வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-27

குஜராத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அமைச்சர் மாயா பென் கோட்னானி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியதாகவும் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இவர் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தது. இரண்டு முறை அனுப்பப் பட்ட அறிவிக்கைக்கு எவ்வித பதிலும் அளிக்காததைத் தொடர்ந்து, இவர் தலைமறைவாகிவிட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இவர் எந்நேரமும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.

தனக்கு முன்பிணை வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப் பட்டதை அடுத்து, இன்று அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் இவர் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அக்கட்சி போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தே.மு.தி.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அக்கட்சி போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தே.மு.தி.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நாடாளுமன்ற தேர்தலில் ஓரளவுக்கு கூட்டணி முடிவாகிவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் நான்கு முனை போட்டி என்று சொல்லப்பட்டாலும், வெற்றி அணியாக திமுக, அதிமுக அணிகள்தான் உள்ளது. தேமுதிக மூன்றாவது இடத்தில் உள்ளது. தனித்து போட்டியிடுவதால், தனது தனித்தன்மையை இழக்காமல் இருக்கிறது. இது அந்த கட்சி மீது உள்ள மரியாதையை உயர வைத்துள்ளது. இந்த முறை அந்த கட்சி கணிசமான ஓட்டுக்களை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி அணியாக இருக்குமா? என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு பதில் சொல்லும்.

இந்த தேர்தலில் தேமுதிக எந்த அணியின் ஓட்டை அதிகம் பிடிப்பார் என்பதை ஆராய வேண்டியதுள்ளது. அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளையும் பிடிக்காதவர்கள் தேமுதிகவுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். அதோடு, ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகளும் தேமுதிகவுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் அந்த ஓட்டுக்கள் அதிமுகவுக்கு போக வேண்டிய ஓட்டுக்களில் ஒரு பகுதியாக இருக்கும். எனவே தேமுதிகவின் ஓட்டுக்களால் அதிமுகவுக்கு நிச்சயம் பாதிப்பு உண்டு. அதிமுக வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் சினிமா ரசிகர்கள். இதேதான் விஜயகாந்திற்கும்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் தேமுதிக, வட மாவட்டங்களில் அதிகம். கடலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக 14 சதவீதம் வாக்குகளை வாங்கினார். பாமக, அதிமுக கூட்டணியில் இருப்பதால், இதுவும் அதிமுகவுக்கு இழப்பாகும். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் வாக்குகளையும் பிரிப்பார். அந்த ஓட்டுக்கள் திமுக அணிக்கு போக வேண்டியவை.

தேமுதிக பிரிக்கும் வாக்குகள் அந்தந்த தொகுதியின் நிலவரத்துக்கு ஏற்ப திமுக, அதிமுக அணிகளுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இந்த தேர்தலில் விஜயகாந்த் வாங்கும் வாக்குகள் மற்ற இரண்டு அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும்.

உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை(28.03.2009) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படவுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த பூமி நேரம் (Earth Hour) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது உலக இயற்கை நிதியம்.
இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.
2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பூமி நேரம், வருகிற சனிக்கிழமை (28ம் தேதி) இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 1000 நகரங்களைச் சேர்ந்த 100 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏதோ நம்மால் முடிந்தது பூமிக்கு நன்மை செய்யவிட்டலும் தீமை செய்யாமலாவது இருப்போம்..!.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக பத்திரிக்கை,மீடியா என அனைத்து இடங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட அசின்-நல்ல முத்துக்குமார் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. நல்ல முத்துக்குமார் மற்றும் அவனது தாயார் சுடலை , இருவரும் சேர்ந்து ஆடிய நாடகம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. நல்லமுத்துக்குமாரைத்தேடி மும்பை,தூத்துக்குடி என விசாரணைக்காக பறந்த தமிழக போலிசார் , சுடலையை தோண்டி துருவியுள்ளார்கள். இந்நிலையில் நேற்று பொன்னேரி டிஸ்பியைத் தொடர்பு கொண்டு நல்ல முத்துக்குமாரே பேசியுள்ளான். தான் தற்போது புட்டபர்த்தியில் இருப்பதாகவும், விரைவில் சரணடைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். மேலும் தகவல்களின்படி அசினை பணம் கேட்டு மிரட்டியதையும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. அசின் இப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் ?

கருத்துகள் இல்லை: