செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

பங்குச்சந்தை, நிலம் இவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு நடுத்தர மக்களும் கூட சிறிய அளவில் ஒரு கிராம், இரண்டு கிராமாவது சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நகைக்கடைகளில் மட்டுமே தங்கம் விற்கப்பட்ட நிலை மாறி, வங்கிகளும் விற்பனை செய்யத் துவங்கின. கடந்தாண்டு அஞ்சல் துறையும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து தங்க நாணய விற்பனையை துவக்கியது. இத்திட்டத்தில் 24 காரட் சுத்த தங்கத்தில் அரை, ஒன்று, ஐந்து மற்றும் எட்டு கிராம் எடையுள்ள நாணயங்கள், சுவிட்சர்லாந்து வால்கேம்பி நிறுவனத்தின் தர நிர்ணய முத்திரையுடன், முற்றிலும் 'சீல்' வைக்கப்பட்ட வகையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன. தங்க நாணய விற்பனையை கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜா, இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினர். அன்று முதல் நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள், தமிழகத்தில் 20 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை துவக்கப்பட்டது. கடந்த மாதம் மேலும் ஒன்பது அஞ்சலகங்கள், இம்மாதம் 13ம் தேதி 22 அஞ்சலகங்கள் என தற்போது தமிழகத்தில் 51 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விற்பனை துவக்கப்பட்டு ஐந்து மாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த 15ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 29 அஞ்சலகங்களில் இதுவரை 24.862 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய கோட்டத்தில் மட்டும் 65 லட்சம் ரூபாய் வரை தங்கம் நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்க நாணய விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தற்போது ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் தினந்தோறும் மாறும் விலைக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வெளிமார்க்கெட் விலையிலேயே தங்க நாணயங்கள் அஞ்சலகங்களில் கிடைக் கின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தங்க நாணயம் விற்பனைக்கான அஞ்சலகங்கள், பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை வசதியை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றன. ''அஞ்சலகங்களில் வாங்கும் தங்க நாணயத்திற்கு, 'பில்' தரப்படுகிறது. மேலும், அஞ்சலகம் அரசு நிறுவனம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தங்க நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். ''தங்க நாணயங்கள் விற்பனை, மற்ற நகைக் கடைகள் போல் இல்லாவிட்டாலும், பண்டிகை காலங்களிலும், பங்குச் சந்தை சரிவு உள்ளிட்ட காலங்களிலும் அதிகளவில் இருக்கும். சென்னை, திருச்சி பகுதி அஞ்சலகங்களிலும் அதிகளவு தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள் ளன,'' என்றார்.
நன்றி : தினமலர்
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ காருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட விற்பனையில் இந்த காரை வாங்குவோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. குறைந்த அளவிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தற்போது காரை வாங்குவோர், அதை கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் நானோ கார். உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பிரச்னை, நானோ கார் தயாரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், டாடாவுக்கு குஜராத் மாநிலம் ஆதரவுக் கரம் நீட்டியது. தற்போது, காரை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நானோ கார் நேற்று முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு மிகக் குறைவாக உள்ளதால், நானோ காருக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
இதுகுறித்து ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நானோ கார் தொடர்பாக ஐந்து கோடிக்கும் அதிகமானோரிடம் இருந்து விசாரிப்புகள் வந்துள்ளன. முதல் கட்ட தேவையைப் போக்குவதற்கு இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் கார்கள் வரை தேவைப்படுகின்றன. மொத்த தேவையில் 2.5 சதவீதத்துக்கும் குறைவான அளவே முதல் கட்டமாக கார்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. காருக்கான அனைத்து முன்பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களும் நானோ காரை பெறுவதற்கு இரண்டாண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். முன்னர், மாருதி 800 கார் விற்பனைக்கு வந்த போதும் இதே நிலை தான் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது முதல் கட்ட விற்பனையில் நானோ காரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தங்கள் பெயரில் புக் செய்யப்பட்ட காரை, கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சிக்கலாம். கார் தேவைப்படாதவர்கள் கூட, காருக்காக முன்பதிவு செய்து, அதை கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்க முயற்சிக்கலாம். எப்படியாது நானோ காரை வாங்கியே தீர வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்,காரின் விலையை விட கூடுதலாகக் கொடுத்து அதை வாங்க முயற்சிப்பர்.
நானோ கார் விற்பனை தொடர்பாக டாடா நிறுவனம் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அதன் டீலர்கள் சில விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இதன்படி, நானோ கார் தொடர்பாக டாடா நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் உடன்பாடு செய்துள்ளது. நானோ கார் வாங்குவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி வசதி அளிக்கும். காருக்கு புக் செய்தவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விற்பனைக்கு வரும் கார்களைப் பெறும் அதிர்ஷ்டசாலிகள் அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். புக் செய்யப்பட்டவரின் பெயருக்கு டீலர்களின் ஷோரூம்களுக்கு கார் வந்து விடும். வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தங்கள் கார்களை எடுத்துச் செல்லலாம். நிதி விவகாரங்களில் டீலர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. காரை டெலிவரி செய் யும் பணி மட்டுமே டீலர்களுக்கு உண்டு. இவ்வாறு ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், 'நானோ காருக்காக பெருமளவு வாடிக்கையாளர்கள் புக் செய்வது, டாடா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். 'இரண்டு லட்சம் கார்கள் புக் செய்யப்பட்டால் கூட, அந்நிறுவனத்துக்கு அதன் மூலமாக 1,400 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிதியை டாடா நிறுவனம், தனது பல்வேறு நிதித் தேவைகளுக்கு பயன்படுத்தும்' என்றன.
நன்றி : தினமலர்
உலகிலேயே மிகக் குறைந்த விலையுடைய நானோ கார், விற்பனைக்கு வந்து விட்டது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப் படி, ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ கார்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அடுத்த மாதம் 9ம் தேதி முதல், காருக்கான முன்பதிவு துவங்கும் என்றும் தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று பெருமையுடன் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த அதிகாரப்பூர்வ அறிமுக விழாவில், ரத்தன் டாடா பேசியதாவது: இந்த நாளை, சாலை போக்குவரத்தின் புதிய பரிமாணமாக கருதலாம். ஒரு லட்ச ரூபாய் விலையுள்ள கார் என்பதால், அதை மிகவும் மலிவான கார் என கூறப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரும் வாங்கி பயன்படுத்தக் கூடிய கார் என்று கூறலாம். ஏற்கனவே நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதை உறுதியாக பின்பற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நானோ காரின் எகானமி ரக கார், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இந்த உயர் ரக கார்களில் ஏசி, பவர் பிரேக், பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இந்த கார்களை மேற்கு ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. நானோ கார்களுக்கான முன் பதிவு அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் முதல் டெலிவரி செய்யப்படும்.முதல் ஒரு லட்சம் நானோ கார்களை வாங்கவுள்ள வாடிக்கையாளர்கள், முன்பதிவு செய்தவர்களில் இருந்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். கார் முன்பதிவு செய்வதற்கு அதிகபட்ச வரையறை எதுவும் இல்லை. குஜராத் சனாந்த்தில் ஆண்டுக்கு 2.50 லட்சம் கார்கள் தாயரிக்க முடியும். பின்னர், இது ஆண்டுக்கு ஐந்து லட்சம் கார்களாக அதிகரிக்கப்படும். நாங்கள் எதிர் பார்த்ததுக்கு முன் கூட்டியே நானோ கார் விற்பனைக்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்கட்டமாக, பந்த் நகர் தொழிற்சாலையில் இருந்து 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கார்கள் வரை சப்ளை செய்யப் படும். பந்த் நகரில் கார் தயாரிப்பது தற்காலிகமான ஏற்பாடு தான். ஒரு கோடிக்கும் அதிகமான நானோ கார்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை மேலும் அதிகரித்தால் அதற்கேற்ப நிறுவனத்தின் உற்பத்தி திறனும் அதிகரிக்கப்படும். இவ்வாறு டாடா கூறினார்.
டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ரவி காந்த் கூறியதாவது: நானோ காருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ300. நாடுமுழுவதும் உள்ள ஸ்டேட் பாங்குகளில் இதற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். டாடா நானோ கார் வாங்க கடன் வசதி கிடைக்கவும் 15 வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலம் வாங்குபவர்களுக்கு தனிக்கட்டணமும் உண்டு. முதலில் ஒரு லட்சம் கார்கள் வினியோகத்திற்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யப்படும். அப்படி கார் கிடைக்காத பட்சத்தில், நானோ காருக்காக முன்பதிவு செய்து ஒரு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.5 சதவீத வட்டி அளிக்கப்படும். இரண்டு ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு 8.75 சதவீத வட்டி தரப்படும். . நானோ கார்கள், நான்கு நபர்கள் வசதியாக அமரக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 624 சிசி திறன் கொண்ட இந்த கார்கள், மூன்று வகைகளில் கிடைக்கும். இரு சக்கர வாகனங்களை விட குறைவாகவே இந்த கார்கள் கார்பனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 26.6 கி.மீ., வரை செல்லும். இவ்வாறு ரவிகாந்த் கூறினார்.
நன்றி : தினமலர்
23.03.2009. இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை இந்தியாவின் மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான பியுசிஎல் அமைப்பினர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் மோதல்கள் நடக்கும் பகுதியில், அரசால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தொடரும் உயிர்ப்பலிகள் தொடர்பிலும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உருவாகிவரும் மனித அவலம் குறித்தும் பேசப்பட்டதாக, பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளுக்கான தலைவர் வழக்கறிஞர் [...]
மத்தியானம் கொஞ்சம் சாப்பாடு ஓவரா போனதால லைட்டா தம்மொன்னு போட்டுட்டு வரலாம்னு டைட்டிலுக்கு வெளியே வந்தேன். நம்மளவிட கொஞ்சம் ஒரு 5+ வயசு கூட இருக்கும்(சாஃப்ட்வேர் இஞ்சினியர் புத்தி போகுதா பாரு. சரியா 5 வருஷம்னாலும் 5+னுதான் போடறது) கேட்டாரு.
என்ன தம்பி எங்க‌ வேல பாக்கிறீங்க?
டைடில் பார்க்.
"டைடில் பார்க்னா டைட்டா தண்ணியடிச்சுட்டு பார்க்ல ஃப்ளாட்டாயிருதா? ஹா ஹா ஜஸ்ட் கிட்டிங்" என்றார்.(காட்டுப்ப்ய மாதிரி இருக்கான். என்ன இங்கிலீஷ்லெல்லாம் பேசறான். கொஞ்சம் உஷாரானேன்)
யோவ்!, இப்ப என்னதான் வேணும்? என்றேன் கடுப்பானவனாய்.
எனக்கு ஒன்னும் வேண்டாம். உனக்கு ஏதாவது வேல வேனும்னா சொல்லு, ஐடியா தர்றேன்.
யோவ், இருந்தாலும் உனக்கு எகத்தாளம் அதிகந்தான். ஆமா நீ என்ன பன்ற?
நான் பக்கத்துல இருக்கற ஃப்லிம் சிட்டில..
ஃப்லிம் சிட்டில..
மாடு மேய்ச்சிகிட்டு இருக்கேன்.
என்னது மாடு மேய்ச்சிகிட்டு இருக்கிறயா?
ஆமாப்பா, நானும் சாப்ட்வேர் இஞ்சினியராதான் இருந்தேன், நைட் சிஃப்ட், ஆன் கால், ஸ்டேடஸ் மீட்டிங், எஸ்கலேஷன்னு கஷடபட்டுகிட்டு இருந்தேன். உங்களுக்கு 2009 ரெசிசன்னா எனக்கு 2001. அப்போ சுகம் நெனைச்சு கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன். இப்போ எந்த தொந்தரவுமில்லை நிம்மதியா போயிட்டிருக்கு லைஃபு என்றார்.( அவனா நீ)
ஆமா தம்பி நீங்க?
நான் முன்னாடி நல்லாதான் இருந்தேன் இப்பதான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்.
என்ன தம்பி சொல்றீங்க?
"நான் முன்னால மாடுதான் மேய்ச்சிகிட்டு இருந்தேன் ஆனா, இப்ப சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆயிட்டேன்" என்றேன்..

அடடா லேட்டாயிடுச்சே, ப்ராஜெக்ட் மேனேஜர் ஏதோ ரெசிசன் விஷயமா டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னாரே. அவசர அவசரமாக கிளம்பினேன்....(ஆமா இது மட்டும் ஏன் ஃபிங்க் கலர்ல இருக்கு)

கருத்துகள் இல்லை: