சனி, 1 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-01

வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, ஹோவர்கிராப்ட் கலம் மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்

[சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும்  ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.

 hovercraft_20081101001
சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்  
hovercraft_20081101004
சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்  

இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.

இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

hovercraft_20081101003

இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் தரையிறக்க கொமாண்டோத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏ-530 தொடரிலக்கத்தினைக் கொண்ட ஹோவர்கிராப்ட் கனரக கலம்  ஒன்றும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீருந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடிவிட்டன.

இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Puthinam

பெயர்:இந்தியன் (ஹிந்தி பேசறவன் இல்லப்பா,இந்தியா வில் பிறந்தவன்)
உப பெயர் :தென் இந்தியன், வட இந்தியன், தமிழன்,கன்னடர்,மராட்டி
தொழில் :மக்கள் தொகை பெருக்குவது
உப தொழில் :சண்டை போடுவது (மத சண்டை,ஜாதி சண்டை,மொழி சண்டை)
நண்பர்கள் :பொட்டி தட்டற வேலை தரவங்க
எதிரிகள் :சுத்தி இருக்கற எல்லோரும்
வழிபடுவது :சிக்ஸர் அடிப்பவர்களை
விழி படுவது :பாலிவுட்,கோலிவுட்,டோலிவுட் என்ற எல்லா "கட்டை" களும்
தெரிந்தது:துப்புறது,வெட்டறது,வெடிக்கறது
தெரியாதது:சுத்தம்,சுகாதாரம்,சுற்றுப்புற சூழல்
பெருமையாய் நினைப்பது:அடிமையாக இருப்பதை (இருந்ததை)
சிறுமையாக நினைப்பது:தாய் மொழி பேசுவதை
மறந்தது :பண்பாடு ,கலாசாரம்
துறந்தது:நேர்மை,நாணயம்
பிடித்த பெயர் : காந்தி
பிடிக்காத பெயர் :இந்தியன்
சமீபத்திய சாதனை :நிலவுக்கு ராக்கெட்
நீண்டகால சாதனை :சண்டை போட்டுக்கிட்டு ஒண்ணா இருபது(அதாம்பா வேற்றுமையில் ஒற்றுமை)


More than a Blog Aggregator

by நிவேதிதா
அன்று,

காலை எழுந்தவுடன் கணிணி - பின்பு
சுகமான ஒரு குளியல்.
கனிவுடன் அம்மா கொடுக்கும் நல்ல சாப்பாடு
பகல் முழுதும் அலுவலகம்
மாலை நண்பர்களுடன் நல்ல அரட்டை
இரவு முழுதும் நல்ல உறக்கும் என்று
வாழ்ந்தது நான் திருமதி ஆவதற்கு முன்பு..

இன்று,

காலை எழுந்தவுடன் சமையல் - பின்பு
அவசரமாய் ஒரு குளியல்.
கனிவுடன் நானே சமைத்த (நல்ல) சாப்பாடு
பகல் முழுதும் அலுவலகம்
மாலை நண்பர்களுடன் நல்ல அரட்டை
பாதி இரவு அடுத்த நாளைய சிந்தனை
மீதி இரவு சிறிது நேரம் நல்ல உறக்கும் என்று
வாழ்வது நான் திருமதி ஆன பின்பு..

வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருதுகள்: தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

[சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 06:03 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.

leader_20081101001 
leader_20081101002 
leader_20081101003

தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் உட்பட சிறிலங்கா படைய பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை ஐந்து தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்திய வானோடிகளுக்கு "நீலப்புலி" என்னும் சிறப்பு விருதை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

leader_20081101004 
leader_20081101005 
leader_20081101006

மூன்று தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய துணை வானோடிகளுக்கு "மறவர்" விருதையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
அத்துடன் 09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலை நடத்திய வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணிப் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்புப் பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், போராளிகள் உட்பட பெருமளவிலானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

leader_20081101007 
leader_20081101008 
leader_20081101009

puthinam

வீரகேசரி இணையம் 

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும், கடற்படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் 4 படகுகள் கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 5.15 மணி முதல் காலை 7 மணிவரை இரு தரப்புக்கும் இடையில் இக்கடற்சமர் இடம்பெற்றதாகவும் இக்கடற்சமரில் 05 முக்கிய கடற்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 14 விடுதலைப்புலி உறுப்பினர்கள் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்கடற்சமரில் 5 படையினர் வரை காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: