வியாழன், 28 மே, 2009

2009-05-28


டங்ஸ்டன் இழை கொண்ட மின் விளக்குகள் முதல் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் ஏராளம் ஏராளம்.

அவற்றின் முன்னேறிய தொழில்நுட்பங்கள்தான் நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலானவைகள் என்றால் அது மிகையில்லை.

அப்படிப்பட்ட அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு குறை இருந்தது.

அவருக்கு லேசாக காது கேட்காது. ஆனால் அந்த ஊனத்தையே ஊனமாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

ஒரு முறை அவரிடம், உங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது.

அதாவது, எனக்கு காது சரியாக கேட்காது. எனவே அடுத்தவர் திட்டினாலும், புகழ்ந்தாலும் எனக்கு கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலையை பார்க்க முடிந்தது. அதனால் தான் நான் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது என்று கூறினார்.

ஊனத்தையே ஊனமாக்கும் வித்தை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது. அதனை எல்லோரும் கற்றறிவோம்

ரேஷ‌ன் மா‌‌தி‌ரி அள‌ந்துதா‌ன் வரு‌கி‌ன்றன எ‌‌ந்‌திர‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌திக‌ள். ச‌ன் ‌பி‌க்ச‌ர்‌ஸ் பட‌த்தயா‌ரி‌ப்பை ஏ‌ற்று‌க் கொண்ட பின் எந்திரனிடமிருந்து எட்டியே நிற்கின்றன ஊடகங்கள்.

சமீபத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார் ஷங்கர். வழக்கமான செக்யூரிட்டி, கெடுபிடி, அடையாள அட்டை எல்லாம் உண்டு. நடனக் காட்சியை அமைத்தவர் பிரபுதேவா.

இந்தப் பாடலை கிராபிக்ஸ் செய்வதற்கு வசதியாக ப்ளுமேட்டில் படமாக்கினார் ஷங்கர். சரி, எந்த மாதிரி கிராபிக்ஸ் செய்யப் போகிறார்?

அது பரம ரகசியம்! அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? நாம் விசாரித்ததில் நூற்றுக்கணக்கான ரஜினிகளை வெவ்வேறு காஸ்ட்யூமில், வெவ்வேறு ஸ்டைல்களில் திரையில் உலவவிடப் போகிறாராம்.

ஒரு ரஜினிக்கே விசில் பறக்கும். நூறு ரஜினி என்றால்..? அதகளம்தான் போங்க!

கேள்விக்குறியுடனேயே கேட்க வேண்டியிருக்கிறது தீராத விளையாட்டு பிள்ளை பற்றிய எந்தச் செய்தியையும்.
திரு இயக்கத்தில் விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும் குழப்பமே நடிகைகள் தான். இதில் விஷாலுக்கு மூன்று ஜோடிகள். வானிலை அறிக்கை மாதிரி தினம் ஒரு செய்திகள். த்ரிஷா, ரீமாசென், பிபாசாபாசு, தனுஸ்ரீதத்தா, ப்ரியாமணி என அரை டஜன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன ஆனால் அதிர்ஷ்டம் அடித்ததென்னவோ ஸ்ரேயாவுக்கு.

தோரணையைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளையில் நடிக்கிறாராம் ஸ்ரேயா. அப்படியும் இரண்டாவது ஜோடி குறைகிறதே. லேட்டஸ்ட் தகவல், இந்தி நடிகை நீது சந்திரா தீராத விளையாட்டுப் பிள்ளை யூனிட்டின் பரிசீலனையில் இருக்கிறாராம்.

யாவரும் நலம் படத்தில் ஹோம்லியாக வந்து போன நீது சந்திரா, ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் (திமென்) அட்டைப் படத்துக்கு ஏறக்குறைய ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தைப் பார்த்துத்தான் நீதுவை விஷால் டீமுக்குப் பிடித்துப் போனதாக கிசுகிசுக்கிறார்கள்.

இந்த தேடுதல் வேட்டையையே ஒரு படமாக எடுக்கலாமே!

ராஜா‌திராஜா என பெயர் வைத்து ர‌ஜினியின் தர்மதுரை பாதிப்பில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. லாரன்சின் உச்ச‌ரிப்பு முதல் உடலசைவுவரை அனைத்திலும் ர‌ஜினி... ர‌ஜினி...

கிடைக்கிற வேலை செய்து அண்ணன்கள் மூவரையும் பெ‌ரிய ஆளாக்குகிறார் லாரன்ஸ். அப்பாவின் கடைசி ஆசையாம். ஆனால் அவர்கள்...? ஏழைகளுக்கு உதவுவார்கள் என்று பார்த்தால் சமூகத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறார்கள் மூவரும். அவர்களுக்கு பார்ட்னர் கஞ்சா விற்று மினிஸ்டராகும் மும்தா‌ஜ். நால்வரையும் அவர்கள் ரூட்டிலேயே சென்று நளபாகம் செய்கிறார் லாரன்ஸ்.

மூணு வ‌ரி கதைக்கு முள்ளங்கி பத்தையாக மூன்று ஹீரோயின்கள். முதல் பகுதி மீனாட்சிக்கு என்றால் இரண்டாம் பகுதியை பங்குப் போட்டுக் கொள்கிறவர்கள் ஸ்னிக்தாவும், காம்னாவும். இவர்கள் தொப்புளை போகஸ் செய்வதிலேயே குறியாக இருக்கிறது சுரேஷ் தேவனின் கேமரா.

படத்தின் சவுண்ட் பார்ட்டி கருணாஸ். பாடலும் பின்னணி இசையும் இவர்தானாம். பார்த்து கண்ணா... பறக்கிற ஆசையில் இருக்கிறதை விட்டுரப் போறீங்க. கருணாசுடன் இணைந்து லாரன்ஸ் தனது அண்ணன்களுக்கு தரும் டெலிபோன் ட்‌ரீட்மெண்ட் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸியம். அதைவிட அரிவாள் முனையில் நடக்கும் நாட்டாமை மகள்கள் திருமணம் படு ஜோர்.

ஆ.. ஊ.. என்றால் சேலையை உருவிப்போட்டு பன்ஞ் டயலாக்காக உறுமுகிறார் மும்தா‌ஜ். சொந்தக் குரல் வேறு. சோதிச்சிட்டீங்க தாயீ. இழுத்து விடுகிற சிகரெட் புகையில் மட்டும் யதார்த்தமோ யதார்த்தம். நடனத்தில் தனிப் பாணியை பின்பற்றும் லாரன்ஸ் நடிப்பிலும் அதை தொடர்ந்தால் நலம். அண்ணன்களில் போஸ் வெங்கட் தேறுகிறார்.

இறக்கும் தருவாயில் அண்ணன்களை பெ‌ரிய ஆளாக்கு என கடைசி மகனிடம் சத்தியம் வாங்கும் அப்பா, பப்ளிக்காக தலையில் ஆப்பு அடித்து கொலை செய்யும் போலீஸ், கக்கூஸ் அருகில் கஞ்சா விற்று மந்தி‌ரியாகும் பெண்... லா‌ஜிக்கை லா‌ரி ஏற்றி அனுப்பியிருக்கிறார் இயக்குனர். எஞ்சுவது ராணிகளின் கவர்ச்சி ஆட்டம் மட்டுமே.

கதையில் கோட்டைவிட்டு கவர்ச்சி கறிவேப்பிலையை தூவியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். மணக்கும் என்று நினைத்திருப்பார்... கசப்போ கசப்பு.


More than a Blog Aggregator

by Jaffer
ன்றைய தினம் F&O Expiry தினம். நாளை இம்மாதத்தின் இறுதி வியாபார நாள். இந்த இரு தினங்களில் விஷேசமாக சொல்லுவதற்கோ அல்லது டெக்னிக்கல் லெவலை பின்பற்றவோ எந்த ஒரு அடிப்படையும் கிடைக்காது.

நேற்றைய அமெரிக்க சந்தைகள் Profit Bookingஐ சந்தித்துள்ளது. காலையில் துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் மிதமாகவே துவங்கியுள்ளது. இதனை வைத்துக் கொண்டும் நம் சந்தையின் போக்குகளை இன்று முடிவு செய்ய முடியாது. ஆதலால் இன்று பொறுமையாக வேடிக்கைப் பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். சந்தேகத்திற்கு இடமான நாட்களில் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடுவது லாபமானது அல்ல.


More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Google's GPhones - Technology Innovation







கருத்துகள் இல்லை: