[வெள்ளிக்கிழமை, 22 மே 2009]
தமிழகத்தில் நேற்று அதிகாலை காலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் புகழுடல் நேற்று இரவு கொழும்பு கொண்டுவரப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டபோதிலும் எதிர்பாராத காரணங்களால் அது இன்று இரவே கொழும்பு கொண்டு வரப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கொண்டுவரப்படும் புகழுடல் நாளை காலை 9:00 மணி தொடக்கம் இரவு வரையில் கொழும்பு, பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்ச்சாலை ஒன்றில் பொதுமக்களின் வணக்கத்துக்காக வைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் அவரது சொந்த ஊரான அம்பாறைக்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை மறுநாள் காலை தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரையில் மக்கள் வணக்கத்துக்காக வைக்கப்படும். இதனையடுத்து இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
60 வயதான பத்மநாதன் தமிழ்நாட்டில் தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காகச் சென்றிருந்த வேளையில் திடீரென இருதய நோய்க்குள்ளானதால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

வேப்பம்பழங்களாகப் பிதுங்கிவழியெங்கும் வழிபவர்களில்
சாகசம் புரியும் ஒருவனைத் தேடுகிறாள்.
மேலேறுவதற்கு
சரிந்து
ஒரு காலை மடக்கிக் கொடுக்கும் யானையைப்போல
இமைகள் இணையும் கூர்முனைகளில் அவள் அனுமதிக்கிறாள்.
தொத்துபவரெல்லாம்
மையிட்ட விளிம்புகளை
மரநிழலுள்ள நடைபாதையாக உபயோகிக்கத் தொடங்குகிறார்கள்.
அதை அவள் விரும்புவதேயில்லை.
மேடேறும், சரியும் நடைகளில்
பரவசத்தைப் பதற்றத்தில் தொலைப்பவர்;
அந்தரத்துக் கயிற்றில்
அடிஅடியாய் நடப்பதுபோல் கடப்பவரையெல்லாம்
கவலையேகொள்ளாமல்
பாறாங் கல்லில் விழுந்து சிதறிப்போக
இமைத்து தள்ளிவிடுகிறாள்.
கால் கட்டை விரலை அழுத்தி வேகமெடுத்து
தடைகள் தாண்டி ஓடிவந்து
மேலிமை மைய பீலியின் உயரத்துக்கும்
மேலெழும்பி
கிறுகிறுவென குட்டிக்கரணங்ககககககள் அடித்தபடியே
கீழறங்கி
கைகளை உயர்த்தி விரைத்து
ஒருவன் நின்றபோது மட்டுமே
அவள் மென் கண்களின் செந்நரம்புகள்
லேசாகப் புடைத்திருக்கின்றன.
நன்றி: ஆனந்தவிகடன்
அய். நாவில் குப்பை கொட்டும் பொய் நா(ய்)(க்)கள்
அய். நா சபைக்கு யார் தலைமை செயலாராகத் தகுதி படைத்தவர்கள் என்பது உலக மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனென்றால் அவர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.(நேரடியாக தேர்ந்தேடுப்பவர்களுக்கே துரோகிகளைத் தெரிவதில்லை)
ஓர் இனப்படுகொலையை திட்டமிட்டு வேடிக்கை பார்க்கும் மனிதாபிமானமற்ற மனிதப் பிறவிகள் இந்தப் பதவிக்கு வர தகுதியற்றவர்கள் என்பது மட்டும் நமது பார்வையில் தெரிகிறது. அதற்கு இந்த முன்னாள் தலைமை செயலாளரின் கோரிக்கை ஓர் எடுத்துக்காட்டு.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் வாயிலாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தத்தில், வெற்றிகள் பிரச்சினைகளின் தீர்வாக அமையாது என்பதை அரசாங்கம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இழப்புகளை ஈடு செய்வதன் வழியாகவும் அவர்களை அவசரமாக நல்ல நிலைக்கு கொண்டுவருவதன் மூலமாகவும்தான் தீர்வுக்கு கொண்டுவரமுடியும்.
இலங்கை அரசாங்கம் அப்படி செய்யத்தவறினால் வருங்காலத்தின் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்'' தெரிவித்துள்ளார்.

ஒரு பணக்கார பொண்ணு, தன்னோட காதலனை காபி சாப்பிட கூப்பிடுறா. அவனும் சம்மதிக்கிறான். ஒரு ஃபிளைட் பிடிச்சு அயல்நாட்டுக்கு போயி ஒரு காபி மட்டுமே குடிச்சிட்டு திரும்புறாங்க ரெண்டு பேரும். அவ 'காபி எப்பிடியிருக்கு?'ன்னு கேட்க, 'இந்த காபியிலே ருசியில்லே, உன் பணக்கார திமிருதான் இருக்கு'ன்னு சொல்லி மூக்கை உடைக்கிறாரு ஹீரோ. இப்படி 'எக்ஸ்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி'ன்னு தொடங்குற பாடலின் ஆரம்ப காட்சியை சொன்னார் கந்தசாமி பட டைரக்டர் சுசி கணேசன்.
இதுக்கு ட்யூன் போடறதுக்கு முன்னாடி, ரொம்ப கேஷ¨வலா வரிகள் இருக்கனும்னு டைரக்டர் சொல்ல, முதல் வரியை எடுத்துக் கொடுத்தாராம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். 'எக்ஸ்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி' என்று! அதுக்கு பிறகு பாடலை இப்படி தொடர்ந்தாராம் விவேகா. ஒரு காபி குடிப்போம், கம் வித் மீ! ஹாட்டா கோல்டா நீயே தொட்டுப்பாரு!
திடீர்னு இந்த பல்லவி என்னுடையது என்று கோர்டுக்கு போனார் வீ.இளங்கோங்கிற கவிஞர். தீர விசாரிச்ச நீதிமன்றம், இந்த பாடலை எழுதியது விவேகா, வீ.இளங்கோன்னு இரண்டு பேரு பேரையும் போடணும்னு சொல்லிருச்சு. (முதல் வரியை எடுத்துக் கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத்தை விட்டுட்டீங்களே?)
'இந்த படத்திலே எல்லா பாடலையும் ஒரேயொரு கவிஞர்தான் எழுதனும்னு ஆரம்பத்திலேயே முடிவெடுத்திட்டேன். அதுக்கு சரியா அமைஞ்சாரு கவிஞர் விவேகா. எல்லா பாடலையும் அற்புதமா எழுதி, இவரே ஒரு பாடலையும் பாடியிருக்காரு' என்றார் சுசிகணேசன் சந்தோஷமாக. இப்போ வீ.இளங்கோ என்ற பெயரையும் டைட்டிலில் சேர்க்கும்படி ஆயிருச்சு.
அது போகட்டும்... ஒரு பாடலுக்கு பல்லவியை மூணு பேர் எழுதியிருக்காங்கன்னா, அதுவே ஒரு கின்னஸ் சாதனைதான்!

மலையுச்சியிலேர்ந்து மல்லாக்க விழுந்தாலும், ஒரு சாண் கயிறை புடிச்சு உசுரை காப்பாத்திகிட்ட மாதிரி இருக்காரு நயன்தாரா! வேறொன்றுமில்லை. இது ஆதவன் கொடுத்த நம்பிக்கை. கடந்த வருடத்தின் 'சூப்பர் பிளாப் ஹீரோயின்' என்ற பெயரை அசால்டாக தட்டிச் சென்ற நயன், இந்த வருடம் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். காரணம், ஆதவன்! கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா.
ஒவ்வொரு முறையும் இவர் சென்னைக்கு வரும்போதெல்லாம், நதி வெள்ளம் கரையை உடைச்சுகிட்டு ஊருக்குள்ளே வந்த மாதிரி ஒரு பரபரப்பு இருக்கும். மேனேஜர் எங்கே? பிஆர்ஓ எங்கே? ஏன் இப்படி ஒரு நியூஸ் வந்திச்சு?ன்னு உலுக்கி, கலக்கி ஒரு அழுத்தமான அட்டென்டன்ஸ் போடுவார். இந்த முறை அப்படியில்லையாம். வந்தோமா? நடிச்சோமா? என்று சைலன்ட் ட்ரிப்பாகவே இருக்கிறது நயனின் சென்னை வரவு. தமிழ் பத்திரிகைகளை எப்போதுமே படிப்பதில்லை அவர். இப்போது ஆங்கில செய்திகளையும் கவனிப்பதில்லையாம்.
வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவானேன் என்ற எண்ணம்தான். பிரபுதேவாவுக்கும் உங்களுக்கும் காதல்னு எழுதி கண் சிவக்க வைக்கிறவங்களை கண்டுக்காதீங்க என்று அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வைஸ்தான் இந்த 'நியூஸ்' புறக்கணிப்புக்கு காரணம்! இதற்கிடையில் இன்னொரு செய்தியும் உலவுது. தன்னோட அடுத்த படத்திலே நடிக்க, நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தாராம் சிம்பு. சரின்னு சொல்ல நயன்தாராவுக்கு என்ன செலக்டிவ் அம்னீஷியாவா இருக்கு?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக