[வெள்ளிக்கிழமை, 22 மே 2009]வடபகுதியில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்ற பகுதிகளை இரகசியமான முறையில் அவதானித்த அமெரிக்காவின் இராணுவ செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில், போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த முடியுமா என்பதையிட்டு அமெரிக்க அதிகாரிகள் கவனமாகப் பரிசீலனை செய்துவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அமெரிக்க இராணுவச் செய்மதி மூலம் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள் முன்னர் பெறப்பட்ட ஒளிப்படங்களை விடவும் அதிஉயர் திடத்தன்மையைக் (higher resolution) கொண்டதாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் 'ரைம்ஸ் ஒன்லைன்', அடுத்த வாரம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஆராயப்படும்போது போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒளிப்படங்கள் மேரிலான்டில் உள்ள National Geo-spatial Intelligence Agency என்ற நிறுவனத்தினால் பெறப்பட்டவை. பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பெறப்பட்ட இந்த ஒளிப்படங்கள், ஏனைய அரசாங்க நிறுவனங்களின் தேவைகளுக்காகவும் வழங்கப்படுகின்றது.
போர்ப் பகுதிகளில் பெறப்பட்ட இந்தப் படங்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு தம்மால் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவற்றில் சில ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டதாகவும் இந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
[வெள்ளிக்கிழமை, 22 மே 2009]ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பை சென்றடைவார் என அறிவிக்கப்படுகின்றது. போருக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்குப் பயணம் செய்யும் இவர், முகாம் நிலைமைகளையும் அங்குள்ள தேவைகள் தொடர்பாகவும் ஆராய்வார். அதன் பின்னர் முன்னர் 'பாதுகாப்பு வலயம்' என அழைக்கப்பட்ட போர்ப் பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று பார்வையிடுவார் எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், பான் கீ மூனின் நிகழ்ச்சி நிரல், குறிப்பாக அவர் கொழும்பில் யார் யாரைச் சந்திப்பார் என்ற விபரங்கள் இதுவரையில் இறுதியாக்கப்படவில்லை எனவும் ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.
இருந்தபோதிலும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலரை அவர் சந்திப்பார் எனத் தெரிகின்றது.
[வெள்ளிக்கிழமை, 22 மே 2009]
வடபகுதியில் இறுதிக்கட்டப் போர் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி தமிழர்களை கொன்றது தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையினருக்கும் இடையே, உச்சக்கட்ட போர் நடைபெற்று வந்தபோது, சிறிலங்கா படையினர் போர் மரபுகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் பலவும் குற்றம் சாட்டியிருந்தன.
அத்துடன், சன நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது வாக்குறுதியை மீறும் வகையில் தொடச்சியாக ஆட்டிலறி எறிகணைகளையும், கொத்துக்குண்டுகளையும் சிறிலங்கா படையினர் பயன்படுத்தியதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் செய்மதி ஒளிப்படங்கள் தம்வசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.
இந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கான உடலங்கள் சிதறிக்கிடக்கின்றன. மருத்துவ வசதிகள் இருக்காமையாலும், மருத்துவமனை தாக்குதலில் அழிக்கப்பட்டமையாலும் படுகாயமடைந்த பலர் பராமரிப்போ சிகிச்சையோ இல்லாமல் மரணமடைந்தனர்.
போரின் இறுதி இரண்டு நாட்களிலும் அதாவது கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பதுங்குகுழிகளுக்குள் உயர் பாதுகாப்புக்காக இருந்தவர்கள் பலர் அதற்குள் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டு அல்லது குண்டு வீசிக் கொல்லப்பட்டு உடலங்கள் அனைத்தும் பதுங்குகுழிக்குள் வைத்தே மணலால் மூடப்பட்டது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்துவிட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் சிறிலங்கா அரசு திங்கட்கிழமை அறிவித்தது.
போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பான சூழ்நிலை இருப்பதால், தமது பணியாளர்களை அப்பகுதிக்கு அனுப்ப பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள், அரசை வலியுறுத்தி வருகின்றன.
நாளைய நாள் கொழும்பு செல்லவிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட 'பாதுகாப்பு வலயம்' என முன்னர் அறிவிக்கப்பட்ட போர்ப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார்.
இந்நிலையில், போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தடயங்களை அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவம் இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
போர் பகுதியில் சிதறிக்கிடக்கும் உடலங்கள் அவசர அவசரமாக இராணுவத்தால் அகற்றப்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக இயங்கி வந்த மருத்துவமனை கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் இல்லினாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் அண்டனி குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் மூலம் இழப்புக்களைக் குறைத்துக்காட்டுவதற்கும் பாரிய கனரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை எனக் காட்டிக்கொள்வதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

வடபகுதியில் சிறிலங்கா படையினர் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் முகமாக கொழும்பு மற்றும் சிறீ ஜெயவர்த்தனபுர பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், பேரணி ஒன்றையும் கொழும்பில் இன்று நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இராணுவ வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்கனவே நேற்று முன்நாள் அரசாங்க, வங்கி மற்றும் தனியார் துறையினருக்கான சிறப்பு விடுமுறை ஒன்றை அறிவித்த அரசாங்கம், இன்று கொழும்பு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியிருப்பதுடன் பேரணியையும் நடத்தவிருக்கின்றது.
அத்துடன், இன்று தொடக்கம் இன்னும் ஒருவார காலப் பகுதிக்கு தேசிய ரீதியாக வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதனை முன்னிட்டு மாவட்ட ரீதியாக விழாக்கள், பேரணிகள் போன்றன ஆரசாங்க ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன.
இன்று மாலை கொழும்பு கம்பல் பூங்காவில் இருந்து புறப்படும் பேரணி சிறீ ஜெயவர்த்னபுர நாடாளுமன்ற வளாகத்தைச் சென்றடையும் எனவும் அங்கு இடம்பெறும் பொதுக் கூட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் உரையாற்றவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக