செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23


கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு விருதுகள் புதிதல்ல, இப்போது மேலும் ஒரு விருதாக சாதனா சம்மான் விருதினை பெற்றிருக்கிறார் அவர். கொல்கத்தாவில் உள்ள இந்திய மொழிக்கழகத்தின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. பாரதிய பாஷா பரிஷித் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த கழகம் ஆண்டுதோறும் 14 மொழிகளில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழுக்கான விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

51 ஆயிரம் ரூபாய்க்கு பொற்கிழி, பாராட்டு பத்திரத்தோடு, இவரது படைப்புகளை பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுகிற நல்ல விஷயத்தையும் இந்த அமைப்பே செய்யும் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி. கொல்கத்தாவில் ஏப்ரல் 18 ந் தேதி நடைபெறும் விழாவில் நேரடியாக இந்த விருதினை பெறுகிறார் கவிஞர். இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, ஜெயகாந்தன் ஆகிய எழுத்தாளர்கள் ஏற்கனவே இந்த விருதினை பெற்றிருக்கிறார்களாம்.

தமிழுக்கு செம்மொழி பெருமையை முதல்வர் கருணாநிதி பெற்று தந்திருக்கும் காலப்பொழுதில், இந்த விருதை தமிழ் படைப்பாளிகளுக்கு வங்காள மண் வழங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். மகாகவி தாகூர் பிறந்த இலக்கிய மண்ணில் இந்த விருதை பெறுவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
Ravi Teja Full Details

please click the photo to clear & full view

Ravi Teja Full Details

காதலில் வேகம் இருக்கலாம். ஆனால் காமத்தில் அது கூடாது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

சட்டுப்புட்டென்று 'காரியத்தை' முடித்து விட்டு அக்கடா என்று குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்.

பார்ட்னரின் உணர்வுகளை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் 'வேலை' முடிந்தவுடன் நீட்டிப் படுத்து விடும் ஆண்கள் மீது பெண்களுக்கு கடும் கோபம் வருமாம்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு சொல்கிறது. காதல் கனிந்து உறவைத் தொடங்கும்போது நடத்தப்படும் முன் விளையாட்டுக்கள் ஒரு ஆரம்பம்தான். ஆனால் விளையாட்டு முடிந்த பின்னர்தான் பெண்களின் உணர்வுகள் பொங்கிப் பெருகுமாம்.

அந்தசமயத்தில், அதை பொருட்படுத்தாமல் அல்லது கவனிக்காமல், அரவணைத்து அமைதிப்படுத்தாமல், தூங்கப் போகும்போதுதான் ஆண்கள் மீது பெண்களுக்கு கோபம் கோபமாக வருமாம்.

5600 ஜப்பானிய பெண்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதில் 50 சதவீதம் பேர், செக்ஸ் உறவுக்குப் பின்னரும் கூட நீண்ட நேரம் தங்களது பார்ட்னர் தங்களுடன் சேர்ந்திருப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

44 சதவீதம் பேர் 'முன் விளையாட்டை' அதிகம் விரும்புவதாக கூறியுள்ளனர். அதாவது கிளைமேக்ஸை விட முன் விளையாட்டுதான் தங்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.


38 சதவீதம் பேர் நீண்ட நேர உடலுறவே தங்களுக்குப் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

38.8 சதவீதம் பேர் செக்ஸ் விளையாட்டுக்கள், முறைகள் குறித்து தங்களது பார்ட்னர்களுடன் விவாதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், தங்களது பார்ட்னர்கள், செக்ஸ் விஷயத்தில் 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக' இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் பொதுவாக உள்ளதாம்.

மொத்தத்தில் பெண்களுக்கு முன் விளையாட்டு மட்டுமல்ல, உறவுக்குப் பிந்தைய நெருக்கமும், அன்யோன்யமும், அரவணைப்பும் கூட ரொம்ப முக்கியமாம். அப்போதுதான் அவர்களுக்கு முழுமையான தீனி கிடைத்த உணர்வு ஏற்படுகிறதாம்.

கருத்துக் கணிப்பி்ல கலந்து கொண்டவர்களில் 30 சதவீதம் பேரில், 25.5 சதவீதம் பேர் தங்களது பார்ட்னர்கள், சுய நலம் மிக்கவர்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். 6.9 சதவீதம் பேர் ரொம்ப சுயநலம் என்கிறார்கள்.

'தி ஜர்னல் ஆப் செக்ஸூவல் மெடிசின்' என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை, ஆண்களுக்கு உடலுறவு மட்டுமே முக்கிய நோக்கம்.
அந்த 'டார்கெட்'டை முடித்தவுடன் 'ரிடயர்ட்' ஆகி விடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது.

அதேசமயம், உடலுறவை முடித்த பின்னரும் கூட நீண்ட நேரம் தலையைக் கோதியபடியோ அல்லது அரவணைத்தபடியோ இருக்கும் ஆண்களை பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்.

இப்படிப்பட்ட உறவுதான் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் பெண்கள் கருதுகிறார்கள். அப்படிச் செய்யும் ஆண்கள் மீது, பெண்களுக்கு காதல் பொங்கி வழியுமாம்.
(நன்றி - thatstamil)


More than a Blog Aggregator

by தெ. சுந்தரமகாலிங்கம்
அரசியலில் கொஞ்சம் தலை தூக்கத் தொடங்கிய வருண் காந்திக்கு எத்தனை பெரிய சம்மட்டி அடி!

உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாகப் பேசியது தவறுதான். ஆனால் மன்னிக்க முடியாததல்லவே.

அவருடைய தந்தையின் மரணம் டில்லி சிம்மாசனத்துக்காக அடிமை வம்சக் காலத்திலிருந்தே நடந்து வந்த வாரிசுரிமைப் போரின் தொடர்ச்சி என்பதை உணர்ந்தவர்கள் மிக மிகக் குறைவனவர்களே!

அரசியல் கொலைகளை அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கும் இளவல்களுக்குள்ள வலுவான பின்னணி வருண் காந்திக்கு இல்லைதான்.
இந்தியத் தாலியணிந்த இத்தாலியப் பெண்மணி பெற்ற செல்வாக்கு மேனகா காந்திக்கு வந்துவிடக் கூடாதென்ற சதியின் பிந்திய அங்கமே வருண் காந்தியை வாடி வாசலிலேயே மடக்கிவிடும் திட்டம்.

வேதாந்தி கருணாநிதியின் தலைக்குத் தங்கம் பரிசளிப்பதாக பேசியது காற்றோடு போச்சு!

சுற்றுப் பயணத்தின் போது இரண்டு பேருக்குப் பணம் கொடுத்தாராம் வருண் காந்தி.

கிடா வெட்டி விருந்து கொடுத்து இலைக்கு அடியில் கரன்சி வைக்க வக்கற்றுப் போன வருண் காந்தி அரசியலுக்கு வந்தது எவ்வளவு பெரிய தப்பு!

பாபர் மசூதியை இடித்தவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இடம் கொடுத்துள்ள இந்திய அரசியலமைச் சட்டம், குற்றவியல் சட்டம், தேர்தல் ஆணையம் அனைத்துமே வரிந்து கட்டிக்கொண்டு வருண் காந்தியின் மீது பாய முற்படுவதன் பின்னணியை நாம் சிந்திக்க மறந்தால் நாதியற்றவர்களின் தொகை நாடு முழுவதும் பெருகிவிடும்.

குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் இரண்டாவது "மனோகரா" தமிழ் நாட்டுடன் நின்றுவிடவில்லை என்பதையே வருண் காந்தி பிரச்சினை சுட்டிக் காட்டுகிறது.
23.03.2009. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிகள் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரின் பார்வையை கறுப்புக் கண்ணாடியிட்டு மறைத்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தப் போக்கின் பின் விளைவுகள் குறித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு உடனடியாகத் தெரியப் போவதில்லையெனவும் சிறுபான்மை சமூகங்கள் பெரும் அச்ச உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். முஸ்லிம் சமூகத்துக்கு இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் இழைக்கப்பட்டிருக்கும் அநியாயங்கள், உரிமைப் பறிப்புகளைப் போன்று வேறு எந்த அரசாங்கங்களாலும் நடக்கவில்லையெனவும் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். மேல் மாகாண சபைத் [...]

கருத்துகள் இல்லை: