திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29

பாரம்பரிய வரலாறு கொண்டதும், ஜின்னா- காயிதே மில்லத், போன்ற மதிப்புக்குரியவர்களால் வளர்க்கப்பட்டதுமான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எனும் தாய்ச்சபை ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் பலமான அணியாகவும், சென்னை மாகாணத்தில் பலமுள்ள எதிர்கட்சியாகவும் இருந்த வரலாறு உண்டு. அத்தகைய சிறப்புடைய தாய்ச்சபை பின்னால்வந்த தலைவர்களின் சுயநல முடிவுகளால், பிறையை கொடியில் வைத்திருப்பதற்கு ஏற்றவாறு 'வளர்பிறை'யாக இல்லாமல் 'தேய்பிறை' யாக மாறி நிற்கிறது.

இப்படி கரையும் ஐஸ் கட்டியாக தாய்ச்சபை மாறியதற்கு காரணம் 'கொடுத்தவரைக்கும் லாபம்' என்று அரசியல் கட்சிகளிடம் அடமானம் ஆனதும்,உரிய நேரத்தில் தைரியமான முடிவுகள் எடுக்கதவரியதும்தான். உதிரிக்கட்சிகள் கூட எங்களுக்கு ஐந்து சீட்டு வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலையில் மறுபடியும் தி.மு.க. ஒதுக்கிய [பிச்சை போட்டது மாதிரி போட்ட] ஒரு சீட்டை 'மனநிறைவோடு' பெற்று வந்துள்ளது தாய்ச்சபை. வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் வாக்கு வங்கியுடைய சிறுத்தைகளுக்கு இரு தொகுதிகள்; தமிழகத்தில் முப்பது மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம் சமுதாய கட்சியான லீக்கு ஒரு இடம். இதுதான் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!

ஒரு தொகுதி ஒதுக்கியவுடன் தூக்கிவீசிவிட்டு சீறும் வேங்கையென தாய்ச்சபை வெளியேறி தனித்து போட்டி என அறிவித்து இருக்குமானால், தாய்ச்சபையின் மானமும் காக்கப்பட்டிருக்கும் அதோடு முஸ்லிம்கள் போடுவதை பொறுக்குபவர்களல்ல என்பதை அரசியல் கட்சிகளும் உணர்ந்திருக்கும். என்ன செய்ய! பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது கேரளாவில் காங்கிரசுடன் உள்ள உறவை முறிக்கவேண்டும் என்று பிரதான தலைவர்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளை புறந்தள்ளி காங்கிரஸ் உறவை தொடர்ந்தது தாய்ச்சபை. அதேபோல் இன்று கிள்ளுக்கீரையாக கருணாநிதி கருதியபோதும், தூக்கி போட்ட ஒரு எலும்பை கவ்விக்கிக்கொண்டு வாலாட்டுவதுதான் கடமை என தாய்ச்சபை கருதிவிட்டது போலும்.

சரி! வாங்கிய இந்த ஒரு சீட்டிலாவது தனி சின்னத்தில் நின்று வென்று தனித்தன்மையை நிலை நாட்டுவார்களா? அல்லது கடந்த முறை போன்று தி.மு.க. உறுப்பினராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தது போன்று இந்த முறையும் தி.மு.க. உறுப்பினராக நாடாளுமன்றம் செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!


More than a Blog Aggregator

by அன்புச்செல்வன்
ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

திமுக கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டதாகவும், அவரை கட்சியில் சேருமாறு திமுக தலைமை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரும், ஜனநாயக முன்னேற்றகழக நிர்வாகிகளும் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.


திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், "இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ஜனநாயக முன்னேற்ற கழக தலைமை நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளோம். ஜனநாயக முன்னேற்ற கழகம், வீரவன்னியர் பேரவை போன்றவை சமுதாய அமைப்புகளாக தொடர்ந்து செயல்படும்", என்று கூறினார்


More than a Blog Aggregator

by அன்புச்செல்வன்
ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

திமுக கூட்டணியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டதாகவும், அவரை கட்சியில் சேருமாறு திமுக தலைமை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரும், ஜனநாயக முன்னேற்றகழக நிர்வாகிகளும் இன்று முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.


திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், "இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ஜனநாயக முன்னேற்ற கழக தலைமை நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளோம். ஜனநாயக முன்னேற்ற கழகம், வீரவன்னியர் பேரவை போன்றவை சமுதாய அமைப்புகளாக தொடர்ந்து செயல்படும்", என்று கூறினார்


More than a Blog Aggregator

by டவுசர் பாண்டி
அல்லாறோம் ,கூட்டணி பத்தி பேசிடாங்கோ,
அப்பால கீற மீதி பேரு கூட்டணி பேசராங்கோ,
இப்போ நேரடி பேட்டி..........

(சரத்குமார் , இல . கணேசன்

& T. ராஜேந்தர் - டவுசர் பாண்டி )

டவுசர் பாண்டி ; அல்லாருக்கும் வன்கம் !!!

முவரும் ; வணக்கம் , பாண்டி அவர்களே ,

உட்காருங்கள் ,

டவு பா ; உங்க லச்சிய திமுக யாரு கூட

கோட்டனி வைக்க போதுபா ?

T.R ; நாங்க மூணு பேரு , உன்னோட சேத்தா,

நாலு பேரு , புடிக்கபோறோம் நாப்பது .

டவு பா ; உங்களோட கோட்டநில ஆருக்கு எத்தினி சீட்டு ,?

இல.க ; ஆளுக்கு பத்து .

சரத் ; அண்ணே , பாத்து இன்னு சொல்றத்துக்கு

பதிலா பத்துன்னு சொல்றாரு .

T.R ; அண்ணன் சரியா தான் சொல்றாரு , நாம

மூணு பேரும், ஆளுக்கு பத்து தொகுதி எடுத்துக்கலாம்

மீதி தொகுதிய நம்முடன் சேர துடிக்கும் மீதி கட்சிகளுக்கு

ஒதுக்கலாம் .

இல .க ; ஆம் ,ஆம் அப்படியே செய்வோம் .

டவு பா ; உண்ணுமா ,இந்த ஒலகம் உங்கள நம்புது ????

T.R ; நான் யாருன்னு தேர்தலில் பாருங்கள் , எனக்கு

உள்ள மக்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை .

சரத் ; என் செல்வாக்கு மட்டும் என்ன சாதாரானமானதா ?

இடை தேர்தலில் பார்த்து அனைத்து கட்சிகளும்

மிரண்டு போய் உள்ளது .

இல .க ; எங்கள் செல்வாக்கை நான் சொல்லத்தேவையே இல்லை .

டவு பாண் ; யப்பா !! எனுக்கு ஒரே மழ்க்கம், மழ்க்கமா,

வருது .இப்போ நீங்கோ இன்ன தான் சொல்லோ வரிங்கோ ,

அத்தே மின்ன சொல்லுங்கோ !

சரத் ; அதை எங்கள் கூட்டணி பொதுக்குழுவில் சொல்கிறோம் .

டவு பாண் ; அல்லறோம் தான் கீரிங்களே , இப்போவே

சொன்னா தான் இன்னா தேஞ்சா

பூடுவிக்கோ !

மூவரும் ;!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதிர்ச்சியுடன் பார்க்க ....

டவு பா ; செரி, உங்கோ தேர்தல் அறிக்க யின்னா ,

அத்த மின்ன சொல்லு ?

T.R ; தி மு க , ஒரு இடத்தில் கூட வெற்றி பெற

முடியாமல் என்னிடம் தோற்க போகிறது ,

அதை மீண்டும் நினைவு கூர்கிறேன் .

இல .க ; காங்கிரஸ் கட்சி எங்களிடம் எத்தனை

இடங்களில் தோற்க போகிறது பாருங்கள் .

சரத் ; தேமுதிக என்னிடம் படும் தோல்வியை

மறக்கவே மாட்டார்கள் .

டவு பாண் ; ஆளாளுக்கு ஒர்தர புட்ச்சி வச்சிகீனு

எப்ப தா கேலீப்பீங்கோ ?

இல .க ; கூட்டணி பங்கீடு முடிந்தவுடன் கிளம்பி

போய் ஜெயிக்க வேண்டியது தான் .

டவு பா ; மறு தபா கேக்கரேன், ஆருக்கு எத்தினி தொகுதி ?

( முவரும் ஒன்றாக ) - ஆளுக்கு பத்து .

டவு பாண் ; நீங்கோ கீரதே, மூணு பேரு தானே ?

இல .க ; நீ கணக்கை தவறாக போடுகிறாய் .

சரத் -10 , லதிமுக -10, பா ஜ க -10,

டவுசரு நீ --10

டவுசரு எஸ்கேப்

(அதிர்ச்சியுடன்ஓடுகிறான்!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

29.03.2009. இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் யுத்த விதவைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைப்பதுடன் அவர்களில் பெருமளவானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்ற தகவல் அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது. தொடரும் யுத்தம், கடத்தல், காணாமல் போதல் போன்ற செயற்பாடுகளால் விதவைகளை அதிகம் கொண்ட மாகாணங்களாக வடக்கும், கிழக்கும் காணப்படும் நிலையில் இந்த யுத்த விதவைகளினால் தமிழினம் சமூக, கலாசார, பண்பாடு ரீதியாக பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த வாரம் [...]
 தி.மு.க. தலைமை பதவியை கனவிலும் எண்ணியது இல்லை : கருணாநிதிக்கு வைகோ பதில் : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :  அந்த நாள் ஞாபகம் வந்தது என்றும், கட்சி தலைமையைக்காப்பாற்றும் நோக்கத்தில், தான் பெயர் சொல்ல விரும்பாத, குட்டை மனப்பேராசை கொண்ட ஒருவன் செயல்பட்டது தெரிந்தது என்றும், கவிதைக்கடிதம் என்ற பெயரில் முதல்-அமைச்சர் கருணாநிதி என்னை தாக்கி உள்ளார்.  

கருத்துகள் இல்லை: