இலங்கை இராணுவத்துக்கும் விடுத லைப் புலிகளுக்கும் இடையிலான மோத லின் இறுதி நாள்களை செய்மதியூடாக அமெ ரிக்கா கண்காணித்தது எனச் செய்தி வெளி யிட்டுள்ள பிரிட்டனின் "த ரைம்ஸ்" பத்திரிகை, யுத்த குற்றங்களுக்கான ஆதாரங்கள் உள் ளனவா என்பதை உறுதிசெய்வதற்காக வாஷிங்ரன் இதனை ஆராய்ந்து வருகிறதுஎனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக "த ரைம்ஸ்" மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
அமெரிக்காவிடம் உள்ள செய்மதிப்படங்கள் உயர் பரிமாணம் கொண்டவை. ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் அடுத்த வாரம் இலங்கை குறித்து ஆராயும்போது இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை உறுதிசெய்வதற்காக சர்வதேச வி சாரணைகள் இடம்பெறவேண்டுமென்பதை வலியுறுத்துவதற்கு இந்த செய்மதிப் படங்கள் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. பென்ரகனின் அமைப்பான என்.ஜி.ஏ. தன்னிடம் செய்மதிப் படங்கள் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையின் மோதல் நடைபெற்ற பகுதிகளைத் தமது அமைப்பு கண்காணித்ததாகவும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுக்கு இது தொடர்பான செய்மதிப் படங்களை வழங்கியதாகவும் என்.ஜி.ஏ. அமைப்பின் பேச் சாளர் மார்ஷல் ஹட்சன் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்களுக்கான அமெரிக்க அலுவலகம் இலங்கை குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், மோதல் நடைபெற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாததால் செய்மதிப் படங்கள் மிக முக்கியமானவை எனத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இரு தரப்பினதும் மனித உரிமை மீறல்கள் குறித்து வி சாரணைகள் இடம்பெறவேண்டுமெனக் கோருகின்றன.
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலில் 17 நாடுகள் மாத்திரமே இதற்கு ஆதரவளித்துள்ளன.
கடந்த வாரம் மனித உரிமை கவுன்ஸிலுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்ட வாஷிங்ரனிற்கு வாக்குரிமையில்லாத போதிலும் வி சாரணை நடைபெறவேண்டுமென அமெரிக்கா தீவிரமாக வாதிடும். தன்னிடமுள்ள ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யுத்தக் குற்ற வி சாரணைகளுக்கான ஆதரவு கிடைக்கத் தவறும் பட்சத்தில் அமெரிக்கா தனது வி சாரணைகளுக்கான சான்றுகளாக செய்மதிப் படங்களைப் பயன்படுத்தலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை அரசு மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் செல்வதை அனுமதிக்காததால் இது மிகவும் பெறுமதியான ஆதாரம் என்றும் அவை தெரிவித்துள்ளன.

இலங்கை இரா ணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையில் இறுதி யாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாது காப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற் பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செய லாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தி யாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கை யில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்ற வேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களை யும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:
தமிழ் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் அரசின் தலை வர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும்.தேசிய நல்லிணக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம்.
இதன்மூலம் மாத்திரமே தமிழ்மக்களினதும், ஏனைய சிறுபான்மையினரினதும் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்குத் தீர்வு காணலாம்.வெற்றி என்பது எல்லோருக்கும்
பொதுவானது வெற்றியென்பது அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும்.
மோதலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தவர்கள் பலரை இழந்த தமிழ்ச் சமூகத்தின் துயரங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.இராணுவ வெற்றியென்பது இந்த நாட்டின் வரலாற்றில் தீர்க்கமான விடயமென்பதில் சந்தேகமில்லை.
இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே நாடு எப்படி முன்னோக்கி நகரலாம் என்பதை தீர்மானிக்கும்.மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக கடந்த வியாழக்கிழமை ஹெலிக்கொப்டரில் சென்றவேளை அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதை கண்டோம்.
தரையில் முற்றிலும் எரிந்த நிலையில் வாகனங்கள் காணப்பட்டன. மரங்கள் கருகியிருந்தன. கூடாரங்கள் மோசமாகச் சேதமடைந்திருந்தன.
எங்களால் எந்த மக்களையும் காணமுடியவில்லை. மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் எவற்றையும் முற்றாக காணமுடியாதமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக