சனி, 23 மே, 2009

2009-05-23

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தீர்மானத்தை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசின் புதிய காய் நகர்த்தல் : வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றங்களைப் புரிந்திருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு மேற்குலக நாடுகள் தயாராகிவரும் நிலையில் அதனை முறியடிப்பதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு ஆதரவான நாடுகளுடன் இணைந்து புதிய காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளுடனான போரில் தாம் வெற்றி பெற்றிருப்பதாகவும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பகுதிகளையும் விடுவித்து புலிகளின் முக்கிய தலைவர்களையும் அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.
மலேசியா பத்துமலையில் ஈழத்தமிழர் உரிமை காக்க நாளை (24/05/09) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கது என தென்னாபிரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் எப்ராயிம் தெரிவித்துள்ளார்.    இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற நெருக்கடி நிலைக்குக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.    இலங்கையின் இராணுவத்தின் நடத்தைகள் தொடர்பாக ஜெனிவா உடன்படிக்கைக்கு அமைய சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிரான வன்முறைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, உடனடியான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் தென்னாபிரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.    பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மனிதாபிமான [...]

கருத்துகள் இல்லை: