இலங்கை தமிழர் பிரச்சினைக்காக சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல், அஜீத், விக்ரம், பிரபு, சிம்பு, விஜய், பிரசாந்த், விஷால் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் பங்கேற்றனர். |
நடிகர்கள் மாதவன், ஜீவா ஆகியோர் மட்டும் பங்கேற்கவில்லை. இருவரும் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் முன்கூட்டியே நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி விட்டார்கள். இதேபோல் முன்னணி நடிகைகளில் திரிஷா, நயன் தாரா, சினேகா, மீனா, சந்தியா ஆகியோர் பங்கேற்றனர். நமீதா உள்பட சில நடிகைகள் உண்ணாவிரதத்தை புறக் கணித்தனர். ஸ்ரேயா உண்ணாவிரதத்துக்கு முதல் நாள் சென்னையில் தான் இருந்தார். கந்தசாமி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருக்கு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் வருவதாக உறுதி அளித்து இருந்தார். ஆனால் கடைசி நேரம் வரை அவர் உண்ணாவிரதத்துக்கு வராமல் புறக்கணித்து விட்டார். இதேபோல் நமீதாவுக்கும், பிரியாமணிக்கும் உண்ணா விரதத்தில் கலந்து கொள்ளுமாறு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களும் புறக்கணித்து விட்டனர். நடிகை அசின் ``லண்டன் டிரீம்ஸ்'' இந்திப் படப் பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடு சென்றுவிட்டார். ஆனால் உள்ளூரில் இருந்து கொண்டே உண்ணாவிரதத்துக்கு வராத நடிகைகள் மீது நடிகர் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது. உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு நடிகர் சங்க உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ராமேசுவரத்தில் நடந்த பேரணியில் அனைத்து நடிகர்-நடிகைகள் பங்கேற்க வசதி இருக்காது என்பதால் தான் அவர்களுக்கு வசதியாக சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு போதிய கால அவகாசமும் அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் உண்ணாவிரதத்தை புறக்கணித்த முன்னணி நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்திடம் சில நடிகர்கள் தெரிவித்தனர். தமிழர்களுக்கான உணர்வு பூர்வமான போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். இதையடுத்து உண்ணா விரதத்தில் கலந்து கொள்ளாத பிரியாமணி, ஸ்ரேயா, நமீதா மற்றும் நடிகைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்று தெரிகிறது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
People Of Thambiluvil www.thirukkovil.com
தமீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், அரசாங்கத்தின் விமானக் குண்டு வீச்சில் உயிர்நீத்த முதலாவது நினைவு நாள் இன்றாகும். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி அவர் கொல்லப்பட்டார். |
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக 14 வருடங்கள் பணிபுரிந்த அவர், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களில் பங்குபற்றினார். தாய்லாந்து, சுவிர்ஸர்லாந்து, நோர்வே, டென்மார்க், ஜேர்மனி உட்பட பல நாடுகளுக்குச் சென்று தமிழர் தரப்பின் நியாயத்தை எடுத்துரைத்தவர். ஜெனிவா பேச்சு வார்த்தைக்கு அவரே தலைமை வகித்தார். ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அழிக்கமுடியாத நட்சத்திர பெருமையைப் பெற்றவர். அரசியல் விஞ்ஞானம், இராஜதந்திரப் போக்கு, துணிச்சலான முடிவு என்ற பல திறமைகளைக் கொண்டிருந்தவர் அவர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியாகச் சேர்ந்து கோட்டப் பொறுப்பாளர், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டவர். 1993 ஆம் ஆண்டில் அரசியல் துறைப் பொறுப் பாளராக பதவியேற்றவர். 1994-1995 இல் சந்திரிக்கா அரசுடனான அமைதிப்பேச்சில் விடுதலைப் புலிகளின் அணிக்குத் தலைமை வகித்தார். தமது அரசியல் பணி மூலம் தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்தவராக பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் விளங்குகிறார். எப்போதும் புன்னகை தவழும் அவரது முகம் ஈழத்தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிழலாடும். |

02.11.2008 இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறி [...]
ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்...இன்று 2-11-2008 ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் துரைசாமி, சூலூர் தி.மு.க. நகரச்செயலாளர் ஜெகநாதன், கண்ணம்பாளையம் தி.மு.க செயலாளர் செங்குட்டுவன், சூலூர் ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் சூ.பெ.கருணாநிதி, முன்னாள் பேருராட்சி மன்ற துணைத்தலைவர் சூ.ஆ.முருகேசன்,பெரியார் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம்,தமிழ்ச்செல்வி,வீரமணி,அ.ப.சிவா, மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி,கோவை நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பல்லாயிரக்கனக்கான மக்கள் பார்த்தவாறு சென்றனர். இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இராமகிருட்டிணன் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், ஈழத்தமிழர்களின் மீதான தாக்குதலை கண்டித்தும் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக