சனி, 23 மே, 2009

2009-05-23






அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ, மற்றெதன் பேராலோ நடத்தப்படக்கூடாது.

----------தந்தைபெரியார் - "குடிஅரசு", 29.9.1940
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை குறித்து விவாதிப்பதை தடுக்கும் வகையில், ஐ.நா.விடம் ஒரு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது இலங்கை அரசு.

ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை, போர்க் குற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதைத் தடுக்கும் வகையில் ஐ.நாவுக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளது இலங்கை.

அதில் இலங்கையில் நடப்பது அந்த நாட்டின் உள் விவகாரம். அதில் பிற நாடுகள், அமைப்புகள் தலையிட முடியாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் இலங்கை கோரியுள்ளது.

இலங்கையின் இந்த தீர்மான ஆவணத்தை ஆதரித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் , எகிப்து, மலேசியா, கியூபா, இந்தோனேசியா, பொலீவியா, நிகாரகுவா, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா ஆகிய 12 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.


Terrific Rock Driving - Terrific Four Wheel Vehicles for Rock Driving


















சிங்கள இனவெறி அரசாங்கத்தின் படுகொலைத் தாக்குதலால் மனித இனம் இதுவரையில் கண்டிராத உயிர் இழப்பிற்கும், உடல் உறுப்புகள் இழப்பிற்கும், கற்பிழப்பிற்கும், உடமைகள் இழப்பிற்கும் ஆளாக்கப்பட்டு உணவின்றி, குடிநீரின்றி, வைத்திய உதவிகள் இன்றி புழுவாகத் துடிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மலேசியர்கள் பத்துமலையில் அணித்திரள அழைக்கப்படுகிறார்கள்.

  • நாள்:- ஞாயிற்றுக்கிழமை 24.05.09
  • நேரம்:-காலை மணி 10.00 - 1.00 வரையில்
--------------------------------------------------------------------------------------------------

Mass gathering to protest against ethnic cleansing by Srilanka government and empathise with Tamils in Eelam.
Please Come with your family.Supported by members of Parliment and NGO's

SUNDAY 24 MAY 2OO9 - BATU CAVES - TIME 10.00 AM TO 1.00 PM


மலேசியத் தமிழ் நெஞ்சங்களே,
நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு நமது அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்கு அலையென திரண்டு வாருங்கள்!!

கருத்துகள் இல்லை: