ஞாயிறு, 29 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-28

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்னும் தலைப்பில் புதுமைப்பித்தான் ஒரு கதை எழுதியுள்ளார்.

"மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்" என ஆரம்பிக்கும் அக்கதையை முழுதும் படிக்க இங்கே செல்லவும். நான் அக்கதையை இங்கு குறிக்கும் நோக்கத்தை பின்னால் கூறுகிறேன்.

இப்போது நான் நம்ம பதிவர் டி.வி ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதி முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மாண்புமிகு நந்திவர்மன் என்னும் நாடகத்தைப் பார்த்துவிட்டு வந்தேன்.அதை பார்க்கும்போது மேலே நான் குறிப்பிட்ட புதுமைப் பித்தனின் கதைதான் நினைவுக்கு வந்தது. அது மட்டுமா வந்தது? சோ அவர்கள் எழுதிய "சம்பவாமி யுகே யுகே" என்ற நாடகமும் நினைவுக்கு வந்தது.

ஏன் அவ்வாறு வரவேண்டும்? ஏனெனில் எல்லாவற்றிலும் கடவுளே பூவுலகுக்கு வந்து சிறிது காலம் மனிதர்களுடன் தங்குகிறார். இந்த கான்சப்டை ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு மாதிரியாக கையாண்டுள்ளார்கள். ஓரிரு தினங்களுக்கு முன்னால் பதிவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்கு ஃபோன் செய்து தனது சௌம்யா தியேட்டர்ஸ் குழுவினர் இந்த நாடகத்தை வாணிமகாலில் 28.03.2009 மாலை திநகர் வாணிமகாலில் போடப்போவதாகக் கூறி எனக்கும் அழைப்பு விடுத்தார். முன்னமேயே இவரது "என்று தணியும்" என்னும் நாடகத்தை பார்த்துள்ளேன். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். இம்முறை அவரும் இருந்து நாடகத்தில் முக்கிய பாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ளார்.

ஏற்கனவேயே சொன்னபடி இதில் சிவபெருமான் பூவுலகுக்கு தனது பக்தர் சத்தியா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசியல்வாதிகளை திருத்துவதற்காக வருகிறார். வருகிறவர் தானே அரசியல் வலையில் சிக்கி, முதல்வராக பதவியேற்று, இல்லாத ஊழல்கள் எல்லாம் செய்து பதவியிழக்கிறார். கடவுளாலும் அரசியல் என்னும் சாக்கடையை சரி செய்தல் இயலாது என்ற கான்சப்டை முன்வைக்கிறது இந்த நாடகம்.

கரூர் ரங்கராஜன் சத்தியாவாகவும், டி.வி.ராதாகிருஷ்ணன் சிவபெருமானாகவும், SBI முரளி எம்.எல்.ஏ. பூபதியாகவும், சக்தி சத்தியாவின் மகன் தமிழாகவும், ராஜேந்திரன் அமாவாசையாகவும், வாசுதேவன் பொதுமக்களாகவும், P.R.S. பத்திரிகை நிருபராகவும் வருகின்றனர்.

மேடைக்கு பின்னால் செயல்பட்டவர்கள்:
ஒப்பனை -- குமார்,
அரங்கவமைப்பு -- சைதை குமார்,
ஒலி -- வாணிமஹால்
ஒளி மற்றும் இசைக்கலவை: கிச்சா,
தயாரிப்பு நிர்வாகம்: P.R. சீனுவாசன்
எண்ணம், உரையாடல், இயக்கம் -- டி.வி. ராதாகிருஷ்ணன்.

தேவையின்றி இழுக்கடிக்காமல் நாடகத்தை விறுவிறென கொண்டு சென்ற ராதாகிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். என்ன, நாடகம் ஒரு கையறு நிலையில் முடிந்தது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதேசமயம் எவ்வாறு யோசித்து பார்த்தாலும் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் வேறு எவ்விதமாக நாடகத்தை முடித்திருக்க இயலும் என்பதையும் கற்பனை செய்ய முடியவில்லை என்பதே நிஜம். இதே மனப்பான்மை எனக்கு சோ அவர்களீன் நாடகத்தைப் பார்த்தபோதும் ஏற்பட்டது.

நாடகத்தின் பெரும்பகுதியில் ஒரு கேரக்டர் ஒன்றுமே பேசாது வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. கடைசியில்தான் அது பொதுமக்களை பிரதிபலிக்கும் பாத்திரம் என விளங்கியது. ஆர்.கே. லட்ச்மணின் கார்ட்டூனில் வரும் common man போல என வைத்து கொள்ளலாம்.

நாடகம் முடிந்ததும் கிரீன் ரூமுக்கு சென்று ராதாகிருஷ்ணனுடனும் கரூர் ரங்கராஜனிடமும் பேசினேன். எனக்கு தெரிந்து அமெச்சூர் நாடகங்கள் மிகவும் குறைந்து விட்டது. சௌம்யா குழுவினர், ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி. சேகர் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் மட்டுமே நினைவுக்கு வருகின்றனர். கைஅயை கடிக்காமல் போகிறதா எனக் கேட்டதற்கு ஏதோ போகிறது என பதில் கிடைத்தது. ஆனால் அவ்விருவருடைய ஆர்வமே அவர்களது செயல்பாட்டுக்கு காரணம் என்பது புரிந்தது.

அவ்விருவருக்கும் வாழ்த்து கூறிவிட்டு புறப்பட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


More than a Blog Aggregator

by ரணங்கள்







அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் பெயரால்!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்:
இறைநம்பிக்கையாளனின் வயிறு நன்மையால் (அறிவு, ஞானம் நிறைந்த பேச்சுக்களால்) என்றைக்குமே நிறைவதில்லை. அவன் அதனைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றான். எதுவரையெனில் கடைசியில் சுவனத்திற்குச் சென்று சேர்ந்து விடுகின்றான்.
அறிவிப்பாளர் : அபு சயீத் குத்ரி (ரலி)
நூல் : திர்மிதி


மேலைச்சிதம்பரமாம் திருப்பேரூரில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் ஆதி குருமுதல்வர் அருள்மிகு சாந்தலிங்க அடிகளாரின் திருக்கோயில் குடமுழுக்கு விழா சீர்வளர்சீர் அடிகளாரின் சீரிய வழிகாட்டுதலின்படி மாசித்திங்கள் 24ஆம் நாள் ( 08.03.2009 ) ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக அமைந்தது.விழாவில் அருளாளர்களும்,ஆதீன கர்த்தர்களும்,துறவிகளும்,அன்பர்களும் மிகத்திரளாகக் கலந்து கொண்டனர்.விழாவிலிருந்து சில புகைப்படங்கள்.

தவத்திரு.சிவலோகநாத அடிகள் தலைமையில் நிலத்தேவர் வழிபாடு



தவத்திரு.பொன் மாணிக்கவாசக அடிகளார் மூத்த பிள்ளையார் வழிபாட்டை நடத்துகிறார்



சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர அடிகளார்< ?xml:namespace prefix = o />




தவத்திரு.முத்து சிவராமசாமி அடிகளார் ,தென்சேரி மலை ஆதீனம்




தவத்திரு.சுந்தர மூர்த்தி சுவாமிகள் மௌனமடம்,சிதம்பரம்




தவத்திரு.சாது சண்முக அடிகளார் ,பழனி ஆதீனம்



திருக்குடங்களில் திருவருள் சக்திகளை எழுந்தருளச் செய்தல்







திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா



திருமுறை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராசருக்கு வழிபாடு



அருள்மிகு சாந்தலிங்கப் பெருமானுக்கு பேரொளி வழிபாடு

தவத்திரு.நாச்சியப்ப ஞான தேசிகர்,கோவிலூர் ஆதீனம்

Sitemeter