வெள்ளி, 22 மே, 2009

2009-05-22

இந்த பதிவு என் மனக்கூடு பதிவின் எதிர்வினை...

//ஒரு வீட்டுக்கே இப்படி இருக்கே, ஒரு நாட்டை விட்டு வருபவர்கள் மனநிலை ...... //
என் வீட்டை பற்றி நான் எழுதியது சிலரை நெகிழ வைத்ததால் இந்த முயற்சி.

இலங்கை தமிழ் மக்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்க்கில்லை, என்னால் முடிந்தது, 5 இலங்கை அகதிகளில் பெண் குழந்தைகளுக்கு புத்தகம், உடைகள் மற்றும் நண்பர்களிடம் சொல்லி சிறு உதவிகள் மட்டுமே செய்கிறேன். ஒரு சமூக அமைப்பிடம் சில உதவிகள் கேட்டுள்ளேன், கிடைப்பதற்க்கான சத்திய கூறுகள் உள்ளது, கிடைத்தால், மேலும் சில நண்பர்கள் உதவியுடன் ஒரு அமைப்பாக பதிவு செய்து அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் செய்ய திட்டம். யாரோ ஒருவர் அல்லது ஒரு அமைப்பு அனைத்து உதவிகளும் செய்ய முடியாது, ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு இது தேவலை என்பதால் இந்த முயற்சி... எங்கோ கண் கண்காணாமல் இருக்கும் மக்களுக்கு இங்கிருந்து துறைமுகத்தில் பொருட்களுடன் புகைப்படத்திற்கு சிரிப்பதை விட, இங்கிருக்கும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்வோம்.

நல்ல உடை ( பழைய கிழிந்ததை தயவு செய்து பாத்திரக்கரருக்கு போடவும்) போடும் நிலையில் உள்ள உடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மருந்துகள், புத்தகங்கள் மற்றும் என்ன உபயோகப்படும் என்று நினைக்கறீங்களோ அதை கொடுங்கள். தயவு செய்து பணம் கொடுக்காதீர்கள், அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. முடிந்தால் எதாவது வேலை கொடுங்கள், அல்லது வேலை கற்று அவர்கள் வாழ்நாள் முழுதும் பிழைக்க வழி சொல்லுங்கள்.நம்மால் ஆனது. முடிந்தால் யாராவது அரசாங்க அதிகாரத்தில் இருந்தால் இலங்கை அகதிகளுக்கு ஏதேனும் அரசு உதவித்திட்டம் இருந்தால் கூறுங்கள், முயற்சி செய்வோம். ஊடகங்கள், சமூக அமைப்புகள், தனி நபர்கள் ஒன்று சேரலாம்.

ஏன் அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களே இதை சேகரித்து அல்லது அந்த முகாமிற்கு சென்று என்ன தேவை என்று பார்த்து முடிந்ததை செய்யலாம். யார் மறுத்து கூறினாலும் இலங்கை என்றால் ஒரு பயம் இருப்பது உண்மை. ஆகவே உதவி செய்யப்போய் உபத்திரவம் ஆக வேண்டாம். இது மட்டுமே செய்கிறோம் என்று தெளிவாக சொல்லிட்டு ஒரு பிரபல பக்கபலத்துடன் செய்யலாம். fm ரேடியோ, உள்ளூர் பெரிய மனிதர்கள், பத்திரிகை, லோக்கல் டிவி சேனல் என்று எதாவது ஒன்றை துணைக்கு அழைப்பது உத்தமம். இது என் கருத்து மட்டுமே. அணிலாக ஆரம்பிக்கலாம் ,ராமர் வரும் வரை....
கடைசியில் 2000 பேருடன் இருந்த அனைவரையும் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியே வந்து இலங்கை ராணுவத்துடன் சரணடையக் கூறினார் கே.பி. இதை நம்பிய புலிகள் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த மறுகணமே. புலி உறுப்பினர்கள் கொல்லப்பட அதன் தலைமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இதைக்கேட்ட மகிந்த நாடுதிரும்பினார். கே.பீ உடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தப்படி அனைத்துத் தலைமைகளையும் கொன்றுவிட வேண்டும் என்பதையே இந்திய அரசு இலங்கைக்கு வலியுறுத்தியது. அப்போதான் கே.பீ இன் பணத்திற்குச் சாட்சி இராது. இதனால் இந்தியா [...]


More than a Blog Aggregator

by குருத்து

பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
பல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
பொய்யின் முகத்தில்
சவக்களை.

மாற்றம்... இன்னும்
தொலைவில் இல்லை

பின்குறிப்பு : நான் எழுதிய "சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை" என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. அந்த கவிதையை மீண்டும் படித்துப்பார்த்தால்... இந்த தேர்தலுக்கும் பொருந்துவருகிறது. ஆகையால் மீள்பதிவு செய்திருக்கிறேன் சில மாற்றங்களுடன்.

கருத்துகள் இல்லை: