
இந்த வயதில் அனுபவிக்காமல்
வேறு எந்த வயதில் அனுபவிப்பது,
என்று வாதாடும் இளைஞனே..!
எல்லாவற்றையும் அனுபவிக்கத் தயாரா நீ..?
இந்த வயதில்..
கல்லூரிக்குப் போக வழியில்லை
கரும்பு வெட்டி கன்னல் சுனையில்
கைத்தோல் உரியும்.
சோறு உள்ளங்கையில் பட்டு எரியும்.
கட்டுகள் மின்னல் வேகத்தில்
டிராக்டரில் ஏறும்.
கை நரம்பின் சாறனைத்தும்
கரும்புக்கு மாறும்.
உயிரைப் பிழியும் அந்த உழைப்பை
அனுபவிக்கத் தயாரா நீ..?
இந்த வயதில்...
உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லை..
ஓட்டை பனியனுக்குள் நுழையும் காற்று,
நெஞ்செலும்பின் வியர்வையில்
உறைந்து ஆவியாகும்.
அய்ந்தாறு சதை கொழுத்த வாழைத்தாரை
பழம் நோகாமல்
முதுகுத் தண்டில் தூக்கிப்போகும்,
கூலிக்கார இளைஞனின் ஒரு பொழுதை
ஜாலியாக நீ அனுபவிக்கத் தயாரா..?
இந்த வயதில்...
வண்டியில் வலம் வந்து,
கடலைப்போட்டு, கலாய்க்காமல்
எழுபது , எண்பது இளநீரை மிதி வண்டியில்
காய்த்ததுபோல் அடுக்கிவைத்து
எதிர்காற்றில் ஏறி மிதிக்கையில்
தென்னை மரத்தின் வேர்கள்
மிதிக்கும் கால்களில் தெரியும்..!
உடல் வழுக்கும் வியர்வை
வெட்கப்பட்டு ஓடி
இளநீரின் கண்களில் ஒளியும்..!
இளநீர் குளிர்ச்சி..-குடிப்பவனுக்கு..!
இளநீர் சூடு..-வெயிலில் திரிந்து
அதை விற்பவனுக்கு..!
இந்த சூடான அனுபவத்தை நீ
சொந்தமாக அனுபவிக்கத் தயாரா..?
அன்றலர்ந்த ரோஜாவின் பவுசு குலையாமல்
கண்ணிறைந்த காதலியின் கையில்
யாருக்கும் தெரியாமல் கொடுக்க
வாய்ப்புத் தேடும் வயசுக்காரனே..!
இந்த வயதில்..
அன்றாடம் யாரோ ஒருத்தரின் மலத்தை
அனைவரும் பார்க்கும்படி கை கூசாமல்
கரண்டியில் வாரும் இளைஞனின்
மலம் சுமக்கும் அனுபவத்தை
நீ அள்ளி அனுபவிக்கத் தயாரா..?
இந்த வயதில்...
இரத்தம் கசியும் வாழ்வுக்கெதிராக
உன்னையொத்தவர்கள் போராடித்
திசைகளைத் திறக்கையில்,
கண்ணை மூடிக்கொண்டு
தான் மட்டும் அனுபவிக்க
ஒதுங்குவதைவிட அருவருப்பானது
வேறு உண்டா..?
இளமையை அழகாக்கும் சமூக உணர்வை
அனுபவிக்க ஆசைப்படு..!
வா..! இணைந்துகொள்..
இந்த வயதில் போராடாமல்
நீ எந்த வயதில் போராடப் போகிறாய்..??!!
-துரை.சண்முகம், புதிய கலாச்சாரம் செப் 2007
புகைப்படம் நன்றி: மரக்காணம் பாலா
தென்மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் தி.மு.க., வென்றுள்ளதால் மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக அழகிரி பொறுப்பேற்க உள்ளார். - செய்தி.
பதினைந்தாவது நாடாளுமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 150 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 73 பேர் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பு இந்தச் கணக்கை வெளியிட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் அமைந்த 14 வது நாடாளுமன்றத்தில் 128 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும் இவர்களில் 55 பேர் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லித்தல்பாய் ஹன்ஸ் ராஜ்பாய் ரதாதியாவின் மீதுதான் அதிகமான கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவர் மீது 16 வழக்குகள் உள்ளன. அவற்றில் 5 கடும் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்குகளாகும்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்காளான நாடாளுமன்ற உறுப்பினர்களில் 42 பேர் பாரதீய ஜனதாக் கட்சியைச் சார்ந்தவர்கள் இந்த விஷயத்தில் பி.ஜே.பி. முதலிடத்தில் நிற்கிறது. அடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சி.
இக்கட்சியைச் சேர்ந்த 41 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளோரில் 8 பேர் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
மாநில வாரியாக, கிரிமினல் குற்றச்சாட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வருமாறு:உத்தரப்பிரதேசம் - 31 பேர். இவர்களில் 22 பேர் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. மகாராஷ்டிரா - 23 பேர். இவர்களில் 9 பேர் கடும் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள். பீகார் - 17, ஆந்திரப் பிரதேசம் - 11, குஜராத் -11.
இந்தப் பட்டியல் போக, இன்னொரு பட்டியலையும் இந்தத் தேசியத் தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இது நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக் கணக்குப் பற்றியதாகும்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது தங்களது சொத்து விபரம் பற்றி அவர்கள் அளித்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள விபரங்கள் அடிப்படையிலேயே தேசியத் தேர்தல் கண்காணிப்பகம் இதனைத் தொகுத்துள்ளது.
நமது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 300 பேர் கோடீஸ்வரர்கள். கடந்த நாடாளுமன்றத்தில் 154 உறுப்பினர்கள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர். இந்தமுறை இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இருமடங்காக உயர்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கம்மம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நம்மா நாகேஸ்வரராவ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே பெரும் பணக்காரர்.
இவர் அளித்துள்ள சொத்தின் மதிப்பு 173 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த பெரும் கோடீஸ்வரர் அரியானா மாநிலத்தின் குருஷேத்ரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிந்தால். இவரின் சொத்து மதிப்பு 131 கோடி ரூபாய்.
இந்தக் கோடீஸ்வரர்ளெல்லாம் சேர்ந்துதான் இந்தியாவில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் 70 சதவீத இந்தியர்களின் நலன்களைக் காக்கப் போகிறார்களாம். நம்புவோமாக!
ஈழத்தமிழ் பெண் சொன்ன செய்தி
புலிகள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாள அட்டை வைத்துக் கொள்ளும் வழக்கம் கிடையாதென்றும்,
போராளிகள் கழுத்தில் சிகப்பு மற்றும் கருப்பு நிறக் கயிறுதான் அணிந்திருப்பர் என்றும் சிகப்பு நிறக்கயிற்றில் அடையாள தகடும், கருப்பு நிறத்தகட்டில் நஞ்சுக்குப்பியையும் அணிந்திருப்பர் என்றும் தெரிவித்தார்,
நான் சந்தித்த ஈழத்தமிழ் பெண்.
மேலும் அவர் கூறுகையில்,
பிரபாகரன் அடையாள அட்டை வைத்திருந்தார், அந்த உடலை கைப்பற்றிவிட்டோம்,
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முகத்தில் சுருக்கங்களோடு இருந்தவர், நீண்ட இடைவெளியில் போர்ச்சூழலில் வாழ்ந்த பின்பு, குண்டு தாக்கியதில் முகத்தில் இளமை வந்துவிட்டது.
என்றெல்லாம் கூறுவது தூய பொய், இது பொய்யாக உருவாக்கப்பட்டது.
இது தொடர்பான மற்ற பதிவுகள்:
http://kundumani.blogspot.com/
http://veltharma.blogspot.com/2009/05/blog-post_19.html









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக