வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-27

27.03.2009. பொதுமக்களின் நிலை குறித்த அக்கறையை தமது அரசாங்கமும் பகிர்ந்துகொள்வதாக  தெரிவித்த ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹகார, இலங்கை அரசாங்கம் 48 மணிநேர போர்நிறுத்தக் காலத்தை அறிவித்தமையைச் சுட்டிக்காட்டினார். புலிகளே பொதுமக்களை வெளியேறவிடாமல் தடுத்துவருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், “பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதற்கு புலிகள் இன்று சம்மதித்தாலும், அதற்கு வசதியாக தற்காலிக போர்நிறுத்தம் ஒன்றைச் செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “முரண்பாட்டுக்கு முடிவுகாணும் துரிதமான வழி புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து பொதுமக்களை வெளியேற விடுவதுதான்” என்று அவர் சுட்டிக்காட்டினார். வடக்கில் [...]


More than a Blog Aggregator

by சத்தியக் கடதாசி


சில கயவாளிகள் அநாகரீக கமெண்டுகளை போடுவது போல் தெரிகிறது. அண்ணன் உண்மைத்தமிழனில் இருந்து பரிசல்காரன் வரை இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

என்னுடைய எண்ணம், பழைய நபர்கள் இந்த செயலை செய்ய துணியமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். தமிழக போலீசாரின் திறமை பற்றி...

நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால்...பழைய தமிழ் இணைய வரலாறு தெரியாமல் தேன் கூடுகளில் கை வைக்கிறீர்கள். தமிழக சைபர் க்ரைம் சிறப்பாக செயல்படுகிறது.

கூகிளில் நிறுவனத்தில் இருந்து ஸ்கைப் நிறுவனம் வரை தமிழக போலீஸ் கேட்கும் தகவல்களை உடனே தர தயாராக உள்ளது.

போலீசார் கேட்கும் தகவல்கள் உடனுக்குடன் மின்னஞ்சலில் ஓடிவருகிறது. இந்த நிறுவனங்களில் இதற்கென தனி குழு பணியாற்றுகிறது.

நீங்கள் ப்ராக்ஸி உபயோகப்படுத்தினாலும் சரி, ப்ரவுசிங் செண்டர் கணிப்பொறியில் இருந்து திருட்டுத்தனம் செய்தாலும் சரி, கண்டிப்பாக மாட்டிக்கொள்வீர்கள்.

ஆர்க்குட்டில் ஏற்கனவே இதுபோன்ற பல விஷயங்கள் நடந்தாலும், தமிழ் இணைய உலகில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை ஏற்கனவே வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்.

சிறைத்துறை ஐ.ஜியில் இருந்து ஐ.ஏ.எஸ் ஆபீஸர் வரை தமிழ் இணைய தளங்களை பார்வையிடுகிறார்கள். அரசியல்வாதிகளில் இருந்து பெரிய மனிதர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் குழுமும் இடமாக இணைய உலகு மாறிவிட்டது.

அதனால் உங்கள் சில்லுண்டித்தனங்களை விட்டுவிட்டு மாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், எந்த இணையம் 100 சதவீதம் பாதுகாப்பில்லை என்று நினைத்து இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறீர்களோ, அதே இணையம் உங்களுக்கும் 100 சதவீதம் பாதுகாப்பில்லை.

இது இருபுறமும் கூரான கத்தி என்பதை உணருங்கள். ஒரே நாளில் உங்கள் வீடு தேடி போலீஸ் வரும். தயவுசெய்து திருந்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்...
நல்ல தோழமை தான் நல்வாழ்க்கை வழிகாட்டி. நட்பை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும்.

மனிதனின் உணர்வு நிலை நூற்றாண்டுகளாக வளர்ச்சியடையவில்லை. எப்போதாவது ஒரு முறை தான் ஒரு மனிதன் மலர்ச்சி அடைகிறான்.

லட்சக்கணக்கான மக்களில் ஒரே ஒரு மனிதனின் மலர்ச்சி ஒரு விதி அல்ல. அது விதி விலக்கு. அவன் தன்னந்தனியாக இருப்பதால் கும்பலால் அவனை ச் சகித்துக் கொள்ளமுடியாது.

அவன் ஒருவிதமான அவமானச் சின்னமாகத் தெரிகிறான். அவன் ஒரு மனிதனாக இருப்பதே அவமரியாதையாகி விடுகிறது.ஏனென்றால் அவன் உன் கண்களைத் திறக்கிறான்.உன் ஆற்றலையும் உங்கள் எதிர்காலத்தையும் உணர வைக்கிறான்.

அதனால் தான் ஒரு கௌதம புத்தரோ ஒரு கபீரோ சுவாங்தஸ்வோ உங்களை நோகடிக்கிறார். காரணம் அவர் மலர்ச்சி அடைந்திருக்கிறார்.

ஓஷோ
50 வர்த்தக நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் 10,000 புள்ளிகளை தொட்டிருந்த சென்செக்ஸ், இன்றும் அதை தக்க வைத்துக்கொண்டது. அவ்வளவு தான். மற்றபடி இன்று பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இன்று நாள் முழுவதும் பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி, ஏறியும் இறங்கியும்தான் இருந்தது. இருந்தாலும் கடைசியாக வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 45.39 புள்ளிகள் ( 0.45 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 10,048.49 புள்ளிகளில் முடிவு பெற்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 26.40 புள்ளிகள் ( 0.86 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 3,108.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தின் போது மெட்டல், பார்மா, பேங்க், ஆட்டோ, ரியல்எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தன. ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், பெல், ரிலையன்ஸ், மாருதி ஆகிய நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தன.ரூ.68,489 கோடிக்கு இன்று வர்த்தகம் நடந்திருக்கிறது. பொதுவாக, சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 12 சதவீதமும் நிப்டி 10.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
பெங்களூரு :  குல்பர்கா அருகே ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பெண்கள் உள்பட 5 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உயிரழந்தனர். கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பீமா ஆறு ஓடுகிறது. பரிதாபாத் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 12 பேர் ஒரு படகில் ஆற்றைக் கடந்து கொண்டு இருந்தனர். படகு, ஆற்றின் நடுப்பகுதியில் சென்றபோது, அதிக பளு காரணமாக திடீரென கவிழ்ந்தது.

கருத்துகள் இல்லை: