வியாழன், 28 மே, 2009

2009-05-28


தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்
வெள்ளை எள் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

சாதத்தைக் குழைய விடாமல், பொல பொல என்று வேக வைத்து எடுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும். பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுத்து ஆற விடவும். பின்னர் இத்துடன் வறுத்த எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.

இந்தப் பொடியை சாதத்தின் மேல் தூவி, சிறிது ந்ல்லெண்ணைச் சேர்த்து கிள்றி விடவும்.

குறிப்பு: எள் பொடியை முன்பே செய்து வைத்துக் கொண்டால், தேவை படும் பொழுது சாதத்தில் சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.


More than a Blog Aggregator

by ANGEL MAYA
இன்று அதிகாலை தான் வந்து சேர்ந்தேன், இந்த வாரம் பதிவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன் நாளை முதல் பதிவுகள் தொடரும், பொருத்தருள்ந்தமைக்கு நன்றி


More than a Blog Aggregator

by தமயந்தி

பூட்டிய‌ வீட்டுக்குள் அலையும்
பூனையின் கால் த‌ட‌ங்க‌ளுக்கு
ப‌ய‌ங்க‌ள் கிடையாது..

பேருந்திலிருந்து இற‌ங்கும் வ‌ரை
விர‌ல்க‌ள் த‌வ‌ற்விடுவ‌தில்லை
ப‌ய‌ண‌ச்சீட்டை..

ம‌ழை விடும் வ‌ரை
வெயிலை நினைத்துப் பார்க்காம‌ல்
இருக்க‌ முடிவ‌தில்லை...

என்றாலும்..
யாரும‌ற்று ராத்திரியின் நிச‌ப்த‌த்தில்
த‌னியாக‌வே இருக்கிறார்
க‌ருப்ப‌ண்ண‌சாமி ம‌ற்ற‌ சாமி மாதிரியே...


 தமயந்தி

கொல்கத்தா, மே 28 : பன்றிக் காய்ச்சலுக்கு உரிய அறிகுறிகளுடன் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்திறங்கிய தாயும் அவரின் ஒரு வயது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கனடாவில் வசிக்கும் 43 வயதுடைய சுஸ்மிதா பிஸ்வாஸ் என்பவரும் அவரின் ஒரு வயது மகன் கிப்சன் ஆகியோர், மே 27 அன்று இரவு ஜெர்மனி வழியாக இந்தியா வந்தார்கள்.
பங்குச்சந்தை ஏறுமுகம் : மும்பை, மே 28 (டிஎன்எஸ்)  மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 138 புள்ளிகள் உயர்வை சந்தித்தது.
ஏ.ஆர்.ரகுமான் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிரனுக்காக ஒரு பாடலை இசையமைத்துள்ளார். பாடல் படமாக்கப் பட்ட விதம் உண்மையான சண்டைக் காட்சிகளைப் போலவே அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக தீவிரவாதிகளிடம் சண்டையிடுவதாகவே அமைந்துள்ளது.

இருந்தாலும், இந்த பாடலில் அவர் ஏற்கனவே இசையமைத்த "போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ" என்ற இந்தித் திரைப்படப் பாடலின் இசையையே உபயோகித்துள்ளார். கீழே, முதலில் போஸ் படப் பாடலையும், அதன் கீழே எல்லை பாதுகாப்புப் படையினரின் பாடலையும் காணலாம்.

போஸ் படத்தின் பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியது போல், அவரே இந்தப் பாடலையும் பாடியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.



கருத்துகள் இல்லை: