ஞாயிறு, 29 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-28

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களில் மேலாண் இயக்குனர்கள் விரைவில் மாற்றப்பட இருக்கிறார்கள். சமீப காலமாக இந்த மூன்று பேரும் தான் டாடா குழுமத்தின் முக்கிய பெரிய அதிகாரிகளாக பேசப்படுகிறார்கள். ஆனால் இந்த மூன்று பேருமே விரைவில் அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர் யார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டாடா குழுமத்தில் இந்த மூன்றும்தான் முக்கிய நிறுவனங்கள் . டாடா குழுமத்தின் மொத்த வரவு செலவில் 80 சதவீத வரவு இந்த மூன்று நிறுவனங்களில்தான் நடக்கிறது. இதிலிருந்து முதலில் வெளியேற இருப்பது டாடா மோட்டார்ஸின் மேலாண் இயக்குநர் ரவி காந்த் தான். வரும் ஜூன் மாதம் அவர் ஓய்வு பெறுகிறார். டாடா குழுமத்தில் சட்டதிட்டப்படி, எக்ஸிகூடிவ் டைரக்டர்கள் கண்டிப்பாக 65 வயதில் ஓய்வு பெற்று விட வேண்டும். இவர் தவிர டாடா ஸ்டீல் மேலாண் இயக்குனர் முத்துராமன் செப்டம்பர் மாதத்திலும், டி.சி.எஸ்.சின் மேலாண் இயக்னர் ராமதுரை அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர். முக்கியமான இந்த மூன்று பேரும் ஓய்வு பெற்றாலும் டாடாவில் இருந்து முழவதுமாக வெளியேறிவிட மாட்டார்கள். அங்குள்ள ' நான்- எக்ஸிகூடிவ் 'களுக்கு ஒய்வு பெரும் வயது 75 தான் என்பதால், இவர்கள் மூன்று பேருமே அதே நிறுவனத்தில் ' நான் - எக்ஸிகூடிவ் ' ஆக பணியாற்றுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ' நான் - எக்ஸிகூடிவ் ' களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த சில வருடங்களுக்கு முன் தான் 70 இலிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டு, ரத்தன் டாடா தொடர்ந்து சேர்மனாக இருந்து வருகிறார்.
நன்றி : தினமலர்
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.1,500 கோடியில் இருந்து ரூ.3,000 கோடி வரை கிரிடிட் லிமிட் ( அதிகபட்டமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படும் கடன் ) கொடுக்கும் படி கேட்டிருக்கிறது. கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கடன் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கிங்ஃபிஷரின் சேர்மன் விஜய் மல்லையா, கடந்த செவ்வாய் அன்று மும்பையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்காக , கம்பெனியின் வளர்ச்சி திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் கடன் தேவைக்கான காரணம் போன்றவற்றை கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கடன் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் அதிகாரிகளும் சாதகமான பதிலையே அளித்திருப்பதாகவும், எவ்வளவு காலத்திற்கு கடன் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இப்போது கடும் நிதி சிக்கலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நிறுவனங்களுக்கு அது பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனவரி மாதத்தில் அது, ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியாவுக்கு, பேங்க் கியாõரன்டி மற்றும் போஸ்ட் டேட்டட் செக் கைதான் கொடுத்ததாகவும் செல்லப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் மற்ற நிறுவனங்களைப்போலவே கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸூம் கடுமையாக நஷ்டமடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிதி ஆண்டில் அது அடைந்திருக்கும் நஷ்டத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், சர்வதேச விமான சேவைக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாலும், விமானங்களுக்கான குத்ததை பணம் அதிகமாக இருப்பதாலும், வட்டி உயர்ந்திருப்பதாலும் நஷ்டம் அதிகரிக்கிறது என்கிறது கிங்ஃபிஷர் நிறுவனம்.
நன்றி : தினமலர்


More than a Blog Aggregator

by ஆர். முத்துக்குமார்
வடமாவட்டங்கள் பாமகவின் கோட்டை. ராமதாஸ் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனைபேரும் இந்தக் கருத்தைப் பரிபூரணமாக நம்புகிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏழு தொகுதிகளும் அதைத்தான் வெளிப்படுத்தியுள்ளன. நிற்க.

கூட்டணி என்பது எதற்காக?

உனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் எனக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது. அதேபோல நான் பலமாக இருக்கும் தொகுதிகளில் உன்னுடைய பலம் மிகவும் சொற்பம். நாம் தனித்தனியாகப் போட்டியிட்டால் வாக்குகள் சிதறும். உழைப்பு வீணாகும். சரி. வா. இணைந்து போட்டியிடுவோம். தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வோம். என் தொகுதிகளில் சிலவற்றை உனக்குத் தருகிறேன். உன் தொகுதிகளில் இருந்து எனக்குக் கொஞ்சம் கொடு. வெற்றியைப் பகிர்ந்துகொள்வோம். இதுதான் தேர்தல் கூட்டணிக்கான அடிப்படை. (செல்வாக்கு அதிகம் இல்லாத இடங்களில் கட்சியை வளர்க்க கூட்டணி மூலம் கிடைக்கும் வெற்றி உதவிசெய்யும்)

வடமாவட்டங்களில் பாமக வலுவாக இருக்கிறது என்றால் அந்தக் கட்சி நியாயமாக என்ன செய்யவேண்டும்? தனக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகளில் வட மாவட்டங்களில் இருந்து நான்கையும் வெளிமாவட்டங்களில் இருந்து மூன்றையும் (குறைந்தபட்சம் இரண்டு) வாங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் கூட்டணிக்கட்சிகள் வலுவாக இருக்கும் தொகுதிகளில் இவர்களுடைய வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உருவாகும். பாமகவின் வாக்குகளை சக கூட்டணி வேட்பாளருக்கு வழங்கி அவர்களின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

ஆனால் பாமகவின் ஃபார்முலா விநோதமானது. நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவல் கொண்டு வா. இரண்டையும் கலந்து ஊதிப் புடைத்து பகிர்ந்து சாப்பிடலாம். புடைத்த பிறகு கல், கசடோடு உமி பறந்துவிடும். எஞ்சியிருக்கும் சுத்தமான அவலை இருவரும் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த ஃபார்முலாவின்படி பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக, இடதுசாரிகள், மதிமுக எல்லோரும் சேர்ந்து வாக்களிப்பார்கள். பாமக வேட்பாளர்கள் சுலபத்தில் வெற்றி பெறுவார்கள். ஆனால் பாமகவுக்கு செல்வாக்கே இல்லாத பிற தொகுதிகளில் சக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அவரவர் வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டும்.

கடந்த காலத் தேர்தல்களில் பாமக கடைப்பிடித்துவரும் வெற்றிகரமான ஃபார்முலா இது. தேர்தலுக்குத் தேர்தல் பாமகவுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. இதை திமுக புரிந்து கொண்டது. கூட்டணிக்கு வாருங்கள் என்று கேட்க குறைந்தபட்சம் தன்னுடைய மாவட்டச் செயலாளரைக்கூட அனுப்பவில்லை.

கூட்டணி மாறுவது என முடிவெடுத்தார் ராமதாஸ். வருவது வரை லாபம் என்று அதிமுக அழைத்துக் கொண்டது. ஏழு தொகுதிகளையும் அவர்களுடைய கோட்டையிலேயே வழங்கி விட்டது. ராமதாஸ் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்.

பாமகவின் அவல் - உமி ஃபார்முலாவை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ளாதவரை எப்போதுமே பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி!
இந்திய கடல் பகுதியினுள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்த ஒரு தொகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை மீனவர்கள் 24 பேர் கடந்த ஜனவரி மாதம் 30 ம் திகதியளவில், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் சென்னை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், இந்திய மத்திய அரசாங்கத்தின் பணிப்புரையின் கீழ் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இந்திய கடலோர காவற்படையினர் தமது படகுகளில் அழைத்து வந்து, இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. TNC

 

நண்பர்களே!! என் நண்பன் ஒருவன் ஒரு செய்தி மின்னஞ்சலில் அனுப்பி இருந்தான்!!!

அது படிக்க நன்றாக இருந்ததால் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!!

எழுதிய நண்பர் வாழ்க!!

 

image

image image

image

image

image

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பத்து நாடுகள் கலந்து கொள்ள இருக்கும் இந்தப் போட்டிகைள நடத்த தயாராக இல்லை என துபாய் விளையாட்டு நகர் அலுவல் ரீதியாக ஆசிய ஹாக்கி அமைப்புக்கு தகவல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

2010 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாகக் கருதப்படும் இந்தப் போட்டிகளை மலேசியா நடத்த வேண்டும் என ஆசிய ஹாக்கி அமைப்பு கோரியுள்ளது.

கருத்துகள் இல்லை: