திங்கள், 18 மே, 2009

2009-05-18

 சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திர துப்பாக்கி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள புத்தர் ஆலயம், வேப்பேரியில் உள்ள இலங்கை வங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இலங்கை விமான நிறுவனம் (ஏர்லங்கா) போன்ற இடங்களும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை துணைத் தூதர் அம்சாவின் வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

வீண் வதந்திகளை நம்பி பதிவுகளை எழுதி எங்களை நோகடிக்காதீர்கள். எப்படா செத்து போவார்கள் பதிவு எழுதலாம் என காத்திருந்த போல சில பதிவுகள் வருகின்றன... இது ஒருவர் இருவரின் உயிர் பிரச்சனை அல்ல...என் ஈழ இனத்தின் உயிர் பிரச்சனை...புரிந்து கொள்ளுங்கள்...நீங்களும் குளம்பி, மற்றவர்களையும் குளப்பாதீர்கள்...நாம் குளம்பும் போது எதிரி வெற்றி அடைந்துவிடுவான்...அதற்கு துணை போகாதீர்கள்...நன்றி

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள நடேசன் தெருவில் சிலர் கூட்டமாக வந்து அங்குள்ள கடைகளை மூடுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி கே.பி.ஜெயின் கூறுகையில், எங்களுக்கு உஷாராக இருக்குமாறு தகவல்கள் வந்து கொண்டுள்ளன. நிலைமை தற்போது மோசமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் கடலோலக் காவல் படையுடன் இணைந்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சிறப்புப் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் என்றார். TNC

இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் பிரபாகரன் குறித்தான அஞ்சலி பதிவுகளை நிறுத்துங்கள். மரியாதை தெரிவிக்கும் சம்பிரதாய சடங்குகளை கொஞ்ச நேரம் தூக்கி எறியுங்கள். பாதுகாப்பு வலையப் பகுதியில் சிக்கியிருக்கும் இன்னும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை தடயம் இல்லாது கொன்றொழிக்க முனையும் இலங்கை அரசின் நச்சுப் பரப்புரைகளுக்கு இரையாகாதீர்கள். உண்மையை நீண்ட காலத்திற்கு மூடி வைக்க இயலாது. இருள் விலகும். அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்காக விடாது குரலெழுப்புவோம். போராடிக் கொண்டிருப்பவர்களை நம் எழுத்துகளால் சாகடிக்க வேண்டாம்.

More than a Blog Aggregator

by " உழவன் " " Uzhavan "

மக்கள் மன்றத்தில் வேட்பாளராக இல்லாமல், கொல்லைப்புறமாக வந்தவர் என்றும், இந்தியாவின் மிகப் பலவீனமான பிரதமர் என்றும் விமர்சிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன்சிங்கை, அவர் மீதான இப்படிப்பட்ட விமர்சனங்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மீண்டும் அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய மக்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து வந்து மூன்றாவது அணி, நான்காவது அணி என்று பல அணிகளாய் 15வது மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டபோது, தொங்கு பாராளுமன்றம்தான் அமையப்போகிறது என்றும், மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ ஆதரவளிக்காமல் யாரும் ஆட்சியைக் கைப்பற்றமுடியாது என்றும், ஒருவேளை மூன்றாவது அணியே ஆட்சியமைக்கக்கூடிய நிலைமையும் வந்துவிடலாம் என்றும், இப்படி பலவாறு பலராலும் யூகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஏறக்குறைய தனிப்பெரும்பான்மையாகவே காங்கிரஸ் கூட்டணியானது ஆட்சியமைக்கப் போகிறது. இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தேடித்தந்த பெருமை பெரும்பாலும் மூன்றாவது மற்றும் நான்காவது அணிக்கே சேரும்.

மேலும் படிக்க

உழவன்

கருத்துகள் இல்லை: