சனி, 23 மே, 2009

2009-05-23



More than a Blog Aggregator

by ஆ.முத்துராமலிங்கம்


தண்டவாளத்தில்
தலை சாய்த்து பூத்திருக்கும்
ஒற்றை பூ
என் காதல்

நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?
-=-

இசைத்தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக்கிடக்கும்
முட்கள் நாம்

பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம்

தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உள் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின

வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருந்தாய்

கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வெளவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
-=-

நீ போன தொடர்வண்டி பற்றி
தெரியாது எனக்கு
ஆனால்
என் பெருமூச்சுதான்
இழுத்து வந்தது
நீ திரும்பிய தொடர்வண்டியை
-=-

பழநிபாரதி
======-------========
உன் கை விளையாட்டுச் சோழிகளாய்
என்னை
சிதறடித்தும்
சேகரித்தும்
அந்தரத்தில் வீசியும்
லாவகமாய்ப் பிடித்தும் ஆட்டுகிறாய்.
போட்டது போட்டபடி போய் விடுகிறாய்
ஆட்டம் சலித்ததும்.
என்னை ஏற்றிவிட்டுச் செல்கின்றன
யார் யாரின் கால்களோ
.
இளையபாரதி
======-------========

'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!
-=-
நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.
-=-
விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?
-=-
உருவம் தவிர்த்து
உணரத்தொடங்கு
காதலோ – கடவுளோ!
-=-
நான்
. ஆனாலும்
நீ மட்டும்
,

ரா.பார்த்திபன்
======-------========

சிறகுகள் இரண்டு
சேரும்
இருந்த
ஓர் இதயம்
தொலையும்
-=-
அவள்
கண்களைப் பார்த்தால்
மீன்!
கண்களால்
அவள் பார்த்தால்
தூண்டில்!
-=-
புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை!
-=-

நெல்லை ஜெயந்தா
======-------========

மேஜை மேலிருந்த
உன் மரக்குதிரை
நேற்றிரவு வேட்டைக்குப் போனது

வேடனுக்குத் தப்பிய
கானகப் புலியொன்று
இன்றிரவு
என் மேஜையில்
படுத்திருகிறது.
-=-

வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக் கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்றுவர முடியுமா உனக்கு
என.
-=-

மனுஷ்ய புத்திரன்
======-------========
என்றும் உன்னை
நினைத்திருப்பேன்

உன் நினைவிலேயே
என்றும் வாழ்ந்திருப்பேன்

என்றாவது உன்னை
மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்.

(இரண்டாவது வரி சரியாக நினைவில்லை
இதை ஒத்து வேராகவும் இருக்கலாம்)

======-------========

இதை எழுதியவர் யாரென்று தெறியாது
பத்து ரூபாய் தாளில் வெள்ளை வட்டத்துக்குள்
எழுதபட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்
படித்தது.

இவைகளை எல்லோருமே படித்திருக்களாம்
இது ஒரு பகிர்வுக்காக மட்டுமே.
சமீபமாக வேலை பளு அதிக்கப் பட்டு போவதால்
புதிய பதிவுகள் ஒன்றும் உருவாக்க வில்லை அதனால்
இந்த பகிர்வு.


More than a Blog Aggregator

by ஆ.முத்துராமலிங்கம்


தண்டவாளத்தில்
தலை சாய்த்து பூத்திருக்கும்
ஒற்றை பூ
என் காதல்

நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?
-=-

இசைத்தட்டின் ஞாபகத்தில்
கடிகாரத்தில் படுத்துக்கிடக்கும்
முட்கள் நாம்

பசி தீர்ந்த நகங்கள் பற்கள்
அபரிமிதமாய் விட்டுச் சென்ற
இறைச்சித் துண்டின் தனிமை
நம் காலம்

தழுவும் அலைகளின் லயிப்பில்
பேசத் திணறிய நம் பாறைகளின்
உள் பிம்பங்கள்
உருவாக முடியாமல்
உடைந்து நொறுங்கின

வண்ணத்துப் பூச்சிகள்
மாமிசம் உண்ணும் கனவுகளுக்கு
நீ உன் உறக்கத்தை
விட்டுக் கொடுத்திருந்தாய்

கோபுரத்தில் புறாக்களும்
பிரகாரங்களில் வெளவால்களும்
ஒரே கோயிலில்
எப்படி வாழ்கின்றன என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.
-=-

நீ போன தொடர்வண்டி பற்றி
தெரியாது எனக்கு
ஆனால்
என் பெருமூச்சுதான்
இழுத்து வந்தது
நீ திரும்பிய தொடர்வண்டியை
-=-

பழநிபாரதி
======-------========
உன் கை விளையாட்டுச் சோழிகளாய்
என்னை
சிதறடித்தும்
சேகரித்தும்
அந்தரத்தில் வீசியும்
லாவகமாய்ப் பிடித்தும் ஆட்டுகிறாய்.
போட்டது போட்டபடி போய் விடுகிறாய்
ஆட்டம் சலித்ததும்.
என்னை ஏற்றிவிட்டுச் செல்கின்றன
யார் யாரின் கால்களோ
.
இளையபாரதி
======-------========

'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!
-=-
நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.
-=-
விலக
விலக
புள்ளிதானே…
நீ எப்படி
விசுவரூபம்?
-=-
உருவம் தவிர்த்து
உணரத்தொடங்கு
காதலோ – கடவுளோ!
-=-
நான்
. ஆனாலும்
நீ மட்டும்
,

ரா.பார்த்திபன்
======-------========

சிறகுகள் இரண்டு
சேரும்
இருந்த
ஓர் இதயம்
தொலையும்
-=-
அவள்
கண்களைப் பார்த்தால்
மீன்!
கண்களால்
அவள் பார்த்தால்
தூண்டில்!
-=-
புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை!
-=-

நெல்லை ஜெயந்தா
======-------========

மேஜை மேலிருந்த
உன் மரக்குதிரை
நேற்றிரவு வேட்டைக்குப் போனது

வேடனுக்குத் தப்பிய
கானகப் புலியொன்று
இன்றிரவு
என் மேஜையில்
படுத்திருகிறது.
-=-

வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக் கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்றுவர முடியுமா உனக்கு
என.
-=-

மனுஷ்ய புத்திரன்
======-------========
என்றும் உன்னை
நினைத்திருப்பேன்

உன் நினைவிலேயே
என்றும் வாழ்ந்திருப்பேன்

என்றாவது உன்னை
மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்.

(இரண்டாவது வரி சரியாக நினைவில்லை
இதை ஒத்து வேராகவும் இருக்கலாம்)

======-------========

இதை எழுதியவர் யாரென்று தெறியாது
பத்து ரூபாய் தாளில் வெள்ளை வட்டத்துக்குள்
எழுதபட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்
படித்தது.

இவைகளை எல்லோருமே படித்திருக்களாம்
இது ஒரு பகிர்வுக்காக மட்டுமே.
சமீபமாக வேலை பளு அதிக்கப் பட்டு போவதால்
புதிய பதிவுகள் ஒன்றும் உருவாக்க வில்லை அதனால்
இந்த பகிர்வு.


More than a Blog Aggregator

by Navish Senthilkumar
பேருந்து நடத்துனர் கேட்ட
ஐம்பது பைசா சில்லறை
"இல்லை" என்று சொல்கையில்
உன் உதடுகள் சுழித்து
உதிர்க்கிறாய்
கோடானு கோடி கொடுத்தாலும்
கிடைக்காத அழகை...

நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!

என்னதான்
எனக்காகவும் நீயே
சாப்பிடுவதாகச் சொன்னாலும்
உனக்காகக் கொஞ்சம்
சாப்பிடச் சொல்லி
ஒவ்வொரு வேளையும்
பசிக்கிறது எனக்கு!

கொடுத்ததைக் கேட்கும்
குறுகிய புத்தி
உனக்கும் எனக்கும்
முத்த விசயத்தில்...
வாரிவாரிக் கொடுத்தாலும்
தீர்ந்தபாடில்லை
நம் இதழ்கள் வழங்கிய
முத்தக்கடன்!
--நாவிஷ் செந்தில்குமார்


More than a Blog Aggregator

by Navish Senthilkumar
பேருந்து நடத்துனர் கேட்ட
ஐம்பது பைசா சில்லறை
"இல்லை" என்று சொல்கையில்
உன் உதடுகள் சுழித்து
உதிர்க்கிறாய்
கோடானு கோடி கொடுத்தாலும்
கிடைக்காத அழகை...

நீ பேசிய
வார்த்தைகளைக் காட்டிலும்
பேசாத வார்த்தைகள்தான்
மிகப்பெரிய பாக்கியசாலிகள்!
உனக்குள்ளேயே இன்னும்
புதைந்து கிடக்கின்றனவே!

என்னதான்
எனக்காகவும் நீயே
சாப்பிடுவதாகச் சொன்னாலும்
உனக்காகக் கொஞ்சம்
சாப்பிடச் சொல்லி
ஒவ்வொரு வேளையும்
பசிக்கிறது எனக்கு!

கொடுத்ததைக் கேட்கும்
குறுகிய புத்தி
உனக்கும் எனக்கும்
முத்த விசயத்தில்...
வாரிவாரிக் கொடுத்தாலும்
தீர்ந்தபாடில்லை
நம் இதழ்கள் வழங்கிய
முத்தக்கடன்!
--நாவிஷ் செந்தில்குமார்





நாம் எடுக்கும் படத்தில் உள்ள வண்ண சில பகுதியில் நமக்கு பிடிக்காமல் போகலாம். உங்கள் துணைவியாருக்கு அல்லது  உங்கள் விறுப்பமானவருக்கு எடுத்து கொடுத்த ஆடைகளில் வண்ணத் தேர்வு பிடிக்காமல் போகலாம். வேறு வழியே இல்லை படத்தில் மாற்றுங்கள். போட்டோஷாப்பில் மூன்று நிலையிலேயே மாற்றலாம்.

படம் .1.

நான் திரை நாயகி  நயன்தார படத்தை திறந்துள்ளேன்.

அவரின் ஆடையின் நிறத்தை மாற்றுவோம்.

 

படம் .2.

தேர்வுக்கு செல்லலாம்.  இமேஜ் சென்று ஹு மற்றும் சேச்சுரேசன் சென்று தேர்வு செய்யுங்கள்.

Image- Hue Saturation

படம்  .3.

ஹு மற்றும் சேச்சுரேசன் சன்னல் திறந்துள்ளது.

அம்புக்குறிக் காட்டப்பட்டுள்ள இட்த்தில் நீங்கள் மாற்ற வேண்டிய வண்ணத்தை தேர்வு செய்யுங்கள். நான் நயன்தாராவி ஆடையின் வண்ணம் சிவப்பை தேர்வு செய்கிறேன்.

படம்  .4.

ஹூவின் குறியை மெல்ல இழுத்து மாற்றுங்கள்.  வண்ணம் குறிப்பிட்டப் பகுதியில் மாறும்.

நான் தேர்வு செய்த மதிப்பு  -36 ஆகும்.. 

முடிந்தது… சேமியுங்கள்.

 

திமுக தலைவர் கலைஞர்  எப்போதும் மஞ்சள் ஆடையைத்தான்  உடுத்துவார். நான் மாற்றியுள்ளது. இளம் பச்சை.






நாம் எடுக்கும் படத்தில் உள்ள வண்ண சில பகுதியில் நமக்கு பிடிக்காமல் போகலாம். உங்கள் துணைவியாருக்கு அல்லது  உங்கள் விறுப்பமானவருக்கு எடுத்து கொடுத்த ஆடைகளில் வண்ணத் தேர்வு பிடிக்காமல் போகலாம். வேறு வழியே இல்லை படத்தில் மாற்றுங்கள். போட்டோஷாப்பில் மூன்று நிலையிலேயே மாற்றலாம்.

படம் .1.

நான் திரை நாயகி  நயன்தார படத்தை திறந்துள்ளேன்.

அவரின் ஆடையின் நிறத்தை மாற்றுவோம்.

 

படம் .2.

தேர்வுக்கு செல்லலாம்.  இமேஜ் சென்று ஹு மற்றும் சேச்சுரேசன் சென்று தேர்வு செய்யுங்கள்.

Image- Hue Saturation

படம்  .3.

ஹு மற்றும் சேச்சுரேசன் சன்னல் திறந்துள்ளது.

அம்புக்குறிக் காட்டப்பட்டுள்ள இட்த்தில் நீங்கள் மாற்ற வேண்டிய வண்ணத்தை தேர்வு செய்யுங்கள். நான் நயன்தாராவி ஆடையின் வண்ணம் சிவப்பை தேர்வு செய்கிறேன்.

படம்  .4.

ஹூவின் குறியை மெல்ல இழுத்து மாற்றுங்கள்.  வண்ணம் குறிப்பிட்டப் பகுதியில் மாறும்.

நான் தேர்வு செய்த மதிப்பு  -36 ஆகும்.. 

முடிந்தது… சேமியுங்கள்.

 

திமுக தலைவர் கலைஞர்  எப்போதும் மஞ்சள் ஆடையைத்தான்  உடுத்துவார். நான் மாற்றியுள்ளது. இளம் பச்சை.

கருத்துகள் இல்லை: