வியாழன், 28 மே, 2009

2009-05-28

நேற்றைய தினம் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு நேர செய்திகளை கேட்டிருப்பீர்கள். கேட்காதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

இதிலே எத்திராஜ் அன்பரசன் என்ற பிபிசி யின் நிருபர் நிறைய கேள்விகளை கேட்கிறார். அதற்கு மக்கள் பதில் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அவரின் கேள்விகளின் ஆழம் புரியவில்லை. வவுனியா தடுப்பு முகாம்களில் இருப்பவர்களுடனான் நேர்காணல் அது. இப்போது அங்கே என்ன நடைபெறுகிறது என எல்லோருக்கும் தெரியும். எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் நன்றாக பயன்படுத்தி உள்ளே மக்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர முயன்றிருக்க வேண்டும்.

இவரின் கேள்வி உள்ளே உங்களுக்கு யார் 'ஷெல்' அடித்தார்கள்? (இவருக்கு தெரியாது தானே..!) விடுதலைப்புலிகள் சுட்டார்களா? அய்யா, அவர்கள் இப்பொழுது சந்திக்கும் வேதனைகளை முன்னாலே கொண்டு வாருங்கள். கடந்த காலங்களை இப்போது சற்று கைவிடுங்கள். எல்லாம் முடிந்த நிலையில் இருக்கிறோம். யாருமற்ற நிலையில் இருக்கிறோம்.

மதிய உணவு மாலை 4.00 மணிக்கு கிடைக்கும் அவலத்தை உலக்கு நன்றாக தெரியப்படுத்துங்கள். இரவு உணவு நள்ளிரவு நேரம் கிடைக்கும் அவலத்தை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். குடிக்க , குளிக்க தண்ணீர் இல்லை. இந்த இழிநிலையை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். ஒரு முட்டு குடிசைகள் போட்டு 3000 குடும்பங்கள் ஒரு மைதான வெட்டவெளிக்குள், வெயில் சூட்டுக்குள் வாழ்கின்றனவே அதனை தெரியப்படுத்துங்கள். எந்த அடிப்படை வசதிகளுமற்ற கையகலாதவர்களாக வாழ்கிறார்களே அதனை வெளிப்படுத்துங்கள்.

உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் அருமையான சந்தர்ப்பம். அதனை மிகச்சரியான முறையில் பயன்படுத்தி உலகிற்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.

அதை விடுத்து மீண்டும் மீண்டும் நீங்கள் விடுதலைப் புலிகள் மீது சேறு பூச வேண்டும் என்பதற்காக உங்கள் கேள்விகளை உருவாக்கி மக்களிடம் செலுத்தாதீர்கள். யுத்த சத்தங்கள் முடிவடைந்த இந்நிலையில் 'ஷெல்' அடித்தது யார் ? என்ற கேள்வி உங்களுக்கு தேவைதானா? எந்தக் குழந்தையும் பதில் சொல்லும். ஆனால் அந்த மக்கள் அங்கே இருக்கும் நிலை தெரியுமா? நீங்கள் கேள்வி கேட்டு விட்டு வந்துவிடுவீர்கள். அவர்கள்தான் அங்கே காணாமல் ஆக்கப்படுவார்கள்.

நீங்கள் அதி புத்திசாலிகள் என்று உம்மை நினைக்கலாம். ஆனால் அந்த மக்களின் பதில்களில் இருந்து புரிந்து கொள்வீர்கள், மக்கள் எவ்வாறு மிகக் கவனத்துடன் நடந்து கொள்கின்றனர் என்று.

நேற்று ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருக்கும் தெரியும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை. ஆனாலும் அங்கே அனைவரும் இலங்கையை வெற்றி பெறச்செய்திருக்கிறார்கள். உங்கள் அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனத்தை அழிப்பது சரியா? அது உங்கள் அகராதியில் நீதி என்று சொல்லப்படுகிறதா...?

பார்ப்போம் பொறுத்திருந்து. எல்லா முடிச்சுகளும் விரைவில் அவிழும். காத்திருப்போம். அன்று அழிந்து இந்தா இல்லை என்ற யப்பான் இன்று எழுந்து நெஞ்சை நிமித்து கொண்டு நிற்கிறார்கள். நாமும் நிற்போம்.
பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் – ஜனாதிபதி :

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாமொன்றில் தங்கியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமொன்றில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி ஆகியோர் தம்மிடம் சரணடைந்துள்ளதாகவும் பொதுமக்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற இவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் புகைப்பட அல்பம் ஒன்றை கைப்பற்றிய போதே பிரபாகரனின் பெற்றோர் தமிழ் நாட்டில் இருந்து சென்று வன்னியில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1924 ஆம் ஆண்டு சிங்கபூரில் பிறந்த பிரபாகரனின் தந்தையார், அங்கு தபால் துறையில் ஊழியராக பணியாற்றிய பின்னர், 1947 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். ஓய்வுபெறும் போது, இவர் யாழ்ப்பாண கச்சேரியில் காணி அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் வன்னியில் தங்கியிருந்த இவர்கள் படையினர் வன்னி பிரதேசத்தை சுற்றிவளைத்த பின்னர், பொதுமக்களுடன் இணைந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத போதிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழக்கு பதிவுசெய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் அகதி முகாம்களின் வசதிகளை அதிகரிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க துரித கதியில் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.
 
அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மலசலகூடங்களுக்கு பதிலாக 2000 நிரந்தர மலசலகூடங்களை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
 
அகதி முகாம்களில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதி போரில் பிரபாகரன் பலியாகி விட்ட புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை அரசு அவரது குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்பி வந்தது.

இந்நிலையில், பிரபாகரனின் பெற்றோர் வவுனியாவில் உள்ள முகாமில் இருப்பதாக இலங்கை அரசு அதிகார்வபூர்வமாக அறிவித்து உள்ளது. இதே முகாமில் மறைந்த தமிழ்செல்வனின் பெற்றோரும் இருப்பதாக அறிவித்து உள்ளார்கள்.

பிரபாகரனின் மனைவி மற்றும் மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதாக நம்பினாலும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை...!
ந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத ஓன்று என்று உண்டென்றால் அது நட்பு மட்டும் தான்.நட்பு மட்டும் தான்ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கிறது, நட்பு நல்ல உறவை நாம் இனம் காண வழி வகை செய்கிறது,அதே நட்பு பிரிவையும் நமக்கு படம் போட்டு காட்டி விடுகிறது.

அவன் எனக்கு புதிதாக அறிமுகமானான்.

முதல் பார்வையில் வருவது காதல் மட்டுமல்ல நல்ல நட்பும் தான்

எனக்காக எல்லாவற்றையும் செய்வான்

அவனுக்காக நானும் எனக்காக அவனும்

கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்

எனது உறவுகளை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்

அவனும் தான்

"இவிங்க அட்டகாசம் தாங்க முடியலப்பா..." என்று ஊரார் கண்பட்ட கதைகளும் உண்டு

எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம்,பணம் கொடுக்கல்,வாங்கலை தவிர...

ஆனால் அதற்கும் கடவுள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தான்

"மச்சான் ஒரு பத்தாயிரம் ரூபாய் அர்ஜெண்டா வேணுண்டா"

இதுவரை கேட்காதவன் முதல் முறையாக என்னிடம் கேட்டது எனக்கு சந்தோஷம்

எதுவும் பேசாமல் எந்த சாட்சியும் இல்லாமல் பணம் கொடுத்தேன்

மாதம் ஒன்றானது,இரண்டானது, ஐந்தானது,ஆகிவிட்டது ஒரு வருடம்

பணம் மட்டும் வரவில்லை

"பிரண்டா... இருந்தாலும் இப்படியா?" எங்ககிட்ட கேட்காம கொடுக்கிறது

வீட்டில் தினமும் அர்ச்சனை

அதுவரை கோபப்படாத எனக்கு முதல் முறையாக

என் நண்பன் கற்று கொடுத்தான் கோபத்தை

"எங்கடா பணம்?"

மச்சான் கொஞ்சம் டைம் கொடுடா

ஒரு வருஷம் உனக்கு பத்தலையா?

இப்படி ஒரு பொழப்பு உனக்கு தேவையாடா?

சரளமாய் வாயிலிருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.

டேய், அவன் உன்னோட நண்பன்டா?

சொல்ல மறந்தது என் மனசாட்சி.

அவனுடைய முறைப்பு முகத்தை அப்போதுதான்

நான் முதல்முறையாக பார்த்தேன்.

ஸாரி, மச்சான் நாளைக்கே உன்னோட பணத்த வாங்கிக்க

இனிமே நீ என்கூட பேச வேணாம்

அவன்போவதையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்போதும் சொல்கிறேன்

நட்பு மட்டும் தான்ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கிறது.
சிலருக்கு கால்களில் வெடிப்புகள் மற்றும் ஒருவிதமான சொர சொரப்புகள் இருக்கும்..
பட்டு போன்ற பாதங்கள் இல்லையே என்ற ஏக்கமிருக்கும்.. அதனை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்கள்
பாத வெடிப்புக்கு:
வெதுவதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு மென்மையாக ஸ்கிரப்பர் வைத்து தேய்க்கவும்.. தொடர்ந்து இப்படி செய்வதால் தோல்கள் உதிர்ந்து ஸ்மூத்தாகும். பிறகு பாதங்களை துடைத்துவிட்டு கால் பாதங்களுக்கு தடவும் கீரிமை போடவும்.

கால்கள் சாப்ட்டாக:
தர்பூசிணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்கலாம்.
பால்பவுடர் சிறிது,ஓட்ஸ் தூள் கலந்து தேய்க்கலாம்.
ஒரு கரண்டி தயிரில் ஒரு ஸ்பூன் சீனி கலந்து கால் பாதங்களில் தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசவும்..
சிலருக்கு வெயிலினால் கால்கள் வறண்டு போய் சொற சொறப்பாக இருக்கும் அவங்க நல்ல பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை,கால்களில் பூசிக்கொள்ளலாம்கால்,கை முட்டியின் கருப்பு நிறங்களை போக்க:
தினமும் இரவு படுக்கும் முன்பு கை,கால் முட்டிகளில் ஆலிவ் ஆயில்/அல்லது பேபி ஆயில் தடவி மசாஜ் செய்துவிட்டு படுங்க. சில நாட்களில் சரியாகிவிடும்.

அரிசிமாவு பொடி,சீனி, எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப் செய்யவும்.அலசிய பிறகு புதினா சாறு,தேன்,தயிர் கலந்து தடவி 10நிமிடம் கழித்து அலசிவிடவும்.
பப்பாள்ப்பழ துண்டுகள், சிறிது சீனி சேர்த்து கை,கால் முட்டிகளில் தேய்க்கவும்.

மென்மையான செப்பல் போடுங்க:
வீட்டில் இருக்கும் பொழுது கட்டாயம் ஷாப்ட்டான செருப்பு போட்டு நடக்கவும்.
வெளியில் செல்லவும் ஷாப்ட் செருப்பை பயன் படுத்தவும். அழக்காக இருக்கு என்று உங்கள் காலுக்கு ஒற்றுக்கொள்ளாத செருப்பை போடாதிங்க.
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும். இதனால் பேக் பெயின், மற்றும் பாதங்களில் வலி ஏற்ப்படும்.
செருப்புகள் கடினமாக இருந்தால் கால்களிலும், பாதங்களிலும் வலி அதிகமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: