என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன்.
அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.
சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்' என்று கூறியுள்ளார்.
பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…
"பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா அவர்?… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.
அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்?.. கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர்.
அவர் வாழ்க்கையை நினைத்தால் சிலிர்க்கிறது. எத்தனை நேர்மை… எளிமை… வீரம்…! இந்த இனத்தின் பெருமை பிரபாகரன்.
கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன் தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா பிரபாகரன் என்ற சுத்த வீரனைப் பார்த்து வளர்ந்தோம்.
என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல் என்று காட்டி வளர்த்திருப்பேன்…
பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.
'வன்னியில் 5 புலி இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்' என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
"யாழ். குடாநாட்டில் மறைவாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை 48 மணி நேரத்துக்குள் படையினரிடம் சரணடைய வேண்டும்" என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து விடுதலைப் புலிகளின் யாழ். செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, "எமது துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "தமது போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருக்கின்றார்கள்" எனவும், "சிங்கள இராணுவத்தின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள்" என்றும் குறிப்பிட்டார்.
"சிங்கள இராணுவம் இன்று பாரிய உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது" என்றும் "இதனையிட்டு மக்களை மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்" எனவும் வெற்றிக்குமரன் மேலும் கேட்டுள்ளார்.
"பயங்கரவாதத்தை அழிப்பதாகாக் கூறி சுதந்திரப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசு கூறி வரும் மாயை மிக விரைவில் உடையும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளையில், சிறிலங்கா அரசாங்கத்தின் இதேபோன்ற அறிவிப்பையடுத்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்காவின் படை நடவடிக்கையின் வெற்றியை இந்தியா உட்பட 14 நாடுகள் பாராட்டியுள்ளதுடன், சிறிலங்கா மீது மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கும் அவை தயாராகி வருகின்றன.
சிறிலங்கா மீதான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் எதிர்வரும் செவ்வாய்கிழமை விவாதிக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 17 நாடுகளின் வேண்டுகோளை தொடர்ந்தே இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளும் இந்த 17 நாடுகளில் அடங்கும்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராகவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்கள் ஆகியவற்றின் வேண்டுகோள்களை புறக்கணித்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
இந்த உண்மையான படங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும், இதற்கு உடனடியாக இல்லையாயினும் எப்போதாவது ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகத் தருகிறேன்...
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கவிதையாகவே நான் பார்க்கிறேன்...

இப்படிக்கு,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக