவில்லை, நானும் கேட்கவில்லை. எனக்கு தேவையான மாரல் சப்போர்ட்'ஐ எப்போதும் நான் கேட்காமலேயே ஈமெயிலில் அனுப்பிக்கொண்டே இருப்பவர், நான் அவற்றை படிக்கிறேனா இல்லையா என்று கூட அவருக்கு தெரியாது. இவை எல்லாம் பலனை எதிர்பார்க்காத அன்பு. [சிங்கு……இப்ப சொல்லிக்கிறேன்... நீங்க அனுப்புகிற எல்லா ஈமெயிலையும் படிச்சிடுவேன் :)]

தொடர்ந்து முதல் ஆளாக என் பதிவுகளை படிப்பது இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் என் பாடல் பதிவுகளையும் பார்த்து பாடல்களையும் கேட்டு, எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். "செய்கின்ற வேலையை சரியாக செய்ய வேண்டும், குரல் நன்றாக இருக்கிறது, நல்ல பாடல்களை நன்றாக பயின்று பாடலாமே ஏன் ஏனோ தானோ என்று பதிவிடுகிறீர்கள்? " என்று சொல்லி, அலைபாயுதே படத்தில் வந்த இந்த பாடலையும் (ஆடியோ), மற்றும் பாடல் வரிகளையும் ஈமெயிலில் அனுப்பி இருந்தார்.

ஆனால் அந்த ஈமெயில் கத்திமுனையில் மிரட்டி அனுப்பப்பட்டிருந்தது. ஒழுங்காக, நன்று பயின்று , தரமாக, சரியாக ரிக்கார்ட் செய்து பதிவிட விருப்பமிருந்தால் மட்டுமே இந்த பாடலை நீங்கள் பாடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார், எனோ தானோ என்று பாடி நல்ல பாடலை கெடுத்து விடாதீர்கள் என்றும் சொல்லி இருந்தார்.

முதல் முறை கேட்டவுடனேயே அவருக்கு நான் அனுப்பிய பதில், ரொம்ப கஷ்டம் பாஸ், நிறைய பிராக்டீஸ் செய்யனும், ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்கள் சரி என்றால் பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். ரிக்கார்ட் செய்து அவருக்கு அனுப்பி, "அவர் தயவுசெய்து பதிவிடாதீர்கள்," என்று சொன்ன பிறகு வேண்டுமென்றே பதிவிடுகிறேன்.. சிங்கு எஸ்கியூஸூமீ…. இதை பதிவிட்டே ஆகனும்னு முடிவு செய்துட்டேன்.. :) (எப்பவும் போலவே சொன்ன பேச்சு கேட்கற பழக்கம் இல்லல..)

இதோ பாடல்…

குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
படம்: அலைபாயுதே
இசை: ஏ. ஆர். ரஹ்மான்


evno3.mp3


அணில் குட்டி அனிதா : சிங்கண்ணே உங்களுக்கு இது அவசியமா??? அம்மணி பாட்டுப்பாடி கொல்றது தாங்காம எத்தனையோ பேரு எழுதறதை விட்டுட்டு ஓடிட்டாங்க.. ..ம்ம் எனக்கேன்ன வரவங்க எல்லாம் உங்களைத்தான் கும்ம போறாங்க... வாங்கிக்கோங்க..

பீட்டர் தாத்ஸ் :"Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.
????!

விடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்
ஆய்வு குறித்த முன்னோட்டம்


இந்திய விடுதலைக்கு முன் தமிழ் நாவல் உலகில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நாவலாசிரியைகள் நாவல்களைப் படைத்துள்ளனர்.அவர்கள் பற்றிய ஆய்வு விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் என்ற தலைப்பில் என்னால் முனைவர் பட்டத்தி்ற்காகச் செய்யப்பட்டது

விடுதைலக்கு முந்தைய நாவலாசிரியைகள்

இராஜலட்சுமி அம்மாள்,
குமுதினி,
கோதைநாயகி அம்மாள்
வி, சரஸ்வதி அம்மாள்,
சித்தி ஜுனைதா பேகம்,
சாரநாயகி அம்மாள்,
பாலாம்பாள்,
மலைமகள்,
மீனாட்சி சுந்தரம் அம்மாள் ,
ராமாமிர்தத்தம்மாள்,
விசாலாட்சி அம்மாள்,
வேங்கடலட்சுமி,
ஸரோஜா ராமமூர்த்தி,
ஜெயலட்சுமி சீனிவாசன்,

இந்திய விடுதலைக்குப் பின் கல்வி கற்ற பெண்களின் நாவல் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன.எனவே தமிழ் நாவல் உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.இக்காலத்தை பெண்ணிய காலம் எனலாம்.

இக்காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் நாற்பது பேருக்கு மேல் அமையலாம்.


அம்பை,
அமுதாகணேசன்,
அரசுமணிமேகலை,
அனுராதா ரமணன்,
அனுத்தமா,
ஆனந்தி,
இந்துமதி,
உமா சந்திரன்,
கார்த்திகா ராஜ்குமார்,
காவேரி,
குமுதினி,
கோமகள்,
சரளா ராஜகோபாலன்,
சல்மா,
சித்திஜுனைதா பேகம்,
சிவகாமி,
சூடாமணி,
திலகவதி,
பாமா,
ரமணிச்சந்திரன்,
ராஜம் கிருஷ்ணன்,
லஷ்மி,
லஷமி சுப்பிரமணியன்,
லீலா கிருஷ்ணன்,
வாசந்தி,
வித்யா சுப்பிரமணியன்,
ஜெயந்தி சங்கர்,
ஜோதிர்லதா கிரிஜா,

இவர்களின் ஏறக்குறைய 300 நாவல்கள் ஆய்வுக்குரிய களம் ஆகும்,


'நாடோடிகள்' படம் உருவான விதத்தையே ஒரு படம் போல் விவரித்தார் சமுத்திரக்கனி. எல்லா இயக்குனர்கள் போலவே இந்த கதை நிறைய ஹீரோக்களிடம் சொல்லப்பட்டு, பின்பு தள்ளப்பட்டதையும் வருத்தத்தோடு விவரித்தவர், நண்பரின் நண்பரே தயாரிப்பாளராக வந்த கதையையும் சொன்னார் சுவாரஸ்யத்தோடு.

இவரது சுவாரஸ்யமான பேச்சில், சென்ட்டிமென்ட்டான பகுதி என்றால் அபிநயாதான்! கேரளாவில் ஹீரோயினுக்காக அலைந்த போது, மீடியேட்டர் ஒருவரால் அழைத்து வரப்பட்டவர் அபிநயா. அத்தனை அழகையும் அள்ளிக் கொடுத்த ஆண்டவன், அவருக்கு காது கேட்கும் சக்தியையோ, பேச்சு திறனையோ கொடுக்கவில்லை. படத்தில் வரும் தங்கச்சி கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தாலும், எதற்கும் இருக்கட்டும் என்று இன்னொருவரையும் தேர்வு செய்தார் சமுத்திரக்கனி.

ஆனால் அந்த நடிகை, 'டைரக்டருக்கு இங்கிலீஷ் தெரியலே, எனக்கு தமிழ் தெரியலே. எப்படி கதை கேட்டு, எப்படி நடிக்க முடியும்' என்று தடுமாறினாராம். விஷயம் தனது காதுக்கு வந்ததும் கடுப்பான சமுத்திரக்கனி, 'என்னால எப்படி கம்யூனிகேட் பண்ண முடியும்னுதானே கேட்டார்? காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத பெண்ணிடமே கம்யூனிகேட் பண்ணி நடிக்க வைக்கிறேன் பார்'னு சவால் விடாத குறையாக களத்தில் இறங்கினார். அபிநயாவை நடிக்க வைச்சு, அவருக்கு பொருத்தமான ஒரு குரலை வைத்து டப்பிங்கும் கொடுத்தார்.

'படத்தை பார்த்ததும் ஒரு நிம்மதி வந்துச்சு. அபிநயாவை ஊனமா படைச்ச அந்த கடவுளையே நான் ஜெயிச்சுட்டேன்கிற உணர்வு வந்திச்சு' என்றார் சமுத்திரக்கனி.

கலைஞன் நினைத்தால் கடவுளை ஜெயிப்பதென்ன, அவனையே உருவாக்க முடியும்

'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தை தந்து தமிழ்நாட்டையே மகிழ்ச்சி கடலில் தள்ளிய மூர்த்தியின் அடுத்த படம் வெடிகுண்டு முருகேசன். இதுவும் காமெடி, சென்ட்டிமென்ட் கலந்த கற்கண்டு பொங்கல்தானாம்.

'கிராமத்திலே என்னோட வீடு சினிமா தியேட்டருக்கு எதிர்லே இருக்கு. வீட்டு திண்ணையில உட்கார்ந்தா வசனத்தை காதிலே கேட்கலாம். எந்த மாதிரி படத்துக்கு எந்த மாதிரி ரசிகர்கள் வர்றாங்கன்னு தெளிவா புரிஞ்சவன் நான். கரகாட்டக்காரன் படத்துக்கும், சின்ன தம்பி படத்திற்கும் காலையிலே எட்டு மணிக்கே வண்டி கட்டிட்டு வந்து காத்துக் கிடப்பாங்க. நான் சென்னைக்கு வந்தப்பவே, படம் எடுத்தா இப்படி ஒரு படத்தைதான் எடுக்கணும்னு நினைச்சேன்'

'வெடிகுண்டு முருகேசன் படத்தோட ஸ்கிரீன் பிளே அப்படியே கரகாட்டக்காரன் ஸ்டைலில் இருக்கும். ஒரு காமெடி, ஒரு சென்ட்டிமென்ட், ஒரு காதல் காட்சின்னு செயின் கோர்த்தா மாதிரி வரிசையா இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஃபார்முலா எப்பவுமே தோற்றதில்லே' என்றார். போலீஸ் யூனிபாஃர்ம் போட்டுக் கொண்டு ஜோதிர்மயி பசுபதியோட ஆடுற காட்சிகள் போலீசை சங்கடப்படுத்துற மாதிரி இருக்கேன்னு கேட்டா, 'கவுத்துப்புடாதீங்க சாரு'ன்னு பதறினார் மூர்த்தி. 'இது ஒரு ட்ரீம் சாங். அவ்வளவுதான். அதை போய் இவ்வளவு தூரம் யோசிச்சு குழப்பிக்க வேண்டியதில்லே' என்றார்.

வழக்கம்போல உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாரு, ஏன்? போன்ற தர்ம சங்கட கேள்விகளுக்கு சிரிச்சே மழுப்பினாரு பசுபதி. மரத்தை சுத்தி டூயட் பாடுற மாதிரி கதைகளில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு அதே மாதிரி ஒரு பாடலில் வர்றீங்களேங்கிற அடுத்த கேள்விக்கு பசுபதி சொன்ன பதில், 'நான் மாட்டேன்னுதான் சொன்னேன். மூர்த்திதான் விடாம பேசி என் கொள்கைக்கு குண்டு வச்சிட்டாரு' என்றார்.

ஓஹோ, அதான் 'வெடிகுண்டு' முருகேசனா?


More than a Blog Aggregator

by Jaffer
ங்குச்சந்தையில் இதுவரை ஒரு பெரிய Gap up அல்லது Gap down பார்த்து வந்திருக்கின்றோம். ஆனால் நேற்று ஏற்பட்ட இருமுறை Upper Circuits சந்தையின் பார்வையாளர்களை மிகவும் திகைக்க வைத்திருக்கும்.

நேற்று ஏற்பட்ட உயர்வுகள் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்க்காக மட்டும் அல்லாமல் கம்யூனிஸ்ட்டுக்களின் தொந்தரவு இல்லாமல் ஆளுங்கட்சி ஆட்சியமைக்க முடியும் என்ற காரணமும்தான். போன ஆட்சியில் கம்யூனிஸ்டுக்களின் தொல்லைகள் எந்த அளவிற்கு தொழில்துறையையும், தொழில் அதிபர்களையும் பாதித்திருக்கும்.

நேற்று நம் சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுகளை காலையிலிருந்து மிதமாக துவங்கியிருந்த ஆசிய சந்தைகளை எல்லாம் உயர வைத்துவிட்டது. நேற்றைய நம் சந்தையின் உயர்வால் அமெரிக்க சந்தையே உயரத்தில்தான் முடிவடைந்திருந்தது.

இப்போதுள்ள சூழ்நிலையில் டெக்னிக்கல் பெருமளவு வேலை செய்யாது. ஆகவே தற்போதைய சந்தைகளின் சூழலில் சந்தைகளோடு சேர்ந்து நாமும் கொண்டாடலாம். ஏற்கனவே Long positionலில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிதான்.
.

கருத்துகள் இல்லை: