வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-27



கிட்ட தட்ட கூட்டணி குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவு நோக்கி வந்தாச்சு.

மாம்பழம் இலையோடு சேர்ந்தது.

முரசு தனியாக முழங்கப்போகிறது. முரசின் முழக்கம் கை இருக்கும் இடத்தில் ஆர்ப்படமில்லாமல் அமைதியாக இருக்கும் என அரசியல் தெரிந்த வட்டாரங்கள் சொல்கிறது. 

இலங்கை பிரச்சனை ஆயிரம் கைகளால் மறைத்தாலும் ஆயிரத்து ஓராவது கை தன்னை காக்கும் என உதய சூரியன் நம்பிஇருக்கிறது.

கோபாலபுரத்திலிருந்து போயஸ் தோட்டம் சென்ற மாங்கனி வெறும் கனியா அல்லது வெற்றிக்கனியா என்பது தமிழகத்து மக்களின் மர்ம புன்னகைதான் சொல்ல வெண்டும்.
 

இப்போ சொல்லுங்க என் காதோட உங்க கூட்டணி யாரோட?



More than a Blog Aggregator

by rammalar
A
சுரண்டல்!

மதச்சார்பற்ற அரசு எனக் கூறிக் கொள்ளும் தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை எடுத் துக்கொண்டது எந்தவிதத்தில் நியாயம் என்று வினா எழுப்பியுள்ளார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்.

இவர் கூறுகிற விவாதப் படி பார்த்தால் கோயிலில் சாமி சிலை களவு போனால் மதச் சார்பற்ற அரசின் காவல்துறை அதைக் கண்டுபிடிக்கக் கூடாது என்று சொல்வார்களா? 15 ஆண்டுகளாகத் தேடப்பட்ட சாமி சிலைகளை காவல் துறையினர் கண்டுபிடித்த செய்தி நேற்றுகூட படங்களுடன் வெளிவந்துள்ளதே!

இந்துக் கோயில்கள் பார்ப்பனர்களின் சுரண்டலுக்கான பேரிடமாக இருக்கின்றன; அதில் அரசு கை வைத்துவிட்டதே என்கிற ஆத்திரத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா?

இந்து அறநிலையத் துறை ஏன் தோற்றுவிக்கப் பட்டது? இந்துக் கோயில்களில் பார்ப்பான் பண்ணயம் கேட்பாரில்லை என்கின்ற தன்மையில் அவர்களின் சுரண்டல் பூமியாக இருந்தது.

அம்மன் மூக்கில் மின்னும் வைர மூக்குத்தி அர்ச்சகப் பார்ப்பனரின் பாரியாள் மூக்கில் மின்னிய நிலைமைகள் எல்லாம் உண்டே!

சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் போடப்பட்ட குழு கூட இது பற்றியெல்லாம் விஸ்தார மாகவே கூறியிருக்கிறதே! அறியமாட்டாரா கணேசன் வாள்?

இதே சிதம்பரம் கோயிலில் அம்மன் தாலி காணாமற் போயிற்று. தங்கத் தகடுகள் சுரண்டப்பட்டன. கோயில் கிணற்றில் பக்தர்கள் போடும் பணம் கணக்கிடப்பட்டு கோயில் கணக்கில்கொண்டு வர வேண்டும்; ஆனால், தீட்சிதப் பார்ப்பனர்கள் - ஆள் ஏற்பாடு செய்து அந்தப் பணத்தை எல்லாம் அபேஸ் செய்தனர்.

கோயிலுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளை எல்லாம் அமுக்கியவர்கள் இந்தத் தீட்சிதர்கள்தாம்.

பார்ப்பனர்களே இது குறித்து அரசுக்குப் புகார் அனுப்பியதுண்டு. வருடம் ஒன்றுக்கே வருமானம் ரூ.37 ஆயிரம் என்று கணக்குக் காட்டினார்கள். இந்து அற நிலையத்துறையின் வசம் கோயில் வந்த பின் 40 நாள்களிலேயே உண்டியல் மூலம் வந்த பணம் கிட்டத் தட்ட இரண்டு லட்ச ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே!

அப்படியென்றால், கோடிக் கோடியாக கோயில் பணத்தை தம் அப்பன் வீட்டுச் சொத்தாக அனு பவித்து வந்தது தீட்சிதர்க் கும்பல். இவற்றையெல்லாம் திருவாளர் இல. கணேசன் நியாயப்படுத்துகிறாரா?

இந்து அறநிலையத் துறையின்கீழ் சிதம்பரம் நடராஜன் கோயில் கொண்டு வரப்பட்டதன் நேர்மையை இப்பொழுதாவது அவாள் ஒப்புக் கொள்வார்களா?

மதச்சார்பற்ற தன்மை என்றால் பார்ப்பனர் கொள்ளையைக் கண்டுகொள்ளக் கூடாது என்று கருதுகிறார்களோ!

------------- மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை:-"விடுதலை" 27-3-2009
Snegidhanae



Kadhal Sadugudu



Pachai Nirame



Mangalyam



september madham



Evano Oruvan



Yaaro Yaarodi



More than a Blog Aggregator

by கிருஷ்ணா
இறைவன் என்றும் ஒன்றானான்..
அவன்அருளும் போது இரண்டானான்.. X 2 (இறைவன்..

மூன்று காலமும் வாழ்கின்றான்..
அவன் மூன்று குணங்களும் தானானான்..
அன்பு, அறிவு ஆற்றல்.. (இறைவன்..

நான்கு வேதத்தில் வாழ்கின்றான்.. அவன்
நான்கு திசையும் ஆள்கின்றான்..
சீலம் நோன்பு செறிவு அறிவு.. (இறைவன்..

படைத்தல் காத்தல் அழித்தல் துடைத்தல்.. மறைத்தல்
ஐந்து தொழில்கள் செய்கின்றான்..
ஐந்து புலன்கள்.. ஐந்து பூதங்கள்..
என்று எதிலும் ஐந்தானான்.. (இறைவன்..

ஆறு வழிகள் அவனடி சேறும்..
ஆறு மதமும் அவன் புகழ் கூறும்..
ஓரறிவாயினும் ஆறறிவாயினும்
அனைத்து உயிர்க்கும் முதலானான்.. (இறைவன்..

ஏழு அண்டமும் அவனுள் அடங்கும்..
ஏழு பிறப்பும் அவன் சொல்லி பிறக்கும்..
எட்டு குணங்களும் அவனுள் இருக்கும்.. ஆ.. - X 2
எட்டு சித்தியியும் அவனிடம் கிடைக்கும்.. X 2 (இறைவன்..

K.கிருஷ்ணமூர்த்தி

(எங்களின் புளிசாதம் எனும் இசைத்தட்டுக்காக, திருமந்திரத்தின் முதல் மந்திரத்தைத் தழுவி இயற்றிய பாடல் இது.)
 தனது கணவர் (லசந்த) கொலை தொடர்பாக இதுவரை விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை: மனைவி சோனாலி புகார் : தனது கணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை எந்த விசாரணை தகவலும் வெளியாகவில்லை என்று 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சோனாலி விக்ரமதுங்க குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :  

கருத்துகள் இல்லை: