சனி, 23 மே, 2009

2009-05-23

ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா மெனிக்பாம் முகாம்களுக்குச் சென்று வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டார்.

இடம்பெயர்ந்தவர்களின் நலன் கருதி உலர் உணவுப் பொதிகள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகள் என்பவற்றை அவர் அங்குள்ளவர்களுக்கு வழங்கினார்.
வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு தங்கியிருந்து, கடந்த வாரம் அங்கிருந்து வெளியேறிய மக்களுடன் மக்களாக வந்து வவுனியா செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்தினம் மேலதிக விசாரணைக்காக வியாழக்கிழமை காலை கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த காலத்தில் அங்கு இடம் பெற்ற விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரியவருகிறது.

அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் வவுனியா செட்டிக்குளம் முகாமிலேயே தங்கியுள்ளனர்.
பள்ளியைப் பற்றிய தொடர் பதிவு இது. இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு உதவும் உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்ட பள்ளி. பல நண்பர்கள் உதவ முன்வந்திருப்பது நெகிழ்வாக உள்ளது. எவ்வாறு உதவுவது என்பது குறித்து நிறையக் கேள்விகள். உதவி மாதந்தோறும் தொடர்ந்து வழங்கப்படுதல் மிகவும் அவசியம். பணமாக மட்டுமல்ல; அங்குள்ள குழந்தைகளுக்குக் கல்வியளிக்கலாம். புத்தகம், துணி முதலான இன்றியமையாத தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.



பள்ளியின் முகவரி:
Indira Gandhi International Academy,
#10/2, Yelahanka Jakkur Road, Jakkur, 
Bangalore – 560 064

Cheque அல்லது DD அனுப்ப விருப்பமுள்ளவர்கள் Indira Gandhi International Academy என்ற பெயருக்கு அனுப்பலாம். வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.  முறையான கல்வியும், அடிப்படை வசதிகளும் குழந்தைகளுக்குக் கிடைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். இருட்டைச் சபிக்காமல் மெழுகுவர்த்தி ஏற்றும் முயற்சி. ஏற்ற முன்வரும் உள்ளங்களுக்கு நன்றி.
பிரபல நாடக இயக்குனர் மற்றும் நாடக நடிகர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஈழத்தமிழர் காவியம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெற்றி நடை போட்டது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள் தனது அடுத்த நாடகமான என் குடும்பத்தை பரபரப்பாக வெளியிட்டுள்ளார்.

வெற்றிக் முழக்கங்களுடன் டெல்லிக்குப் புறப்படுவதில் இருந்து நாடகம் தொடங்குகிறது. நாடக்த்தின் பெரும்பாலான காட்சிகளில் வசனங்கள் ஏதும் இன்றி எல்லாவ்ற்றையும் நாமே புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைதான். இது ஒரு புதுவகையான காட்சியமைப்பு தந்திரம் என்று கூறப்படுகிறது. நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் அமைக்கப்படாத நிலையில் மற்ற காட்சிகள் குறிப்பாக பேச்சுவார்த்தை நடக்கும் காட்சிகள் நாடகத்தின் போக்கை தெளிவாக காட்டுகின்றன. கலைஞர் அவர்கள் தன் மகன், மகள், பேரன் என்று மூவருக்குமே காபினெட் பதவிதான் வேண்டும் என்று வாதாடும்போது ஒரு பொறுப்புள்ள தந்தையாக பளிச்சிடுகிறார். உடனே எதிர்தரப்பு கலைஞரின் பேரனுக்கு மட்டுமே பதவி கொடுக்க முடியும் என்றூ கூறிவிடுவது நாடகத்தின் எதிர்பாராத திருப்பம். இக்காட்சியில் வில்லனாக நடித்தவர்கள் திரைக்கதையை மீறி சொந்தமாக நடித்து விட்டது இயக்குனருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துவிட்டது அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது. எனினும் ரசிகர்கள் அக்காட்சிக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்ததால் இயக்குனர் எதுவும் செய்ய முடியவில்லை.

பேரனுக்கு மட்டுமே பதவி என்றவுடன், மகன் பயங்கர ஆயுதங்களூடன் தந்தையை மிரட்டுவது ரசிக்கும்படியாக இல்லை. இந்தக்காட்சியில் இயக்குனர் பயங்கரமாக சொதப்பியிருக்கிறார்.

வில்லன் கோஷ்டியினரைப் பேசி ஜெயிக்க முடியாத நிலையில் அடுத்து நாடகத்தை எவ்வாறு நகர்த்துவது என்று இயக்குனர் குழம்பி போயிருக்கிறார். இதனிடையே திடீரென்று ராஜா, பாலு என்று இரண்டு கதாபாத்திரங்கள் திணிக்கப்படுகின்றன. அவர்கள் கதாநாயன் மேல் உள்ள விசுவாசத்தினால் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு தியாகிகளாக்கப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து காட்சிகள் நாயகன் தனது நண்பர்கள் மற்றும் காமெடியன்களுடன் சேர்ந்து திட்டம்தீட்டுவதாக போவதோடு நாடகத்திற்கு திரை விழிகிறது. வெகுவிறைவில் கிளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேற்றப்படும் என்று நாடகத்தின் இயக்குனர் அறிக்கை விடுத்துள்ளார்.
கிளைமாக்ஸில் நாயகன் தனது ஒரு மகனை மத்திய மந்திரியாகவும், இளையவரை மாநில முதல் மந்திரியாகவும் ஆக்கி விட்டு வனவாசம் செல்வதாக்வே அமையும் என்று பட்சிகள் சொல்கின்றன.

இந்நாடகத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் உண்மையே. அவை யாரையும் புண்படுத்துவதற்காக நடக்கவில்லை.
நாம் எங்கெ சென்று கொண்டிருக்கிறோம் எனத்தெரியாமல் சில பதிவர்களின் நடவடிக்கையால் தமிழினம் தலை குனிந்துள்ளது.

இன்று படிக்க நேர்ந்த இரு பதிவுகளால் அதிர்ச்சிக்குள்ளானேன்

நீங்களே பாருங்கள்

  1. பிரபாகரனை பின்னுக்கு தள்ளிய இளைய தளபதி விஜய்.
  2. நமீதாவைப் பின்தள்ளிய பிரபாகரன்

சினிமா மாயைக்குள் புதைந்து கிடக்கும் இவ்வாறன பதிவர்களுக்கு........

இதுசமர்ப்பணம்


மானங்கெட்ட தமிழ் பதிவர்களுக்கு


சுவையுங்கள் எங்கள் பிணங்களை

எழுதுங்கள் பதிவுகளை

சில பதிவர்கள் உண்மைச்செய்தியைப் பிரசுரிக்கிறோம் எனக்கூறிக்கொண்டு முட்டாள் தனமான பதிவுகளை இட்டுவருகின்றனர்.

சிங்கள இனவாதத்தின் அருவருடிகளான இவர்கள் தமிழ் மக்களின் பிணத்தினை உண்ணும் துரோகிகளுக்கு நிகரானவர்கள்.

பரிதாபப்படாதீர்கள் வெட்கம் கெட்டவர்களே
------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


வீண் வதந்திகளை நம்பி பதிவுகளை எழுதி எங்களை நோகடிக்காதீர்கள். எப்படா செத்து போவார்கள் பதிவு எழுதலாம் என காத்திருந்த போல சில பதிவுகள் வருகின்றன... இது ஒருவர் இருவரின் உயிர் பிரச்சனை அல்ல...என் ஈழ இனத்தின் உயிர் பிரச்சனை...புரிந்து கொள்ளுங்கள்...நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பாதீர்கள்...நாம் குழம்பும் போது எதிரி வெற்றி அடைந்துவிடுவான்...அதற்கு துணை போகாதீர்கள்...நன்றி

(நன்றி- தூயா)



---------------------------------------------------------------------------------------------------


எமது தலைவரின் தலைமையில்

தமிழீழ தேசம் மட்டுமன்றி உலகெங்கும் விரிந்தும் பரந்தும் இருக்கின்ற மக்கள் போராளிகள் எமது தலைமையின் வழிகாட்டுதல்களின் கீழ் மீண்டும் விருட்சமாக தோன்றி; எமது மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று கண்டியில் அதிபர் ராஜபக்ச அவர் சந்தித்துப் பேசுகிறார். இன்று மனிக் பாம் முகாமிற்கு ஐ. நா செயலாளர் விஜயம் செய்கிறார். சிறப்பு விமானம் மூலம் நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்னதாக கொழும்பு வந்தடைந்தார் பான் கி மூன். பின்னர் இன்று காலை அவர் கண்டி புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் ராஜபக்சவை அவர் சந்தித்துப் பேசுகிறார். இந்தப் பேச்சைத் தொடர்ந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களைப் [...]

கருத்துகள் இல்லை: