செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30


ஆந்திரா தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு


நடிகை ரோஜாவின் போலி ஆபாச படம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பாகியதுடன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் பரப்பப்பட்டதால் ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாகவும் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரிகிரி சட்டசபை தொகுதியில் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ள நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சிக்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது புகழுக்கு கேடு விளைவிக்கும் நோக்குடன் அவர் நடித்ததைப் போன்றதோர் ஆபாச படம் கடந்த வாரம் குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, விஜயநகரம், அமலாபுரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.களில் ஒளிபரப்பப்பட்டது.

5 நிமிடம் மட்டும் ஓடும் இந்த ஆபாபடத்தை தற்போது, அவரது எதிரிகள் சிலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும் பரப்பி வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகை ரோஜா பூட்டிய அறைக்குள் பல ஆண்களுடன் தகாத உறவு கொள்வது போலவும், நீச்சல் குளத்தில் நீந்திக் குளிப்பது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த படத்தை முதலில் பார்ப்பவர்களுக்கு அது நடிகை ரோஜா என்றே நினைக்கத் தோன்றும்.

எனினும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் நடிகை ரோஜாவின் முகத்தை கச்சிதமாக பொருத்தி அவரே நடித்துள்ள தைப் போன்று இப்போலி ஆபாசப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறுகையில், இவ்வாபாச படம் மார்பிங் முறையில் போலியாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை முன்பு எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவர், அதை போலி என்று கண்டுபிடித்தார்.

தற்போது அதே படத்தை கேபிள் டி.வி.யில் வெளியிட்டும், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பியும் எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

இந்த ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ரோஜாவிடம் கேட்டபோது, இது மாதிரியான சதித்திட்டங்கள் மூலம் எனது அரசியல் வாழ்க்கையை யாராலும் முடித்து விடமுடியாது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது பற்றி புகார் செய்வேன் என்று கூறினார்.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்வைத்த காலை எக்காரணத்திற்காகவும் பின்வைக்க மாட்டேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உலகமே எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டு மக்கள் எனக்கு பின்னால் நிற்கின்றனர். மக்களின் ஆணையின் பிரகாரம் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
தலாய்லாமா பற்றிய தகவல்களும் சேமிப்பு

இணையத்தளம் மூலம் 103 நாடுகளில் உளவு பார்த்து முக்கிய ஆவணங்களை சீன நிறுவனம் கபளிகரம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனம் ஒன்று இன்டர்நெட் மூலம் இந்தியா உள்ளிட்ட 103 நாடுகளின் முக்கிய அலுவலகங்களில் உள்ள கம்ப் யூட்டர் மூலம், இன்டர்நெட் வழியாக முக்கிய விஷயங்களைக் கிரகித்து, உளவு பார்த்து வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு வல்லுனர்கள் இந்த சதி வேலையை அம்பலப்படுத்தியுள்ளனர். திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா பற்றிய தகவல்களை ஆராயும் போது அவரது கம்ப்யூட்டரிலிருந்து தகவ ல்கள் கண்காணிக்கப்படுவதையும் இந்த வல்லுனர்கள் கண்டுபிடித்தனர்.

பின்னர் மற்ற விவரங்களை ஆராயும் போது இந்த சதிவேலை 103 நாடுகளில் நடந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டு ள்ளது.

சீன நாட்டு கம்ப்யூட்டர்களில் இந்த உளவு பார்க்கும் வசதி செய்யப்பட்டு, அந்த கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் அலுவலகங்களில் இருந்து தேவையான தகவல்கள் சுருட்டப்பட்டுள்ளன.

103 நாடுகளில் உள்ள 1,295 கம்ப்யூட் டர்களில் உளவு பார்க்கும் வேலை நடந் துள்ளது பெரிய அளவில் நடந்துள்ள இந்த உளவு குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களும் விசாரிக்கத் துவங்கியுள் ளன.

முழு விவரங்களும் சேகரிக்கப்பட்ட பின், இதில் சீன அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதா இல்லை? என்பது தெரிய வரும் என இந்த உளவு சதியை வெளிப்படுத்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


டாலர்கள் ஊட்டிப் பாகிஸ்தான் வளர்த்து வரும் தீவிரவாதத்திற்கு மேலும் சில அப்பாவிகள் பலி. ஏறக்குறைய 27 காவல்துறையினர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டுள்ளனர். 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சரியான எண்ணிக்கை இதுவரை தெரியாது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குறி வைக்கப்பட்ட சில நாட்களுக்குள், அதே லாகூரில் மீண்டும் தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதிச்செயல்.

அங்குள்ள இளைஞர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கிறதா? தெரியாது. பல்வகை ஆயுதம் மட்டும் கிடைக்கிறது. இந்தத் தாக்குதலிலும் பல வகைப்பட்ட ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. ஈடுபட்டவர்களில் பெரும்பாலும் இளவயதினரே! இதுவரை எந்த இயக்கமும் "பொறுப்பேற்கவில்லை".

இளவயதினரை, நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தும் அறிவு ஏன் இல்லை? எத்தகைய மகத்தான சக்தி, முரட்டு முட்டாள்களின் கையில்! சுயவிமர்சனமும், சுயபரிசோதனையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான். அதற்குள் பாகிஸ்தான் மந்திரி ஒருவர், இது மும்பைத் தாக்குதலைப் போன்றது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

ஏதேனும் ஒருவகையில் இந்தியாவைத் தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்திவிட நடத்தும் மலிவு நாடகம். பாகிஸ்தானோடு திரைமறைவு வர்த்தகம் செய்யும் நாடுகள் உணரட்டும். மறைமுக உறவு கொண்டுள்ள நாடுகள், மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது. இந்தியா மென்பொருளிலிருந்து உணவுப்பொருள் வரை ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தான், தீவிரவாதிகளை!

உலகிற்கு ஏதேனும் தெரிவிக்க விழைந்தால், நேர்வழியில் தெரிவிக்கவும். தீவிரவாதத்தால் அல்ல. பிற நாடுகள் அடைந்த, அடைந்துகொண்டிருக்கும் வளர்ச்சி, அறிவால் பெற்றது. இளைய சமுதாயம் உழைத்ததால் விளைந்தது. இன்னும் இந்தியாவைப் புறவழிகளில் எப்படித் தாக்கலாம் என்பதில் புத்தியைச் செலுத்தாமல், உழைப்பில் திருப்பினால் பாகிஸ்தான் மேற்கொண்டு வாழலாம். இல்லையென்றால், உலக வரைபடம் சில திருத்தங்களுக்கு உள்ளாகும். அதைப் பார்க்கப் பாகிஸ்தான் இருக்காது!
கம்ப்யூட்டர்களை நாளையதினம் வைரஸ் தாக்கும் என்று உலகம் முழுவதும் பீதி நிலவுகிறது. இதற்காக, `கான்பிக்கர் சி' என்ற இன்டர்நெட் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது, கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் நடத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஆகும்.

இதில், ஏப்ரல் 1-ந் தேதி கம்ப்யூட்டர்களை தாக்கும் வகையில் `கட்டளை' பிறப்பிக்கப்பட்டு, பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, நாளை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் வைரஸால் தாக்கப்படலாம் அல்லது இன்டர்நெட்களில் தேவையற்ற இ-மெயில்கள் வந்து குவியலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும்......

பங்குச் சந்தை : ஒரே நாளில் 480 புள்ளிகள் வீழ்ச்சி

தமிழ் ஈழம் மலர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி : கருணாநிதி

கருத்துகள் இல்லை: