சனி, 23 மே, 2009

2009-05-23


புலிகளுக்குச் சார்பாக எந்தச்சக்திகளும் இல்லாமற்போனது புலிகளின் இயல்பு, இன்றைய உலக அரசியற் சூழல் போன்றவை வழிவந்த துரதிஷ்டம். முன்பெல்லாம் இந்தியா போன்ற சக்திகள் புலிகளை ஆதரித்து தமது கைப்பாவையாக நடத்தியுள்ளன. பிறகு இக்கட்டான முட்டுச்சந்துகளுக்குள்ளிருந்து வெவ்வேறு சக்திகள் புலிகளைக் காப்பாற்றி விட்டிருந்த.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
அன்றைய மாலையில்
உன்னூரில் மழையென,
தொலைபேசியின் வழியே
என்னையும் நனைய வைத்தாய்!
மழைச்சத்தம் நடுவே நம்
மனச்சத்தம் கரைந்து விட,
பெய்யாத மழையின் குளிர்,
என் நெஞ்சினிலே நிறைந்ததடி!
மழைநின்ற மண்வாசமாய்,
என் மனதிலே பரவுமுன்னை,
சட்டென்று காதலிக்காமல்
நான் என்னதான் செய்ய !?

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com
தமிழ்ப் பதிவுகள் எழுதியே ரொம்ப நாளாச்சு. எதாவது எழுதலாம்னு உக்காந்தாலும், 'சிஸ்டம்.அவுட்.பிரிண்டெல்லென்' அப்படின்னே வார்த்தைகள் வந்து விழுகுது. எவனாச்சும் சிக்குனாய்ங்கன்னா, கலாய்ச்சு ஒரு பதிவு போடலாம்னு பார்த்தா, எல்லாரும் உசாராயிட்டாங்க. சரி, மொக்கைப் படமாவது பார்த்து விமர்சனம் எழுதலாம்னா, தெரியாத்தனமா கொஞ்ச நாளைக்கு முன்னால நல்லவனா மாறிட்டதால, இப்ப படத்துக்கும் அதிகமா போறது கிடையாது. என்னடா பண்ணலாம்னு யோசிக்கும் போதுதான், வசந்த் போன் பண்ணாரு. ஞாயித்துக் கிழமை, திருவனந்தபுரம் தமிழ் சங்கத்துல ஒரு விழா இருக்கு, தனியா போக பயமா இருக்கு, கூட வர முடியுமான்னு கேட்டாரு. நானும் இதுக்கு முன்னால, இந்த மாதிரியான சங்கத்து விழாக்கள்ள கலந்துக்கிட்டதே இல்லைங்குறதுனால, சரி விழாவ சிறப்பிக்கலாம்னு (ரொம்ப ஓவரோ!?) போகலாம்னு முடிவு பண்ணி, சாயந்திரம் 5 மணி விழாவுக்கு 4:30 மணிக்கே கிளம்பியாச்சு.

வசந்த்க்கு மறுபடியும் ஒரு மிஸ்டு கால்ல பேசி, சங்கத்துக்கு வழி கேட்டா, "திருவனந்தபுரம் ரயில் நிலையத்து பாலத்த தாண்டி PRS ஆஸ்பிட்டலுக்கு எதுத்தாப்ல போற சந்துல இருக்கு சங்கம்" அப்படின்னு பதில் வந்தது. ரயில் நிலையத்துல போய் எறங்கி, பாலத்த தாண்டலாமான்னு பார்த்தா, நாலு ஆள் உயரத்துக்குப் பாலத்தக் கட்டி வச்சிருக்கானுக. இது வேலைக்காகாது, நமக்கு ஆட்டோதான் சரின்னு, சைடுல வந்த ஆட்டோவ பிக்கப் பண்ணி சங்கத்து போங்கன்னு சொன்னா, அவரு திருவனந்தபுரத்து பாலத்தத் தாண்டி ஒரு பத்து நிமிச தூரத்துக்கு வண்டிய ஓட்டிக்கிட்டு போய்க்கிட்டு இருக்காரு. நான் மீட்டர பார்த்துக்கிட்டே கொஞ்சம் பயத்தோடவே உக்காந்துக்கிட்டு இருந்தேன். போனா போகுதுன்னு, PRS வாசல்ல இறக்கி விட்டு, 15 ரூபாய்ன்னாரு (கழக்கூட்டம்ல இருந்து, தம்பானூர் வர்ரதுக்கே 10 ரூபாய்தான். ஆனா, தம்பானூர்ல இருந்து, தோ..இங்க இருக்குற PRS ஆஸ்பிட்டலுக்கு 15 ரூபாயா !! எண்டே குருவாயூரப்பா!!). சரின்னு ஆட்டோவ கட் பண்ணிட்டு, சந்து எங்க இருக்குன்னு தேட ஆரம்பிச்சேன். ஆஸ்பிட்டல் வாசலுக்கு எதுத்தாப்லயே ஒரு சந்து போச்சு.. ஆனா சந்தோட மறுமுனையில கேரள டாஸ்மாக். ஆஹா.. சங்கத்த நல்ல எடத்துலதான் கூட்டியிருக்காங்க..அவசரப்பட்டு நல்லவானாயிட்டமோன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, நல்ல வேளையா வசந்த் இன்னொரு ஆட்டோல வந்து இறங்கி, சங்கம் இருக்குறது வேற ஒரு சந்துன்னு, என்னைக் காப்பாத்துனாரு.

நாங்க தமிழ்ச் சங்கத்துக்கு போகும் போதே இசை விருந்து ஆரம்பமாகியிருந்தது (பிரியாணி விருந்து எல்லாம் எதிர்பார்க்காதீங்க, இது தமிழ்நாடோ, மதுரையோ இல்ல!). இவ்வளவு சொல்லிட்டு விழா எதுக்குன்னு சொல்லலன்னா எப்படி.. திருவனந்தபுரத்துல இருக்குற சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீலபத்மனாபன் அவரோட பிறந்த நாள் விழா. 'பள்ளிகொண்டபுரம்' அப்டிங்கிற நாவல எழுதுன பெரிய எழுத்தாளர். இன்னும் நிறைய எழுதியிருக்கார். அவரோட பிறந்தநாளுக்காக, ஒவ்வொரு வருஷமும் ரெண்டு பேருக்கு 'நீலபத்மன்' விருது வழங்குறது வழக்கம். அந்த விழாவுக்குத்தான் நேத்து நான் போயிருந்தேன். ஹ்ம்.. எங்க விட்டேன்.. ம். இசை விருந்துல. இசை விருந்து ஆரம்பமாகி நடந்துக்கிட்டு இருந்தப்பதான், நாங்க அரங்கத்துக்குள்ள நுழைஞ்சோம்.

அரங்கத்துல எதுத்தாப்ல தென்பட்டவங்க எல்லாம், டக்குன்னு எங்கள நிறுத்தி, "தம்பீஈஈஈ.. உன் வயசு, என் அனுபவம்ப்ப்பா" அப்டின்னு சொல்ற ரேஞ்சுலயே இருந்தாங்க. எங்களோட ஏஜ் குரூப்ல, நானும் வசந்தும் மட்டும்தான் அனாதையா சுத்திக்கிட்டு இருந்தோம். ஒவ்வொருத்தரும், "யார்ரா இவனுங்க.. கசாப்பு கடைக்குள்ள, கடன் கேட்டு வந்த ஆடு மாதிரி" இருக்கானுங்களே, பார்த்துக்கிட்டு இருக்க, காலியா கிடந்த சேர்ல போய் செட்டிலாயிட்டோம். அரங்கத்துல இன்னும் இசைவிருந்து நடந்துக்கிட்டு இருந்தது. சரி. இசைவிருந்து முடிஞ்சா, விருதோ, எருதோ சீக்கிரமா குடுத்துட்டு சங்கத்த கலைப்பாங்கன்னு பார்த்தா, 7 மணி வரைக்கும் பாடிக்கிட்டு இருந்தாரு. 7 ம்ணிக்கு அப்புறம்தான் ஆக்சுவல் விழாவே ஆரம்பமாச்சு.

அப்படி இப்படின்னு நிறைய பேரு பேச ஆரம்பிச்சாங்க.. நமக்கு இதுக்கு மேல தாங்காதுன்னு, போனதுக்கு ஒரு போண்டாவத் தின்னுட்டு, ஏழரை மணிக்கெல்லாம் பொட்டியக் கட்டிட்டு கிளம்பியாச்சு.

இப்ப இந்தப் பதிவுக்கு, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' அப்டிங்கற தலைப்பு எதுக்குங்கிறீங்களா.. எதுக்குன்னா, விழாவுல பேசுன ஒரு பேச்சாளர் சொன்னாரு "ஒரு படைப்பாளி அவனோட படைப்புக்கு வைக்கிற பெயர், ஒரு பொருளை மட்டும் தரக்கூடாது. அது பல பொருட்களை தரணும்" அப்டின்னாரு. அதுக்காகத்தான் இந்தப் பதிவுக்கு இந்தத் தலைப்ப வைச்சிருக்கேன். இது என்னென்ன பொருள் தருதுங்கிறது, உங்களோட கற்பனைக்கு விட்டுடறேன்!

அடுத்த வாரம் போய் அந்த சங்கத்துல உறுப்பினர் ஆக வேண்டியிருக்கிறதுனால, இதுக்கு மேலயும் கலாய்க்காம, இத்தோட நிப்பாட்டிக்கறேன்!

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com
கடந்த மே தினம், எனக்கு காலை 5 மணிக்கே விடிந்து விட்டிருந்தது. என் அலுவலகத் தோழியின் திருமணம், கோட்டயம் அருகில் இருக்கும் பொன்குன்னம் என்ற நகரில் மே முதல் தேதி நடக்க இருந்ததால், திருமணத்திற்கு திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர்களுடன் செல்லலாம் என்ற முடிவெடுத்து, மங்களூர் வரை செல்லும் பரசுராம் ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். இந்த ரயிலில் சங்கனாச்சேரி வரை சென்று, பின் அங்கிருந்து பேருந்தில் பொன்குன்னம் செல்லலாமென்பது எங்களின் குறைந்தபட்ச செயல்திட்டம்.

வழக்கமாக விடுமுறை நாள் என்றால், காலை பத்து மணிக்கு மேல்தான் எழலாமா, வேண்டாமா என யோசனை செய்யும் என்னை, பரசுராம் எக்ஸ்பிரஸ் காலை ஐந்து மணிக்கே எழ வைத்தது. அப்போது கிளம்பினால்தான், கழக்கூட்டத்தில் இருந்து, பேருந்தில் ஸ்ரீகார்யம், உள்ளூரைக் கடந்து, 6:30 மணிக்குக் கிளம்பும் பரசுராமைப் பிடிக்க இயலும். அதனால் ஐந்துக்கே எழுந்து கிளம்பினேன். அந்த அதிகாலை நேரத்திலும் அம்மா எழுந்திருந்து தேநீர் போட்டுக் கொடுத்தார் (அம்மாக்களுக்கு மட்டும் இது எப்படி முடிகிறதோ!). இரவுப் பனியில் குளித்(ர்ந்)திருந்த வாசல் கதவைத் திறந்து, ஆளில்லா வீதியில், அரைத்தூக்கத்திலிருந்த தெருநாய்களைச் சத்தமில்லாமல் கடந்து, சாலை விளக்குகளால் மஞ்சள் குளித்திருந்த தேசிய நெடுஞ்சாலையின் பேருந்து நிறுத்தத்தை அடையும் முன்னர், அந்த விடியற்காலை என்னுள் நான்கைந்து கவிதைகளின் கருவை விதைத்திருந்தது.

விடிகாலைகள் எப்பொழுதுமே அழகானவை. அதிலும் நகரத்து விடிகாலைகளுக்குத் தனி அழகுண்டு. வாகனங்களும், மக்களும், சத்தங்களும், தூசுகளும் நிறைந்திருக்கும் நகரத்தின் பகல், ஓரிரவில் தன்னை உருமாற்றிக் கொண்டு, கொஞ்சம் உரமேற்றிக் கொண்டு, அடுத்த நாளைக்குத் தயாராய் வந்து நிற்கும் பொழுது இந்த விடிகாலை. பகல் முழுதும் பார்த்துப் பழகிய நகரம், விடிகாலையில் இன்னும் கொஞ்சம் செளந்தர்யத்துடன், ஒரு புத்தகத்தின் திறக்கடாத புதிய பதிப்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அதிகாலைப் பொழுது. கல்லூரிக் காலத்தில், ஒருமுறை காலை ஐந்து மணிக்கு மதுரவாயலில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பேருந்தில் சென்றபோது பார்த்த அந்தப் புதிய சென்னையின் பிம்பம் என்றும் என் மனதை விட்டு அகலாது. நியான் வெளிச்சங்களும், அவசரமில்லா மனிதர்களும், மெதுவாக நகரும் இரவும், கூடவே கொஞ்சம் குளிருமாக ஒரு கவிதைக்கான ஊற்றுக்கண் நகரத்து விடியல்களில் இருக்கும்.

ஆனால் அன்று நான் இது எதையும் ரசிக்கும் மனநிலையில் இல்லை. ஆறரை மணி பரசுராம் ரயில் என் மனதில் ஐந்தரை மணிக்கே ஓட ஆரம்பித்திருந்தது. இந்திய ரயில்வேயின் நேர மேலாண்மையில் எனக்கு வெகுவாக நம்பிக்கை இருந்தாலும், ரயில் நிலையத்தை அடையும் வரையில் ரயிலைத் தவற விட்டுவிடுவேனோ என்று சிறிது பதட்டமாகவே இருந்தது . ஆனால், சரியாக ரயில் கிளம்பும் முன் ரயில் நிலையத்தை அடைந்து, நண்பர்களை அலைபேசியில் பிடித்து, முன்பதிவு செய்து வைத்திருந்த இருக்கைகளில் ஏற்கனவே அமர்ந்திருந்தவர்களை வெளியேற்றி, நாங்கள் அமரவும், வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது. கேரளாவில் கோடை விடுமுறை என்பதால், ரயிலில் கூட்டத்திற்கு குறைவில்லை. முன்பதிவு பெட்டி என்றாலும் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இது கேரளா முழுவதிலும் இருக்கும் ஒரு பிரச்சனை. இங்கே முன்பதிவு என்பதெல்லாம் வேலைக்காகாது. பாதி வழியில் யாராவது முன்பதிவுப் பெட்டியில் ஏறி, தள்ளி உட்காரச் சொன்னால் உட்கார்ந்துதான் ஆக வேண்டும்.

ரயில் மெதுவாக வேகம் பிடிக்க ஆரம்பித்திருந்தது. மூன்று மணி நேர பயணம். படிக்க எதையும் எடுத்து வராத என்னையே நான் நொந்து கொண்டேன். கூட வந்த நண்பர்கள் 'மலையாள மனோரமா'-வை புரட்டத் தொடங்கினர். நான் வழக்கம் போல அதில் 'பொம்மை' பார்த்துக் கொண்டிருந்தேன். ரயில் ஜன்னலுக்கு வெளியே தென்னைகளும், நதிகளும், கொஞ்சமே கொஞ்சம் மக்களும், நிறைய மழைத் தூறல்களுமாக காட்சிகள் வேகவேகமாக மாறிக் கொண்டிருந்தன. கொல்லம், கருநாகப்பள்ளி, மாவேளிக்கரா என்று கேரளத்தின் உட்பகுதிகளைக் கடந்து சங்கனாச்சேரியில் இறங்கும் போது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. பின்னர், அங்கிருந்து ரயில் நிலையத்தின் பின்வாசல் வழியாக வெளியேறி, சாலையக் கடந்து, வழி விசாரித்து, பொன்குன்னம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினோம்.

-- அடுத்த பதிவில் முடியும் --

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com
அவன்:
என் எண்ணத்தைச் சுமந்து
அன்னமே, நீ
தூது போ!!

அவள்:
ட்விட்டர் இருக்க
இன்னுமா அன்னம்!?
தூ. து. போ!

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com
பாதிதிறந்த கதவின்பின்னே,
கண்சிமிட்டிக் காத்திருக்கும்!
தனியறையில் விளக்கணைக்க
தயக்கங்களை அதுகுடுக்கும்!
வெறும்கதவில் ஒலியெழுப்பி,
மனக்கிலியை எழுப்பிவிடும்!
உதிர்ந்திருக்கும் சருகின்மேல்
சன்னமாக நடைபோடும்!
கண்ணாடி முதுகில்தானே
கண்ணாமூச்சி விளையாடும்!
பயந்தாங்குளி பேயது போல
என்பின்னாலேதான் உலவிடும்!
பழகும்வரை புதுவீட்டில்,
பேய்களுடன் குடித்தனம்தான்!

எனது பதிவுகளை வாசித்தமைக்கு நன்றி நண்பரே! எனது முகப்புப் பக்கத்திற்கு செல்ல : Veerasundar.com

கருத்துகள் இல்லை: