1.கொண்டயம்
நமக்கு வாழ்க்கையில் பயன்படுத்திய சொற்கள் என்றால் அது கொம்பும் கொண்டையும் தான். அவை இரண்டும் தலைக்கு மேலுள்ளவற்றைக் குறிப்பது. அதாவது உச்சியை, அது போல தான் கொண்டயம் என்னும் சொல்லும் கொங்கு வட்டாரத்தில் போர், வீட்டின் கூரை, மரம் போன்றவற்றின் உச்சியைச் சுட்டிக் காட்டும்.
வழக்கில் சொல்லும் போது " கொண்டயம் மேயோனும் கொண்டயத்துல ஏறிக்கிட்டான் " என்பதுண்டு.
கொடு - கோடு
கொண்டை - கொண்டயம் - கொம்பு
என்று எப்படி எல்லாம் தமிழ்ச் சொல் உருவாகின்றன.பாருங்கள்
2.சூட்டிப்பு
சுறுசுறுப்பையும் கவனிப்பையும் தெரியும்.அது என்ன சூட்டிப்பு ? சுறுசுறுப்பாக இருப்பவர்கள் விவரமாக இருப்பார்கள் என்று சொல்லுவதற்கில்லை. அந்த இரண்டையும் ஒருங்கே இணைய பெற்ற தன்மை குறிப்பது தான் சூட்டிப்பு என்பது. பேச்சு வழக்கில் " பையன் நல்ல சூட்டிப்பு " என வழங்கக் காணலாம்.
3.மொடக்கடி
அடிக்கடி வீட்டில் குழந்தைகள் மொடக்கடி செய்து நெருக்கடி உண்டாக்கும்.மொடக்கடி என்றால் முரண்டு பிடித்தல், ஒத்து வராமை, பிடிவாதம் என்று பொருள் படும்.
முகர்ந்து - மோந்து - மோப்பம் என்று திரிந்த வண்ணம்
முரண்டு -மொரண்டு என்று திரிந்து அழகான ஒரு சொல்லைத் தந்து உள்ளது.
4.ஒணத்தி
குழம்பு நல்ல ஒணத்தியாக இருக்கிறது என சொல்லுவதுண்டு.இங்கே ஒணத்தி என்பது சுவையாக என்று பொருள் படும்.
உண்ணும் பொருள் உணவு எனபது போல்,உண்ணும் உணவு சுவையாக இருந்தால் உணத்தி (ஒணத்தி) அதாவது பருத்தி, அகத்தி போன்று உருவான சொல் தான் ஒணத்தி( உணத்தி) என்பது . உறவினர் எனபது ஒரம்பரை என்று சொல்லப்படுவதுண்டு , பேச்சுத்தமிழ் உ என்பது ஒ வாக மாறும்.
வட்டாரச் சொற்கள் என்ற உடனே இழிவான சொற்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மேற்கண்ட சொற்களே அந்த எண்ணத்தை உடைப்பவையாக உள்ளன என்றால் உண்மை. வட்டாரச் சொற்களை ஆய்வுச் செய்தால் ஆயிரம் ஆயிரம் சொற்களை அள்ளி எடுக்க முடியும். அதுவும் அழகான, அருமையான அமுதச் சொற்களை முடிந்தயளவு வாழ்க்கையிலும் பயன்படுத்தி, தமிழை வாழ வைப்போம்.இறுதியாக சிங்கையிலே தமிழ்மொழி மாதத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அவற்றைப் பற்றி ஒரு நிகழ்ச்சி தான் தமிழ் வசந்தம் ஒளிவழியில் ஒளிப்பரப்பாகும்
" தமிழை நேசிப்போம் தமிழ்ப் பேசுவோம் " என்னும் நிகழ்ச்சி.
அதைப் பற்றி ஒரு விழியம் ( video ) தான் தங்களின் விழிகளுக்கு
கண்டுக் களிக்கவும்

( Thanks : Images - www.coloring-pages-kids.com/ )
வயதாகி விட்டால் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய தானே என்று முதியோர்களை முணுமுணுக்கும் வார்த்தைகள் வயதின் வேதனையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
இன்னும் ஒருபடி மேலாக,
"
வயதாகி விட்டால்
வயோதிகருக்கு
வளர்ந்துவரும் சமுதாயம்
வழங்குவது
வளர்த்துவிட்ட
முதியோர் இல்லமா ? " என்பதும்,
"
வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன் " ( நன்றி அனுஜன்யா அவர்கள் )
என்னும் வரிகளும் உள்ளத்தில் வலியை ஏற்படுகிறது என்பது உண்மை.
வயதுக்கே இத்தனை வலி என்றால், அச்சொல்லையே வேற்றுமொழிச் சொல்லாக வரையறுத்த கொடுமையை என்னவென்று இயம்புவது ?
வாழும் உலகத்தை வையம், வையகம் என்று எல்லாம் அழைக்கின்றோம்.
வையத்திற்கும்,வாழ்விற்கும் ஆதாரமானது உழவுத்தொழில்.அதனால் தான் வான்புகழ் வள்ளுவரும்,
"
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை " என்றார்.
உணவிற்கும்,விளைச்சலுக்கும் உறைவிடமாக விளக்கும் நிலத்தை வைத்திருந்த காரணத்தாலே வை - வய் - வயல் என்று அழைக்கப்பட்டது.அது மட்டுமா?
உணவு உட்கொள்கின்றோம்.அது உள்ளே சென்று ஒரு இடத்தில் வைக்கப்படுகின்றது.அந்த வைக்கப்பட்ட பகுதியே வை - வய் - வயிறு என்று கூறப்பட்டது.
வயிறு பற்றி வள்ளுவர் கூறுவதைக் கேட்டால் இன்னும் வியப்பின் விளம்பிற்கே இட்டு செல்லும்.
"
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி " என்பார்.
இதன் பொருள் என்னவென்றால்,
பொருளை ஈட்டுகின்றோம்;செல்வத்தை வைக்குமிடம் எது ?.
வங்கியிலா ? இல்லை வீட்டிலா ?
இல்லை இல்லை அதை வைக்க வேண்டிய இடம் ஏழைகளின் வயிறு என்று விளக்கமளித்து
உலகத்தில் வறுமையை விரட்டும் வழியை கூறுகின்றார்.
தாயின் வயிற்றில் இருந்து பிறந்தோம்; வையத்தில் வாழ்கின்றோம்; நாளும் பொழுது வளர்கின்றோம்; இந்த வளர்ச்சியை எப்படி வரையறுப்பது ?
உயரத்தைக் கொண்டா? இல்லை
உருவத்தைக் கொண்டா ? இல்லை இல்லை
வையத்தில் வாழ்கின்ற நாள்களைக் கொண்டு தானே,
அதனால் தான் வை - வய் - வயது என்று அகிலத்தில் இருக்கும் நாள்களை அளவிடக் கொண்டு அழைத்துக் கொண்டோம்.
பார்த்தீர்களா !!!
வாயில் வரும் வார்த்தையாக எல்லாம் வடிவம் பெற்று விடுவதில்லை.சிற்பி செதுக்கும் சிற்பம் போல செதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு செந்தமிழ்ச்சொற்களும் என்பதை சிந்தையில் கொள்ள வேண்டும்.
வயதைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல்தான் அகவை என்பது. அகவை என்று அழைக்கப்பட்டதின் காரணம் தான் என்ன?
கொஞ்சம் ஆராய்ந்துதான் பார்ப்போமே.
அகவை என்பதை அகம்+வை என்று பிரிக்கலாம். அகம் என்றால் என்ன?.
உள்ளம் என்பதையே அகம் என்று அழைக்கின்றோம்.
உலகியலை உற்று நோக்கினால் உணர முடியும். உடல்வலிமை இருப்பவர்கள் கூட உள்ளத்தில் உறுதியற்று, உவகையற்று இருப்பதால் வேதனைத்தீயில் வாடுவதைக் கண்ட
வாழ்வியல் தமிழன்,
உடம்புடன் உடன்பாடு கொள்வதைவிட உள்ளத்தோடு உடன்படிக்கை செய்வதே உயிர் வாழ்வதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க உதவும் என்பதாலே அகம் என்பதை அளவுக்கோலாக கொண்டு வயதை அகவை என்று அழைத்திட்டான்.
வயதின் வரையறையும், அகவையின் அளவுக்கோலையும் அறியும் பொழுது அன்னைத்தமிழ் மேல் அளவிலா உவகை உண்டாகிறது அல்லவா.
வயதை இன்னும் வேற்றுமொழிச்சொல்லாக வகைப்படுத்துபவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்.
உருவ ஒற்றுமையில் ஒத்திருப்பதை விட உள்ளணுக்கள் ( DNA ) ஒத்துப்போனாலே உறவுகள் கூட உரிமை கொண்டும் உலகத்தில் உகத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம்.
இது வெறும் அறிவியல் அடிப்படை உண்மை மட்டுமல்ல, சொல்லாராய்ச்சிக்கும் அளவுக்கோல் இது என்பதை மறந்துவிட கூடாது.
இப்படி எல்லாம் அள்ள அள்ள குறையாத அமுதம் அன்னைத்தமிழில் அமைந்திருக்கையில்
அயல்மொழிக்கு அடிமையாக கூடாது என்பதே என் அவா.

சருகாகும் வரையிலும்
மணம் வீசி வாழும்
மகிழ்ச்சியைக் " கல் "
பூக்களைக் " கண்டு "

கரையைத் தொடுவதில்
வெற்றியோ தோல்வியோ
விடா முயற்சியைக் " கல் "
நீர் அலையைக் " கண்டு "

தேய்வதால் கவலையில்லை
என்றாவது பெளர்ணமியாகும்
நம்பிக்கையைக் " கல் "
நிலவைக் " கண்டு "

சுட்டெரிக்கும் சூரியனையே
தொட்டுவிடத் துடிக்கும்
துணிச்சலைக் " கல் "
பீனிக்சு பறவையைக் " கண்டு "

பாறையே ஆனாலும்
மோதிச் சிதைக்கின்ற
உறுதியைக் " கல் "
உளியினைக் " கண்டு "

வேர்கள் இருந்தாலும்
விழுதுகள் ஊன்றும்
எச்சரிக்கையைக் " கல் "
ஆலமரத்தைக் " கண்டு "
( படித்ததில் பிடித்தது - சி.கருணாகரசு அவர்களின் வரிகள் )

சருகாகும் வரையிலும்
மணம் வீசி வாழும்
மகிழ்ச்சியைக் " கல் "
பூக்களைக் " கண்டு "

கரையைத் தொடுவதில்
வெற்றியோ தோல்வியோ
விடா முயற்சியைக் " கல் "
நீர் அலையைக் " கண்டு "

தேய்வதால் கவலையில்லை
என்றாவது பெளர்ணமியாகும்
நம்பிக்கையைக் " கல் "
நிலவைக் " கண்டு "

சுட்டெரிக்கும் சூரியனையே
தொட்டுவிடத் துடிக்கும்
துணிச்சலைக் " கல் "
பீனிக்சு பறவையைக் " கண்டு "

பாறையே ஆனாலும்
மோதிச் சிதைக்கின்ற
உறுதியைக் " கல் "
உளியினைக் " கண்டு "

வேர்கள் இருந்தாலும்
விழுதுகள் ஊன்றும்
எச்சரிக்கையைக் " கல் "
ஆலமரத்தைக் " கண்டு "
( படித்ததில் பிடித்தது - சி.கருணாகரசு அவர்களின் வரிகள் )
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. கடந்த 2008ம் ஆண்டு நடத்திய முதல்நிலைத் தேர்வில் 3,18,843 பேர் பங்கேற்றனர். இதில் 11,849 பேரே வெற்றி பெற்றனர்.
இவர்களில் 2,140 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் இப்போது 791 பேர் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகப் பதவிகளை ஏற்க உள்ளனர். இதில் 625 ஆண்கள், 166 பெண்கள்
இந்த 791 பேரில் 96 மாணவ, மாணவிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தேசிய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 3 பேர் சென்னை
இவர்களில் சென்னை
இதையடுத்து சென்னை
மனித நேயம் அமைப்பை அதிமுக பிரமுகரான சைதை சா.துரைசாமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் பொதுத் தொண்டில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் ஆவார்.
மொத்தத்தில் தமிழத்தைப் பொறுத்தவரை கணேஷ் பயிற்சி மையத்தில் பயின்ற 30 பேரும், மனித நேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 24 பேரும், சங்கர், சத்யா உள்ளிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் உள்பட 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
329வது ரேங்க் பிடித்த ஆசிரியை...
இந்தத் தேர்வில் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரேமி தேசிய அளவில் 329வது ரேங்க்கை பிடித்துள்ளார். இவர் மாத்தூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.
இவர் சென்னை
விவசாயி மகன்...
அதே போல மேட்டூர் அணை அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் 345வது ரேங்க்கைப் பெற்றுள்ளார். இவர் கோவை உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்தவர்.
இவர் சென்னை
நன்றி :http://thatstamil.oneindia.in/news/2009/05/05/tn-96-students-from-tn-get-through-ias-exams.html


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக