வெள்ளி, 22 மே, 2009

2009-05-22

தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

பயத்தம் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்த மாவைப்போட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வேகவைத்த பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, வென்னீர் விட்டு வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை விட்டு காயவைக்கவும். எண்ணை சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, கைகளால் தட்டி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: உளுத்த மாவு இல்லையென்றால், இட்லி மாவு ஒரு கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்.

காந்திஜியின் காரியதரிசியாக இருந்த திரு.வி.கல்யாணம்(87 வயது) என்பவரைப் பேட்டி கண்ட   நடந்தது என்ன என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இப்படி ஒரு சந்தேகம்.

காந்தி சுடப்பட்டப் போது அவருக்கு பின்னால் 6 அங்குலம் தூரத்தில் இருந்ததாக தெரிவித்த திரு. கல்யாணம் காந்திஜி ஹேராம் என்று கூறியதாக் தன் காதில் விழவில்லை என்று கூறினார். கேட்ஸே மிக அருகில் இருந்து சுட்டதால் உடனே அவர் இறந்து விட்டதாகக் கூறினார்.  

மேலும், காந்திஜியின் பிடிவாதத்தால் தான் படேல் இந்தியாவின் சார்பாக ரூபாய் 50 கோடி பாகிஸ்தானுக்கு சுதந்திரத்திற்கு பின் கொடுக்க ஒத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். அந்த பணம் ஆயுதம் வாங்க தான் அவர்களுக்கு பயன்படும் என்று படேல் முதலில் மறுத்து உள்ளார்.
   
தமிழ், பெங்காலி, ஹிந்தி, மராட்டி, இங்கிலீஷ் மொழிகளில் சரளமாக உரையாட தெரிந்த திரு. கல்யாணம் தற்போது தேசியப் பாதுகாப்பு கழகம் என்ற கட்சியின் பிரசிடெண்ட் ஆக உள்ளார். தெற்கு மற்றும் மத்திய சென்னையில் இரு வேட்பாளர்களை இந்த முறை தேர்தலில் இந்த கட்சி  நிறுத்தி உள்ளது.  

More than a Blog Aggregator

by அப்பாவி அமுதா
அரசியல்வாதிகள் மீது செறுப்பு எறிவதற்கு கிராமத்து மக்கள் ப்யிற்சி
எடுத்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரூர்வி என்னும் கிராமத்தில், விளையாட்டு மைதானத்தில் ஒரு உருவ பொம்மையை வைத்து, சிலர் வரிசையில் வ்ந்து ஒவ்வொருவராக செறுப்பைக் கையில் எடுத்து பொம்மையின் முகத்தில் குறி பார்த்து எறிகிறார்கள்.  
அரசியல்வாதிகள்  தங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதால் இனி இப்படி செய்ய இருப்பதாய் வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை பேட்டியும் கொடுத்தனர். 
அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்ன???? 

கருத்துகள் இல்லை: