செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30


ஒருவன் மது அருந்தினால் அவனுக்கு மட்டும் கேடு அல்ல அவன் குடும்பத்துக்கே கேடு .மக்களை காக வேண்டிய அரசே மக்களை மயக்குகிறது மதுவால் .
தமிழக அரசே ஆளும் அரசே நீங்கள் செய்த சாதனை பட்டியலை ஒவ்வொரு மாநாட்டிலும் வாசிபீர்களே இதையும் சேர்ந்து வாசியுங்கள் .

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வளவு மதுகடைகளை துறந்தோம் அதனால் நம் குடிமகன்கள் இவ்வளவ்வு பேர் போதிக்கப்பட்டு இருகிறார்கள் மன்னிக்கவும் பாதிக்கப்பட்டு இருகிறார்கள் .பொங்கல் ,தீபாவளி ,புத்தாண்டு போன்ற திருநாட்களில் நாங்கள் அரசுக்கு ஒரே நாளில் நூற்றி ஐம்பது கோடி வருமானம் ஈட்டி தந்தோம் . எங்கள் ஆட்சியில் மதுவை அருந்தி வாகனம் ஓடியதில் இவ்வளவு ? பேர் மரணம் .எவ்வளுவு குடும்பங்கள் நாடு தெருவுக்கு வந்துள்ளன போன்ற அரும் பெரும் சாதனை பட்டியல்.

வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் என்று கூவுகிறீர்கள் ,ஆனால் அவர்கள் கையில் மது கூபி தானே இருக்கிறது .பின் எப்படி ஒரு அருமையான சமுதாயம் உருவாகும் .

மது கடைகளை துறப்பதிர்ருக்கு பதிலாக அரசு மருத்துவ மனையை துவகுங்கள் .ஏழை உங்களை வாழ்த்துவான் .இருக்கும் அரசு மருத்துவமனைகளை மேன்படுதுங்கள்.

இன்னும் குறிப்பாக தமிழ் நாட்டுல மது உற்பத்தி ஆலைகளை இழுத்து மூடுங்கள்.

தங்கள் சுய விளம்பரத்தை மறந்து மதுவால் ஏற்படும் தீமையை மக்களிடத்தே ஊடகங்கள் மூலமாக விளக்குங்கள்.

இன்னும் பேரு நகரங்களில் மேல் தட்டு வர்க்கத்தினர் குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் எல்லாம் கூட மேற்கத்திய மோகத்திற்கு அடமையாகி மதுவை அருந்துவதில் பெருமை கொள்கின்றனர். நமது நாட்டிற்க்கும் நமது பண்பாட்டிற்கும் நல்லதலே.
மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆகிவரும் ஈழம் தொடர் மிகபெரிய அதிர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய அந்த தொடர் . நம் இனம் ஒரு பகுதி நம் கண் எதிரிலேயே அழிகிறது .இலங்கை அரசின் ராணுவ தாக்குதலால் ஈழ மக்கள் தினமும் வாழ்வா சாவா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .இலங்கையை தன் உழைப்பால் செளிப்பாகிய இனம் இப்பொழுது நாதியற்று கிடக்கிறது .

பொழுதுபோக்கு தொலைகாட்சிகளுக்கு நாடுவே மக்கள் தொலைக்காட்சி ஈழ நிலையை ஒளிபரப்பி தன் சமுஉக பொறுப்பை நிலை நாட்டியதுக்கு நன்றி.

(ஈழ தொடரின் கோப்புக் காட்சி தொடர்பு இன்னைய தளம் தெரிந்தால் என்னக்கு தெரிவியுங்கள்.)


More than a Blog Aggregator

by வெங்கிராஜா
மரத்திற்கு பின்
மறையும் மலை-
தூரம்.

என்றோ தொலைந்த செருப்பை
மாட்டி நடந்தேன்
சருகுகளின் ஓசை.

புல்நுனி பனித்துளி
சறுக்கி விழுந்தது
சேற்றில் சலனம்.

காதில் கூழாங்கற்கள்
உறைந்து கிடந்தது
கடல் அலை.

சட்டென விழித்தேன்
இன்னும் ஈரமாகவே இருக்கிறது
குடுவை.


More than a Blog Aggregator

by வெங்கிராஜா


தேதி மார்ச் 21.
மணி ஆறு.
புன்சிரிப்பு.
நாள்காட்டியில் வண்ணமயமாக ஒரு கோலம். குழந்தைகளோடு.
மூக்குக்கண்ணாடிக்யை மாட்டிக்கொண்டு வார்டன் கைகளை உரசி கண்திறந்து பார்த்தார். சரியாக கைகளை கீழிறக்கிய நொடி ஒருவன் தன்னால் இயன்றளவு அள்ளி வண்ணப்பொடியை முகத்தில் அடித்தான்.
"ஹோலி!"
சரசரவென பிள்ளைகள் வரிசையாக மலரும் சூரியகாந்தி போல எழுந்தனர். வண்ணங்களோடு விளையாடத் தொடங்கினர். கொஞ்சம் காற்றுக்கும் சேர்த்து நிறத்தை ஊட்டிவிட்டார்கள்... காக்காய் கடி கடித்து. பால்காரன் கொண்டுவந்த எரும்பால் ரோஸ் மில்க் ஆனது. செய்தித்தாள் எங்கும் பசுமைப்புரட்சி. ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்திற்கு கொஞ்சம் அரும்புக்கை ஆகாரம். பண்டிகைக்கு செய்த ஜாங்கிரியும் அல்வாவும் நீலநிறம் பூண்டன. வானத்திலிருந்து வானவில் குளத்திலன்றி... அன்று குளத்தினின்று வானவில் வானத்தில் பிரதிபலித்தது. "பச்சை நிறமே..." பாடலை முணுமுத்துக்கொன்டிருந்த வானொலி நிறங்களால் குளிப்பாட்டப்பட்டது. எல்லோர் உதடுகளிலும் வண்ணமயம், சிரிப்பொலிகளில் நிறம் மங்கா வீரியம். பூக்களும் கிண்ணங்களும், புத்தகங்களும், நாய்க்குட்டிகளும், மரம், மாம்பழம், மற்ற எல்லாமுமே நிறம் நிறமாய் நிரல் சேர்ந்தன. உடைகளில் நிறம் உள்ளங்களில் நிறம்.களைத்துப்போன குழந்தைகள் ஒரேயடியாக மாலை உணவருந்தி அந்தி கவியும் முன்னரே கண் சாய்ந்தார்கள். கனவுகளில் எத்தனை வண்ணமோ!

கண்ணாடியை எடுத்து தன் ஜிப்பாவில் துடைத்துக்கொண்ட வார்டன் தாத்தா பணியாட்களோடு நீர் விட்டு எல்லாவற்றையும் துடைக்கலாயினார். பால்குடம், தட்டுமுட்டு சாமான், படிக்கட்டு, நாய்க்குட்டி, சுவர்கள், ரேடியோ, கடியாரம், எல்லாம். கடைசியாக மொட்டைமாடி வந்த தாத்தாவுக்கு ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்டது.
தேம்பிக்கொண்டே, "என் துணியெல்லாம் அழுக்காயிடுச்சா தாத்தா?"
"அதனாலென்ன கண்ணு வேற எடுத்துகிட்டா போச்சு"
"அப்ப பரவாயில்லையா?"நான் தூங்கலாமா?"
"ம்.போ.போய் தூங்கு துரை."
"ஆமா தாத்தா என் சட்டையில என்ன அழுக்கு இருக்கு?"
"அது... உன் வெள்ளை சட்டையில நிறைய நிறம் இருக்கு: மஞ்சள், நீலம், சிவப்பு, பச்சை... அவ்வளவுதான்."
"வெள்ளை, செவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் இதெல்லாம் என்ன தாத்தா?எப்படியிருக்கும்?"
"நீ இப்ப போய் தூங்குடா கண்ணா. தாத்தா நாளைக்கு சொல்றேன், சரியா?"
"சரி தாத்தா!"
திடீரென்று மின் தடை. வேலையாட்கள் அனைவரும் தடுமாற, விழ, பொருட்கள் அசைய, நிலைகுலைய, ஒரே சத்தம். மாடிப்படிகளில் இருட்டில் இறங்கும் சிறுவன் மட்டும் நிலையாக, வேர் போல, நிமிர்ந்து நடந்து செல்ல... மெல்ல மின்சாரம் திரும்ப வந்தது.
"இதுதான் தாத்தா கடைசி... இந்த போர்டை துடைச்சிட்டா ஆச்சுதுங்க ஐயா."

நிறங்களையெல்லாம் இழந்த பலகை வாசித்தது... "பார்வையற்ற குழந்தைகள் 
குருகுலம்".



இது என்.டி.டி.வி-யின் சிறந்த விளம்பரப் படத்திற்கான விருதைப் பெற்ற பொது சேவை விளம்பரம். கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்திய குறும்படமும் ஆகும்.


More than a Blog Aggregator

by வெங்கிராஜா
"தேரடி வீதியில் தேவதை வந்தா.. "

இந்த பாடலை ஒரே நாளில் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கே இல்லை. கடைத்தெருவுக்கு போனால் கூட வழியிலிருக்கும் வீடுகளில் எல்லாம் இதே பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். கார்த்திக்கின் குரலில் மாதவனும், விவேக்கும் பூக்களை வாரி இறைத்து ஆடிக்கொண்டிருப்பார்கள். இந்தப் பாடலுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உத்வேகம் பொதிந்திருக்கிறது. பீச், பார்க், கல்லூரி மைதானங்கள், பள்ளி கேன்டீன்கள் என யுவன்களும் யுவதிகளும் இதை ஒரு கேலி கானமாகவே ஆக்கிவிட்டிருந்தனர். இளமையின் வாசம் ததும்பும் முத்துக்குமாரின் கவர்ச்சிகரமான வரிகள் எல்லா டி.வி, அலைவரிசைகளிலும் எதிரொலித்துக்கொண்டிருந்தன. "வாடி என் கப்பக்கிழங்கே" எப்படி ஒரு தலைமுறையின் அடையாளமாகிப் போனதோ அப்படி இருபதுகளில் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு சின்னமாகும். இன்னமும் தெருவோரங்களில் சமோசா கடித்தபடியே "வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே!" என்று உரக்க கலாய்த்துக்கொண்டிருந்ததெல்லாம் நினைவில் இருக்கிறது.


More than a Blog Aggregator

by வெங்கிராஜா


அநேக பாடல்கள் ஒரு நாள் நம் செவிகளின் கரைசேர்கின்றன. அங்கனம் இசைக்கும் மெட்டுக்களில் என்னைக் கவரும் கீதம், நாளுக்கொன்று குறித்து இங்கு வர்ணனை செய்யலாமென்று திர்மனித்தேன். இன்றைக்கு "பாடவா பாடவா.."

ஜோதிகாவைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை என்று ஏதோ ஒரு கெட்ட வதந்தியை விஷமிகள் பரப்பியிருக்கிறார்கள். சுஜாதாவின் குரல் சற்றே தளர்ந்த, நீரோட்டம் போல தளும்பாமல் பாயும் சுரத்தில் அங்கலாய்கிறது. எளிமையான வரிகள், ஆனாலும் திண்ணமான கருத்துகள். கேட்கத் தொடங்கிய உடனேயே மனம் இலகுவாகிவிடுகிறது. மிகவும் மென்மையாக கிட்டாரில் அரம்பித்து சேஷ்டைகளின் சிருங்காரத்துடன் மெல்ல பயணித்து கடத்துடன் சங்கமித்து ஏகாந்த நிலைகொள்கிறது. குழலும் பியானோவும் பிணைந்தபடி மீண்டும் இசைத் தந்திரம். தேர்ந்த உச்சரிப்பின் உச்சமாக கோடீ..ஈ..ஈ.. என்று இழுத்து செருமுகையில் மனம் இசைந்து இதழ்களில் புன்னகை பரவச் செய்கிறார் பாடகி. வெகு அழகாக வரிகளும் வாத்தியங்களும் புணர்ந்துவிடுகின்றன. ஆர்ப்பாட்டம் எதுவுமே இன்றி கூழாங்கற்களின் குளிர்ச்சி பொருந்திய இந்த கீதம் மனதை நனைத்தபடி கேட்பாரின்றி ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறது.

"ரெண்டு நிலை உண்டு எந்த நிலை பாட?
இரசிகன் இல்லையென்றால் தாமரைப்பூ பூத்து யார் பார்த்திட!"

கருத்துகள் இல்லை: