..
போர்க்கைதிகளாக இருந்த சிறிலங்கா படையினர் புலிகளால் விடுவிப்பு: இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றனர் வடபகுதியில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களின்போது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஏழு சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று பாதுகாப்பான முறையில் விடுவிக்கப்பட்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வெளியேறிய ஒரு தொகுதி மக்களுடன் மக்களாக வெளியேறிய இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய இந்த நான்கு கடற்படையினரும் மூன்று இராணுவத்தினரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தம்மைப் படையினர் என முன்னணிக் காவலரண் பகுதியில் இருந்த இராணுவத்தினரிடம் அறிமுகம் செய்துகொண்டனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் இரண்டு டோரா படகுகள் அழிக்கப்பட்டன.
அத்தாக்குதலின் போது கடற்புலிகளால் பிடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மூவர் இதுவரையில் விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல முகமாலைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற மோதல்களில் பிடிக்கப்பட்ட மூன்று படையினரும் விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே முள்ளியவளை மீதான படையினரின் முற்றுகை இறுகியுள்ள நிலையில் நேற்று காலை இவர்களை விடுவித்த விடுதலைப் புலிகள், இவர்கள் ஏழு பேரையும் பொதுமக்களுடன் பொதுமக்களாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த செய்தி காட்டுத் தீ போல தமிழகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், உடல் மீட்கப்பட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தேர்தல் பணிக்குப் பின்னர் விடுமுறையில் சென்ற அனைத்து போலீஸாரும் உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. TNC

சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திர துப்பாக்கி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள புத்தர் ஆலயம், வேப்பேரியில் உள்ள இலங்கை வங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இலங்கை விமான நிறுவனம் (ஏர்லங்கா) போன்ற இடங்களும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை துணைத் தூதர் அம்சாவின் வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக