பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தாலும் இன்னும் முழுமையக்த ஒரு தகவலை கூறாததாலும் நான் எந்த ஒரு அறிக்கையும் விடுவதாக இல்லை என்று தமிழகத முதல்வர் கருணாநிதி கூறினார்.
மிகச்சிறந்த இந்தியக் கிரிக்கெட் கேப்டன் யாருய்யா? என்றால் ஏகப்பட்ட பெயர்கள் நினைவில் வந்து போகும்... மன்சூர் அலிகான் நவாப் ஆஃப் பட்டோடியில் தொடங்கி...
என்றாலும் நிறைய போட்டிகளில் ஜெயிக்கத்தொடங்கியது அஸாரின் காலத்தில் தான்.. ஆனாலும் அவர் சிறந்த கேப்டனா என்று கேட்டால், ஒரு விக்கெட் விழுந்து, அணியில் எல்லோரும் விக்கெட் எடுத்த பவுலரை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு இவர் தோள்பட்டையை சாய்த்துக் கொண்டு மெதுவாக நடந்து வருவதற்குள் அடுத்த பேட்ஸ்மேன் வந்து இரண்டு ரன்களும் எடுத்து விடுவார்... தோற்கும் நிலையில் அணி இருந்தால் தோள்ப்பட்டை தொங்கல் இன்னும் இறங்கி விடும். முகத்தின் கவலை முதுகில் தெரியும்.
கங்குலி.. புலி..சிங்கம் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியவர். எதிரணி கத்தினால் பதிலுக்கு கத்துவார். தோற்பது போல் இருந்தால் நகங்கள் கடிபடும்.. விட்டால் செகெண்ட்ஸ்லிப்பில் நிற்பவரின் நகத்தையும் கடித்துத் துப்பி விடும் அளவு உணச்சி வசப்படுபவர்.தோற்றாலும் அக்கப் போரு,ஜெயித்தாலும் அக்கப்போரு.(பனியன் க(சு)ழற்றல்!)
தோனியை ஏன் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்று யோசித்தால்.. முதல் மற்றும் முக்கிய காரணம், எல்லா நேரத்திலும் ஒரே முக பாவம். அமைதியாக அதே சமயம் துரிதமாக. தோனி என்றால் ஞாபகத்திற்கு வரும் மற்றொரு வார்த்தை 'கூல்'. இந்த மனோபாவம் தலைமைக்கு மிக முக்கியமானதாக கருதப் படுகிறது.
மனதிற்குள் என்ன வேண்டுமானாலும் எண்ணஓட்டங்கள் இருக்கலாம்.ஆனால் முகத்தில் எந்தவித பதட்டத்தையே(பயத்தையோ) அல்லது களிப்பையோ காட்டிவிட்டால் அடுத்தடுத்த கட்டங்கள் தாண்டுவது சற்று கடினமே.. கபில்தேவ் முதல் கங்குலி வரை இது பொறுந்தும்.. தோனி,இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த உயரம் தொட முக்கிய காரணமாய் கருதப்படுவது அவரது இந்த, வெற்றி தோல்வி எதுவாயினும் சமமாக எதிர் கொள்ளும் அப்ரோச்தான்.
கம்பனின் விசேஷம் இதுதான். ராமனின் தலைமைப் பண்பை பற்றி எங்கெல்லாம் சான்ஸ் கிடைத்ததோ அங்கெல்லாம் கூறி இருப்பார் குறிப்பால்.
இதோ இந்தக் காட்சி...
பாடலுக்கு விளக்கம்:
ராமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவித்த போது, ராமனின் முகம் எப்படி இருந்தது என்றும், அதே ராமனிடத்தில் கைகேயி, இந்த நாட்டையும்,செல்வத்தையும் விடுத்து காட்டுக்குப் போகவேண்டும் என்று கூறிய பொழுதும், அவனின் முகம் ஒரே பாவனையில், சிரித்தபடி,அதுவும் சித்திரத்தில் மலர்ந்து சிரிக்கும் செந்தாமரை போல இருந்தது.. அதாவது சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளப்போகும் களிப்பு மனதில் இருந்தாலும், நாடு துறக்கப் போகும் துயரம் மனதை அறித்தாலும், உணச்சிவயப்படல் இல்லாமல் இருந்தது ராமனின் முகம்.. ஏனெனில் கம்பனைப் பொருத்தவரை ராமன் ஒரு மிகச்சிறந்த தலைவன்.
கம்பனின் வார்த்தை விளையாட்டு அல்லது நுணுக்கம்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய வார்த்தை " சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருந்த முகத்தினை"... என்ற உவமை.
செந்தாமரை மலர் போல என்று சொன்னால், ஒரு மலரின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஆறுமணிநேரம். சித்திரத்தில்,அதாவது படமாக வரைந்த மலருக்கு எத்தனை வருடங்கள்?
அதுவுமல்லாமல், ஒரு சிறந்த ஓவியனின் தூரிகை சும்மா இருக்காது. வரைந்து முடித்தவுடன் மீண்டும் சில பல கோடுகளால் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டே இருப்பர். ஆக, ஒரிஜினல் தாமரை மலரை விட, படமாக வரையப்பட்ட தாமரை மலரின் அழகும் அதிகம், ஆய்ட்காலமும் மிக அதிகம்.
அதனால்தான் சித்திரத்தை ஒத்த என்ற வார்த்தை.. வெறும் 'த்'ன்னா எதுகைக்காக மட்டும் அல்ல என்பது புரிகிறதா?
அந்தப் பாடல்:
'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்,
'இந் திருத் துறந்து ஏகு' என்ற போதினும்,
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.
(மெய்யான/நிலையான சக்கரவர்த்திபதவியை ஏற்றுக்கொள் என்ற போதினும், இந்த திரு(செல்வங்களை) துறந்து காட்டிற்குப் போ என்றபோதினும்..)
..

'மியாவ் மியாவ் பூனை, இது மீசை வச்ச பூனை'ன்னு முதல்ல பாட்டு எழுதியிருந்தாராம் விவேகா. 'கந்தசாமி' படத்தின் எல்லா பாடல்களும் இவர்தான் எழுதியிருக்கிறார். விக்ரமுக்கு படத்திலே மீசையே இல்லையேன்னு சுசி கணேசன் சொன்னதால, வரிகளை இப்படி மாற்றினாராம். 'மியாவ் மியாவ் பூனை, இது மீசையில்லா பூனை!'
அடுத்த வரிதான் அட்றா சக்கை. 'திருடி திங்க பாக்குதடா திம்சு கட்ட மீனை!' விவேகா எழுதியிருக்கும் திம்சு கட்ட மீனு, ஸ்ரேயாவேதான். வேணும் வேணாங்கிற அளவுக்கு கவர்ச்சி காட்டியிருக்கார் ஸ்ரேயா. ஆடியோ ரிலீஸ் விழாவிலே ஒரு ஆட்டம் போட்டவர், அதுக்கு தனி 'பில்' போட்டார் என்பது ரகசியம்.
ஆடி முடிச்சுட்டு கீழே வந்த ஸ்ரே, விக்ரமுக்கு பக்கத்திலே இடம் தேடினார். அந்தோ பரிதாபம் பின் சீட்டுதான் கிடைச்சுது. எப்படியோ நாற்காலியை முன்னுக்கு தள்ளி விக்ரம் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் வசதியாக. இவரையும் விக்ரமையும் சேர்த்து வச்சு, மேடை தொகுப்பாரளரும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் அடித்த காமெடிகளுக்கு அலட்டிக் கொள்ளவே இல்லை விக்ரம், ஸ்ரேயா ஜோடி.
ஆடுவதற்காகவே இத்தாலியிலிருந்து ஸ்பெஷல் அழகிகள் வந்திருந்தாங்க. ஆட்டம் முடிஞ்சு நிகழ்ச்சியை ரசிக்க விரும்பிய அத்தனை பேருக்கும் ஒரு சீட் கூட கிடைக்கலே. அங்கங்கே கிடைச்ச இடத்திலே தொங்கிக்கிட்டே அவங்க வேடிக்கை பார்த்தது ஒரு சர்க்கஸ் போலிருந்தது. 'இப்போ முப்பது கிராமத்தை தத்தெடுத்திருக்கிறோம். இப்படத்தின் வெள்ளி விழாவில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தொடலாம்' என்றார் டைரக்டர் சுசி கணேசன்.
அதுக்காகவாவது ஜெயிக்கணும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக