அவனது பெயரில் அழகிருந்தது.. அன்பும் கூட அவனோடு எப்போதுமிருக்கும் அவனது மென்புன்னகையைப் போலவும் அவனது புன்னகை ஒரு வண்டு. மற்றவர்களின் இதயத்தை மொய்த்துவிடுகிற வண்டு. அவனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.. செல்லமாய் ஒன்றும் காகிதங்களில் ஒன்றுமாய் எதைக்கொண்டு அழைத்தாலும் அவனது புன்னகை ஒரே மாதிரியானதுதான்.. மாற்றமுடியாதபடி… அவனுக்கு மூன்றாம் பெயரை அவர்கள் வழங்கினர் அந்த மூன்றாம் பெயர் அவனது புன்னகையைப் பிடுங்கிவைத்துக்கொண்டு துவக்குகளைப் பரிசளித்தது. அவனது விருப்புகளின் மீதேறிநின்று பல்லிளித்தது. அவனது தாயைப் பைத்தியமாயத் தெருவில் அலைத்தது. அம்மா மூன்றாம் பெயர் அவனைக் கொன்றுவிடுமெனப் புலம்பியபடியிருந்தாள். அவனது முதலிரண்டு பெயர்களையும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.. மந்திரங்களின் உச்சாடனம்போல.. இறுதியில் அந்த மூன்றாம் பெயர் அவனைக் கொன்றது. அம்மா பேச்சை நிறுத்தினாள்.. யாருமற்ற வெளியில் அலைந்துகொண்டிருக்கிறார்கள் முதலிரண்டு பெயர்களும் மரணத்தால் எடுத்துச்செல்லமுடியாத அவனது புன்னகையும்.. அம்மாவும்... (தம்பி ...

பள்ளிப்பருவத்திலேயே கையெழுத்து பத்திரிக்கை நடத்தியவர்களைப் பற்றி என் தமி்ழ் வாத்தியார் பாடம் நடத்தினார். அதில் எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, அதை எனது நண்பனிடம் சொல்ல, அவனும் உதவி செய்வதாக சொல்ல, 'நந்தவனம்' என்று பெயர் சூட்டி கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பித்தாயிற்று.
முதலில் பத்து பிரதிகள் போட்டோம். படித்தவர்கள் 'அட, இந்த சின்னப்பசங்களும் நல்லா எழுதறாங்க' என்று சொல்ல, அடுத்த பிரதி கையிருப்பைக் கொண்டும், கடன் வாங்கியும் அச்சில் செளியிடுவது என்று முடிவாயிற்று.
நண்பனின் அம்மா வட்டிக்கு பணம் தருவார்கள். பத்திரிகையில் விளம்பரம் போட்டு அதில் வரும் பணத்தை எடுத்து திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற
அசட்டுத் துணிச்சலில் அவர்களிடம் பணம் வாங்கிவி்ட்டேன்.
நானும் என் நண்பனும் விளம்பரத்திற்காக அலைந்த போதுதான் விளம்பரம் வாங்குவதன் அருமை தெரிந்தது. எல்லோரும் நம்மை பார்த்த விதமே ஒரு மாதிரியாக இருந்தது. சிலர் விளம்பரத் தொகை அதிகம் என்று பேரம் பேசினார்கள். ஒருவழியாக சில விளம்பரங்களுடன் 100 புத்தகம் போட்டு வெளியிட்டோம்.
கடைகளில் கெஞ்சிக்கேட்டு விற்பனைக்கு கொடுத்தோம். அதில் சில பிரதிகளும் விற்பனை ஆனது. ஆர்வமுள்ள சிலருக்கு புத்தகங்கள் இலவசமாக கொடுத்தோம். அந்தப்புத்தகங்கள் கைமாறி கைமாறி பலரையும் சென்றடைந்தது.
தினமும் பள்ளிவி்ட்டதும் எனது நண்பனை அழைத்துக்கொண்டு விளம்பரம் வாங்க கடைத்தெருவிற்கு செல்வோம். வழக்கம்போல என் நண்பனை அழைக்க, அவனின் அம்மா அனுப்ப மறுத்துவி்ட்டார்கள். நான் தனியே நடத்துவது என்று முன்னிலும் ஆர்வமானேன்.
நண்பரொருவர் ஒரு முகவரியை என்னிடம் கொடுத்து, 'இவர் பத்திரிகையில் ஆர்வமுள்ளவர். இவரைப்போய் பார்த்தால் உனக்கு உதவி செய்வார்' என்று கூற, ஆரவமுடன் நானும் அந்த(வலங்கைமான்) முகவரிக்கு சென்றேன். அந்த நண்பர் கடைத்தெருவில் பெரிய மளிகைகடை வைத்திருந்தார். 'சரி, இவரிடம் ஒரு விளம்பரமும் வாங்கிவிடவேண்டியதுதான்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு என்னைப்பற்றி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
நான்கொடுத்த புத்தகங்களை வாங்கி வைத்துவி்ட்டு(புரட்டிப்பார்கக்கூட இல்லை) ஒரு துண்டு காகிதம் எடுத்து ஏதோ எழுதினார். பின்பு என்னிடம் கொடுத்தார். அதில்...
நந்தவனத்திற்கு ஓய்வளிக்கவும்...
* உழைப்பு விரயம்
* கால விரயம்
* பணம் விரயம்
இப்படிக்கு ....
என்று கையழுத்திட்டிருந்தார்.
எனக்குள் பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
அந்த வாசகங்களை இன்றும் மறக்காமல் இருக்கிறேன் என்றால்... அந்த வாசகங்கள் உண்மைதான் என்று அர்த்தம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக