சனி, 23 மே, 2009

2009-05-23





தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப் பட்டதும், தமிழகமே துயரத்தில் ஆழ்ந்து, ஏதாவதொரு மூலையில் இருந்து அவர் இறக்கவில்லை என்ற நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தோடு, அலைந்து கொண்டிருந்தனர்.


இந்த ஏக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் சில பத்திரிக்கைகள் இதிலும் லாபம் சம்பாதிப்பது எப்படி என்று அட்டைப் படத்தில், பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசிங்கத்துடன் எடுத்திருந்த புகைப்படத்தை இப்போது எடுத்தது போல் அட்டைப் படத்தில் போட்டு கொள்ளை லாபம் பார்த்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இத்தகைய மலிவான உத்திகளை கையாளும் பத்திரிக்கைகளை புறக்கணிப்பது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமை.


இலங்கை அரசு கையாண்ட உத்திகளை நாமும் கையாள முடியும் என்பதற்கான உதாரணம் இதோ


வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரத்தினம் வியாழக்கிழமை காலை விசாரணைக்காக போலீசார் கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். வன்னியில் போர் நடை பெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்த இவர் வன்னியிலிருந்து கடந்த வாரம் வவுனியா சென்றிருந்தார். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து செட்டிகுளம் நலன்புரி முகாமிலேயே தங்கியுள்ளனர். TNC

கருத்துகள் இல்லை: