திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29

ஆனந்த விகடன் 1-ஏப்ரல்-2009 இதழில் 'டீன் கொஸ்டீன்' என்ற பகுதியில் ஒரு கேள்வியும் அதற்கு ஒரு 'நிபுணரின்' பதிலும்...

கேள்வி: ஆங்கிலம் தவிர இன்னொரு மொழி கற்றுக்கொள்ள ஆசை. இந்தி, பிரெஞ்சு, ஜாப்பனீஸ், மலாய் என்று ஆளாளுக்கு சாய்ஸ் சொல்லி குழப்புகிறார்கள். எனக்கு பார்மசி கம்பெனியில் மார்க்கெட்டிங் பணி. எந்த மொழி கற்றுக்கொள்ளலாம் என்று வழிகாட்டுவீர்களா? - எம். ஆறுமுகம், சென்னை-45


பதில்: சித்ரா கிருஷ்ணன், தலைவர், School of English and Foreign Languages, சென்னைப் பல்கலைக்கழகம்.

சர்வதேச அளவில் ஆங்கிலம் தவிர, பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், மற்றும் இத்தாலிய மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். இந்தியாவில் இந்தி மொழிதான் பெருவாரியான மக்கள் பேசும் மொழி. எனவே அதைக் கற்றுக்கொண்டால் இந்தியாவில் எங்கு சென்றாலும் சமாளிக்கலாம். உலகில் அதிக மக்கள் பேசும் மொழி சீனம். ஆனால் அதற்கு இங்கு டிமாண்ட் கிடையாது. எனவே, அதைக் கற்றுக் கொள்வதால் புதிய மொழியைத் தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி மட்டுமே.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகத்திலும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வெளி நாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு இல்லாவிட்டால், இந்தி மொழியைக் கர்றுக் கொள்வது உசிதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்"
திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனைத் தொகுதிகள் என்பது முடிவாகிவிட்டது. அடுத்தது யாருக்கு எந்தெந்தத் தொகுதி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்படும். அந்த முடிவு இப்படி அமையலாம்.

திமுக

1.மத்திய சென்னை
2. வடசென்னை
3.தென்சென்னை
4.திருபெரும்புதூர்
5.அரக்கோணம்
6.நீலகிரி (தனி)
7.திருவள்ளூர்(தனி)
8.சிதம்பரம்
9.நாகப்பட்டினம்(தனி)
10.மதுரை
11.திருச்சிராப்பள்ளி
12.பெரம்பலூர்
13.தஞ்சாவூர்
14.தர்மபுரி
15.திருவண்ணாமலை
16.திருநெல்வேலி
17.கோயமுத்தூர்
18. தூத்துக்குடி
19. ஆரணி
20. நாமக்கல்
21. ராமநாதபுரம்

காங்கிரஸ்

1.கள்ளக்குறிச்சி
2.சேலம்
3.ஈரோடு
4.கரூர்
5.சிவகங்கை
6.பொள்ளாச்சி
7.திருப்பூர்
8.காஞ்சிபுரம் (தனி)
9.திண்டுக்கல்
10. மயிலாடுதுறை
11.தேனி
12.கிருஷ்ணகிரி
13.தென்காசி (தனி)
14.விருதுநகர்
15. பாண்டிச்சேரி
16. கன்னியாகுமரி

விடுதலைச் சிறுத்தைகள்

1. விழுப்புரம் (தனி)
2. கடலூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

வேலூர்


More than a Blog Aggregator

by அபூ அப்திர்ரஹ்மான்
குழந்தைக் கொலையை நியாயப் படுத்தும் பைபிள்!இனவெறியின் உச்ச கட்டத்திற்குச் சென்ற புரோகித வர்க்கம் தம் ஈனச் செயல்களை நியாயப் படுத்த அவற்றை வேத உபதேசங்களாக்கி மக்கள் மன்றத்தில் வைத்தன. இவர்களின் வெறிச் செயலை படம் பிடித்துக் காட்டும் இன்னொரு சம்பவம் தான் அன்றைய பாபிலோன் நகல மக்கள் மீது கொண்ட வெறுப்பில் அவர்களின் குழந்தைகளைக் கூட கல்லாலடித்துக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம். சங்கீத புஸ்தகம் கூறும்

அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம் 
மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான். பாட்டு முடியும்போது நாயகிக்கு நினைவு திரும்புகிறது. யெஸ், ஷீ இஸ் ஆல் ரைட்.

அடடா என்ன அழகு படத்தில் வரும் இந்தக் காட்சி ஒரு சோறு பதம். காட்சிகள் இருக்கட்டும், கதை?

ஒரே கல்லூ‌ரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கும்பல் நாயகியை கடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்து விடுகிறார் நாயகி. இதன் பிறகு வருவது நாம் மேலே பார்த்த வித்தியாசமான இதுவரை திரையில் பார்த்திராத அந்த பாட்டு சிகிச்சை. நாயகனின் தந்தை, மகன் நாயகியை காதலிப்பதை அறிந்து நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார்.

இப்போது வில்லன் என்ட்‌ர். நாயகியின் அப்பா ஒரு மத்திய அமைச்சர். காதலுக்கு அவர் சிவப்பு விளக்கு காட்டுகிறார். அப்புறமென்ன... அடிதடி இறுதியில் சுபம்.





ஆகாஷ் ஜெய் படத்தின் நாயகன். அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. நாயகி நிக்கோல் காஸ்ட்யூமை கம்மிப் பண்ணினாலே சமாளித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆகாஷின் அப்பாவாக சரத்பாபு. நல்ல மனம்படைத்த மனநல மருத்துவராக ஜமாய்க்கிறார். அம்மாவாக வரும் ரேகாவுக்கு வேலையே இல்லை.

ஆசிஷ்வித்யார்த்தி வழக்கமான ஹிஸ்டீ‌ரியா வில்லன். ரவுடிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதும்போது மத்திய அமைச்சரா இல்லை மத்திய சென்னை ரவுடியா என திகைக்க வைக்கிறார். அரத பழசு கதையிலும் அழகாக காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது கிச்சாவின் கேமரா. மொத்தம் ஏழு பாடல்கள். சில கேட்கிற மாதி‌ரி இருப்பது ஆச்ச‌ரியம்.

கருணாஸின் கடி காமெடி சில நேரம் சி‌ரிக்கவும் வைக்கிறது. நிக்கோலை மானபங்கப்படுத்த பாதுகாப்பு வீரரே அவர் மீது பாய்வதெல்லாம் காதுல பூ..

படம் முடிந்த பிறகு பெருமூச்சுதான் வருகிறது, அடடா என்ன அவஸ்தை.

தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கடும் வெறுப்பை உமிழ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிலிஃபிட் தொகுதி வேட்பாளர் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாயாவதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வருண்காந்தி தானே முன்வந்து பிலிஃபிட் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.ஆனால், காவல்துறை முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தது

வருண்காந்தி பிணையில் விடுதலையாக மனுதாக்கலும் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

வருண்காந்தி நேற்று நீதிமன்றம் வந்தபோது ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். . வருண்காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் காவலர்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் காவல்துறை தடியடி நடத்தியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினார்கள்.

வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி கடும்கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வருண் காந்தியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக அரசு சார்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: