செவ்வாய், 19 மே, 2009

2009-05-19



More than a Blog Aggregator

by மயில்

ஒரு மனிதனுக்கு ரொம்ப அவசியம் வீடு. வீடு என்பது ஒரு செங்கல் கட்டிடம் அல்ல. அது நம் உணர்வோட பின்னியது. சந்தோசம் வந்தால் வாய் விட்டு சிரிக்கவும், கதவை சாத்தி ஒரு ஆட்டம் போடவும், தலையணையில் முகம் புதைத்து அழவும், ஒரு இடம் வேண்டும்தானே. அப்படி ஒரு வீட்டில் வாழ் நாள் முழுதும் இருக்க முடியுமா?

எனக்கு வீடு என்பது நான் கல்லூரி முதல் வருடம் வரை இருந்த வீடுதான். பழையகால வீடு, மெயின் ரோட்டுக்கு ஒரு முனூறு அடிதொலைவில் இருக்கும். நீளமான காம்பவுண்டு கொண்ட லைன் வீடு, அதில் மொத்தம் ஐந்து போர்சன், எல்லாவற்றிலும் நாங்கள், பெரியம்மா, அப்பிச்சி, பெரிய மாமா, சின்ன மாமா இருந்தோம். வீடு நிறைய மனிதர்கள் எல்லா குணநலன்களுடன் இருப்பார்கள்.

சில பல காரணங்களுக்காக அந்த வீட்டைவிட்டு வந்த போது நான் அழுத அழுகை, இப்போ நினைத்தாலும் அழுவேன். அது வீடல்ல என் சிநேகிதி, நான் பிறந்ததும் அங்கேதான், என் பால்ய சிநேகிதி என்னுடன் அந்த வீட்டில் குடியிருந்தால், வீட்டைப்போலவே அவளும் என்னை விட்டு பிரிந்து போய்விட்டாள். (உலகத்தை விட்டே) முதல் நாள் ஸ்கூல் நினைவுகளும் கஷ்டப்பட்டு 'அ' போட்டதும் அந்த வீட்டு திண்ணையில் தான். பெரிய திண்ணை இரு தூண்களுடன் இருக்கும். நான் ரொம்ப சேட்டை பண்ணுவேன், சின்ன வயதில் என்னை அந்த தூணில் கட்டி போட்டு விடுவார்களாம். எங்கள் வீடு வாசலில் ஒரு பூவரச மரம் இருக்கும், அதில் ஆடி பண்டிகையின் போது ஊஞ்சல் விளையாட ஒரு போராட்டமே நடக்கும்.

நெறைய நாள் ஸ்கூல் விட்டு வரும் போது யாராவது ஒரு சின்ன குழந்தை பிறந்திருக்கும், இரண்டு தம்பி, ஒரு தங்கை, மாமாக்கு இரண்டு குழந்தைகள், சித்திக்கு இரண்டு, பெரிய மாமாக்கு இரண்டு என்று வீடு முழுதும் குழந்தைகள். தினம் ஒரு சின்ன நர்சரி ஸ்கூல் போல இருக்கும், என் அப்பிச்சியின் சாயங்கால கதைகள் இன்னமும் என் குழந்தைகளுக்கு சொல்லுகிறேன்.

பண்டிகைகள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். தீபாவளி நாளன்னைக்கு முதல் நாள் இரவு பட்டாசு பகிர்ந்து அளிக்கப்படும், அன்னைக்கு தலையனை அதுதான். மிக விமர்சையாக கொண்டாடப்படுவது ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசைகள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்த வீட்டை விட்டு வெளியேறும போது என் உடலின் ஒரு பாகத்தை இழந்தது போன்று இருந்தது. என் வாழ்கையின் முக்கிய லட்சியம் அந்த வீட்டை மீண்டும் என் வசம் கொண்டு வருவதுதான். அந்த வீதியின் அடையாளங்கள் மாறினாலும் என் வீட்டின் அடையாளம் மாறவில்லை. இப்போதும் நான் அந்த வழியாக போய் பார்த்து விட்டுத்தான் வேறு வேலையே செய்வேன். அந்த வீட்டை வாங்க எல்லா வழியிலும் முயற்சி பண்ணுகிறேன். 50% வேலை முடித்துவிட்டேன், எப்படியும் என்ன ஆனாலும் வாங்குவேன். அதை அப்படியே மாற்றாமல் பராமரிக்க வேண்டும். என் அம்மாவும் அந்த வீடும் ஒன்றுதான்.

ஒரு வீட்டுக்கே இப்படி இருக்கே, ஒரு நாட்டை விட்டு வருபவர்கள் மனநிலை ......


More than a Blog Aggregator

by வால்பையன்
டியர் சார்!

சமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன்! ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை! ஆனாலும் சமீபத்தில் "குருதிகனல்" என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது! தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, நான் அந்த விமர்சனம் எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை. பாபாபுத்திரன் சொல்வது தான் சரி என்று பல்டி அடித்தது எந்த வகையில் சேரும்!, மேலும் பல விமர்சனங்களை பார்க்கும் போது எப்படி இன்னும் உங்களை விட்டு வச்சிருக்கானுங்கன்னு தோணும், எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க

இந்த கடிதம் எழுதக்கூட எனக்கு பயம் தான்! உங்களை விமர்சித்தால் சோட்டாணிகரை அம்மணிடம் சொல்லி செய்வினை செய்வதாக ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள், மேலும் நீங்கள் அதிகம் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். மழைக்கு கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கவில்லை என்று போன கட்டுரையில் தான் எழுதியிருந்தீர்கள். அதனால் நான் சமாதானமாக போய் விடுகிறேன்! என்னையும் உங்கள் கொள்ளை ஸாரி இலக்கிய கூட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்

கம்மாகரை கண்ணன்
செவ்வாய்கிரகம்

**************************************

டியர் கண்ணன்

உங்களது கடிதம் பார்த்து சிரிப்பு தான் வந்தது! பாபாபுத்திரன் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை! குருதிகனல் படத்தை பொறுத்தவ்ரை தீவிரவாதம் தேவையற்றது என்பது தான் எனது முந்தைய கருத்தாக இருந்தது. பாபாபுத்திரன் சொன்ன பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன், அது அதிகாரமையத்திற்கு எதிரான விளிம்புநிலை மனிதர்களின் போராட்டம் என்று!
பதிமூனரை தடவை பார்த்தும் எனக்கு தெரியாதது பாபாபுத்திரன் சொல்லி தான் தெரிந்தது!
அந்த பதிமூனரை தடவையும் கொஞ்சம் "தெளிவாக" பார்த்திருக்க வேண்டுமென இப்போது உணர்கிறேன்!

என்னை பத்திரமாக இருக்க சொல்லியிருக்கிறீர்கள்! உங்கள் அன்புக்கு நன்றி, மிஸ்டர் கம்மாகரை கண்ணன், இந்த உலகில் நாம் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் நான் சிலபேரை விமர்சிப்பதில்லை. அவர்களை கீழே வகைப்படுத்துகிறேன்

1.சரக்கு வாங்கி தருபவர்.

2.ஃபாரின் சரக்கு வாங்கி தருபவர்.

3.செலவுக்கு பணம் அனுப்புபவர்.

4.அக்கவுண்டில் பணம் போடுபவர்

5.எப்போ கேட்டாலும் பணம் தருபவர்.

ஒருமுறை இவர்களையே விமர்சித்து, அவர்கள் சட்டையை பிடித்து பணம் கேட்டது தனிக்கதை. அதை இன்னோரு நாள் சொல்கிறேன்.

இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிறு விசயம். போன வாரம் ஜட்டி வாங்க காசு வைத்திருந்ததேன். சனிக்கிழமை ஒயின்ஷாப் முழுநாள் அடைப்பு என்பதால் ப்லாக்கில். வாங்கி பணம் செலவாகிவிட்டது! யாராவது அன்பர்கள் பணம் அனுப்பினால் உங்கள் புண்ணியத்தில் புது ஜட்டி போட்டு திரிவேன்.

அக்கவுண்ட் விபரம்

Name:வாலழகன்

Bank:IC UC VC Bank. டண்டணக்காபட்டி கிளை

A/C No:123456789
(இந்த ஒரு நம்பர் தான் இருக்கான்னு கேக்காத மூதேவி, அதான் ஒம்போது நம்பர் இருக்குல்ல)

எங்கள் கூட்டத்தில் இணைய உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அதை சொன்ன சிலேடையையும் ரசிக்கிறேன்! நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல! IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை! மேலும் இதற்கு முன் வேலைக்கு சென்ற இடங்களில் முதலாளிகள் என் சொல் பேச்சு கேட்டு நடக்காததால் இனிமேல் வேலைக்கே செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். அதனால் என் கூட்டத்தில் சேருமாசையை இத்துடன் விடுங்கள்!

சனிக்கிழமை மாலை பீச்சுபக்கம் போனால் உங்களுக்கு நல்ல கூட்டம் கிடைக்கும் அங்கேயே ஐக்கியமாகி "கொல்லுங்கள்"


10.15 PM
19.05.09
சிலுக்குவரமாட்டா பட்டி
கடற்புலிகளின் தளபதி சூசையின் உடலம் இனம்காணப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடற்புலிகளின் தளபதி சூசையின் உடலம் இனம்காணப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: