செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

பேச்சுவார்த்தைக்கு வரமுன்னர் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பொதுமக்களையும் விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களின் நன்மைகருதி அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்லத் தயாரென விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பிரித்தானிய ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார்.
எனினும், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்ல அரசாங்கம் தயாரில்லையெனத் தெரிவித்த அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, எனினும் அரசாங்கத்திடமிருந்து விடுதலைப் புலிகள் பதிலை எதிர்பார்க்கிறார்களாயின் தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் அனைவரையும் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றார்.

"தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறோ அல்லது ஆயுதங்களைக் கீழே வைக்குமாறோ நாங்கள் கூறவில்லை. அதனைப் பற்றி நாங்கள் பின்னர் பார்ப்போம்" என்றார் அமைச்சர்.

முன்நிபந்தனைகள் எதுவுமின்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவிருப்பதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்கள் மீது நாளாந்தம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இதனால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நடேசன் தனது செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, வடபகுதியை முழுமையாக மீட்கும் இராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உக்கிரப்படுத்தி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெருமளவானவற்றைக் கைப்பற்றத் தொடங்கியதும், பேச்சுவார்த்தைக்குத் தயாரென விடுதலைப் புலிகள் பல்வேறு தடவைகள் அழைப்பு விடுத்தனர்.

எனினும், விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அழைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வந்ததுடன், விடுதலைப் புலிகள் தம்மிடம் சரணடைய வேண்டுமென முன்னர் கூறியிருந்தனர். ஆனால், முல்லைத்தீவில் மீட்பதற்கு இன்னமும் 20 கிலோமீற்றர் நிலப்பரப்பே இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைவதையா அல்லது அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது பற்றியோ பின்னர் சந்திப்போம் என அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இரணைப்பளை பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளின் தலைவர் பிரபாகரனால் மிகவும் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் திறந்து வைக்கப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலமைக் காரியாலயத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இவ் ஆட்பதிவுதிணைக்களத்தை திறந்து வைத்த பிரபாகரன் முதலாவது அடையாள அட்டையை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கைப்ற்றப்பட்டுள்ள தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வன்னி குடியிருப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் பெற்றுக்கொள்ள இராணுவத்தினரால் முடிந்திருக்கும் என நம்ப்படுகின்றது.
முல்லைத்தீவு சுண்டிகுளம் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் படகொன்றின் மீது தாம் நடத்திய தாக்குதலில் 5 புலிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் சென்ற நான்கு படகுகளைக் கடற்படையினர் கண்காணித்துள்ளனர். இந்த படகுகளுக்கு அருகில் தமது படகுகள் சென்ற போது, ஒரு படகில் இருந்து கடற்படையினரை நோக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனையடுத்துத் தாம் அந்த படகின் மீது பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து படகில் மேற்கொண்ட சோதனையின் போது, 5 சடலங்களையும் 2 ரி56 துப்பாக்கிகள், ஒரு கைதுப்பாகி ரி.என்.ரி ரக வெடி மருந்துகளையும் இரவில் பார்க்கும் தொலைநோக்கி கருவி, நீருக்குள் நீந்திச் செல்லப்பயன்படுத்தப்படும் கருவி, வரைப்படம் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ஏனைய படகுகளில் சென்ற 54 பொதுமக்களைத் தாம் காப்பற்றியதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவிருக்கின்றார்.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக இதற்கான அழைப்பை இன்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அனுப்பி வைத்துள்ளது.

அலரி மாளிகையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம் பெறும் என்றும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் "நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு என அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக எமது கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கும்" " என்று கூறினார்.


" ஈழத்தில் என்ன நடக்கிறது " என்ற தலைப்பில் கடந்த 21-10-2008 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வை.கோ அவர்கள் தலைமையில் நடந்த கருத்தரங்கில், ம.தி.மு.க. வின் அவைத்தலைவர் மு.கண்ணப்பன்,
" தமிழ்நாடு- தனிநாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும் " என்று பேசிய மு.கண்ணப்பன்,
" தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது " தொடர்பாகவும்,"புலிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவிப்பது " தொடர்பாகவும், சட்டப்பேரவையில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டுவந்து, அந்தத் தீர்மானமும் ஏக மனதாக ஏற்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றால் ஆறரை கோடி தமிழர்களும் ஆதரிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? ஆனால் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தவில்லை. இப்படித்தான் இருக்கிறது ஈழப்பிரச்னையில் கலைஞரின் நிலைப்பாடு என்று பேசிய மு.கண்ணப்பன்,
இலங்கை உள்விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிக்கொண்டே, அந்த நாட்டுக்கு ஆயுத உதவியோடு நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கி வரும் மத்திய அரசு, நம் வரிப்பணத்தை கொண்டு நம் தமிழினத்தை அழிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறிய மு.கண்ணப்பன்,
ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார அரசு நடத்தும் இலங்கை அரசிடம் இருந்து தமிழ் இனத்தை மீட்கும் உரிமைப்போராட்டத்தில் புலிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சொந்த நாட்டில் தமிழக மக்களையும், பிழைக்கச் சென்ற இடத்தில் தமிழ் இனத்தையும் சீண்டும் நிலை தொடர்கிறது, இதையெல்லாம் பொருத்துகொண்டிருக்க முடியாத வருங்கால தமிழ் சந்ததியினர் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள தயாராகி விட்டால் தனித் தமிழ்நாடு நிச்சயம் மலரும் என்று சொன்ன மு. கண்ணப்பன்,
எங்கள் மீது பிரிவினைவாதத்தை தூண்டியதாகவும், சட்ட விரோதமாக கூடியதாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள், ஈழப்பிரச்சினையில் ஒருமித்த கருத்து உருவாகி வரும் நிலையில், மத்திய அரசை திருப்திப்படுத்தவும், தங்களது அரசைக் காப்பாற்றிகொள்ளவும் எங்களை கைது செய்திருக்கிறது கலைஞர் அரசு என்று பேசிய மு.கண்ணப்பன்,
இன்று கலைஞர் முன்னிலையில், ம.தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் தி.கே. சுப்ரமணியுடன் தி.மு.க. வில் இணைந்தார். கோவணம் பறிபோவது தெரியாமல் தோளில் கிடக்கும் துண்டை பெருமையாக நினைக்கும் இளிச்சவாய் தமிழர்கள் இருக்கும் வரை இது போன்ற அரசியல்வாதிகளின் அரசியல் பிரவேசம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


More than a Blog Aggregator

by ஷீ-நிசி



வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!







நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்!






வழிந்துவிழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன!

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

கருத்துகள் இல்லை: