நாளை எம் தாய்த் தமிழகம் தீர்ப்புச் சொல்லப்போகிறது. இன்றோ தொப்புள் கொடி உறவுகள் ஆயிரமாயிரமாகக் கொல்லப்பட்டு விட்டனர்.
கொன்றது சிங்கள அரசின் வெறித்தனம் மட்டுமல்ல காங்கிரஸ் அரசு கொடுத்த பலமும் தான்.
உலகின் எந்த மூலையில் கேட்டாலும் இந்தியாவை மீறிச் சென்று உங்களை எங்களால் காப்பாற்ற முடியாது என்கிறார்கள் . அப்படியாயின் உலகின் பார்வையில் இந்திய மத்திய அரசு அத்தனை கொடூரமான அரசா?
முத்துக்குமார் முதலாய மாவீரர்கள் ஈழத்தமிழனை காக்க உயிராயுதம் ஏந்தினர் . தியாகி முத்துக்குமார் தன்னில் மூட்டிய தீ இன்று உலகெல்லாம் எழுச்சி எனும் வடிவம் கொண்டு பற்றி எரிகின்றது. நீங்கள் இப்போது வாக்கெனும் ஆயுதம் நீங்கள் ஏந்தி நிற்கின்றீர்கள். அந்த ஆயுதம் எங்களைக் காக்கட்டும்.
இன்று எமது ஊரே மரண வீடாகி விட்டது. நாம் ஒவ்வொருவரும் கதறுகின்றோம். எங்கும் மரண ஓலம். எங்கும் பிணங்கள். அதனை அள்ளிப்போடுவாரும் இல்லை.
குண்டு பட்டு புண் பட்டு துடிக்கிறது ஈழத்தமிழ். பட்ட புண் ஆற மருந்தில்லை மண் அள்ளிப் போடுகின்றது. உயிர் வலி கொண்டு துடிக்கின்றது ஈழத் தமிழ்.
காங்கிரசுக்கு எதிராக நீங்கள் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது உயிர் வலி கொண்டு துடிக்கும் ஓர் ஈழச் சிறுமி தன் கைகளில் மலர் செண்டோடு உங்களைப்பார்த்துப் புன்னகைப்பாள் . அவளது சிரிப்பு உங்கள் தலைமுறையை வாழ்த்தும்.
அவளைக் கொன்றுவிடாதீர்கள் . காங்கிரசுக்கு வாக்குப் போட்டு விடாதீர்கள்.
நம்பிக்கையுடன்
உயிர் வலி கொண்டு துடிக்கும் ஈழத் தமிழ் உறவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக