செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

வவுனியா நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகள் தொடர்பான உண்,மை நிலையை நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.
இது தவிர தான் சார்ந்த கட்சிக்கு எதிராகச் செயற்படவேண்டுமென்ற நோக்கத்தில் அவ்வாறு கருத்துகளைத் தெரிவிக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி எமது லங்கா ஈ நியூஸ் இணையத்ததளத்தில் வெளியான செய்தி குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியின் கருத்துகள் தொடர்பாகவும் அவர் தனது நிலைப்பாட்டினை எமக்குத் விளக்கினார்.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் அச்சமின்றி நிம்மதியாக இருப்பதாகவும் அங்கு இயங்கும் சதொச விற்பனை நிலையம், பாடசாலைகள், வங்கிகள் என்பன சிறப்பாக இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் மக்களின் தேவைகளை இனங்கண்டு செயற்படுவதாகவும் நான் தெரிவித்துள்ள கருத்துகள் உண்மையானவை. உண்மையைக் கூறுவதில் தயக்கம் தேவையில்லை.

ஆனால் சில ஊடகங்கள், தான் இவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தமை தொடர்பாக பல்வேறு ஊகங்களை வெளியிட்டுள்ளன. அவற்றில் எவ்வித உண்மையுமில்லை. நான் எந்தக் காரணம் கொண்டும் கட்சிக்குக் கொள்கைக்கு மாறாகச் செயற்படப் போவதில்லை. அதே போன்று கட்சியை விட்டு விலகப் போவதுமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள் 22 பேரும் ஒரு கட்டுக்கோப்புடன் செயற்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் கூட இந்த நிலையே தொடரும்.

வவுனியா நிவாரணக் கிராமங்களைப் பார்வையிட சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இந்நிலையில் உங்களுக்கு மட்டும் இந்த விசேட சலுகை கிடைக்கக் காரணம் என்னவென்று வினவியபோது,

நான் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்துபவன் எனது மக்களே நிவாரணக் கிராமங்களில் வசித்து வருகின்றனர். அவர்களைப் பார்வையிட எனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த அனுமதியை சம்பந்தப்பட்ட தரப்பினர் எனக்கு வழங்கினரே தவிர வேறு எந்த விசேட காரணமும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.


ஆண்கிளி :

காய்ச்சலால் நான் இங்கு படுத்திருக்க
கதிர் கொய்ய வயலுக்குப் போயிருந்தாய்
வாச்சது சந்தர்ப்பம் என்று மகிழ்ந்து
மாற்றானின் உறவில் மயங்கினாய் போ


பெண்கிளி :

என்ன புதிர்போட்டுப் பேசுகிறீர் அன்பே
ஏற்குமோ இத்துயர் வார்த்தையெல்லாம்
என்னைச் சிறுமையாய் ஏசிட உங்கட்கு
எவர் செய்த போதனை கூறிடுங்கள்.


ஆண்கிளி :


அந்தக் கிளியின் பெண் வந்து என்னிடம்
அறிவித்தாள் உங்கள் லீலைகளை.
சொந்தம் இனி இல்லை இங்கே வராமல்
தூர எங்கேயேனும் சென்று விடு


பெண்கிளி :

கதிர் கொய்யும் போதெந்தன் 
கண்ணிலே முள்பட்டு
கலங்கித் தவித்த வேளையிலே
உதவிக் கோடிவந்து உபகாரம் செய்த
உத்தமரைப் பழி கூறலாமோ?


ஆண்கிளி :

அன்புள்ள என் மனைக் கிழத்தியே நீ என்
சஞ்சல மனதைப் போக்கி விட்டாய்.
பண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்குப்
பழுதொன்றும் வாராதென்று உணர்த்தி விட்டாய்.



தம்பலகாமம்.க.வேலாயுதம்






More than a Blog Aggregator

by அசோக் நாட்டாமை



More than a Blog Aggregator

by அசோக் நாட்டாமை

கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிப் போகையில், அல்லது ஏதேனும் புதிய சாப்ட்வேர் புரோகிராம்களால் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுகையில் கம்ப்யூட்டரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு System Restore நமக்கு உதவுகிறது. ஆனால் அண்மையில் ஒன்றை அறிய முடிந்தது.

கம்ப்யூட்டரில் நார்டன் பாதுகாப்பு தொகுப்பு பயன்படுத்துபவர்களுக்கு இந்த பயன்பாட்டில் தடை ஏற்படுவது கண்டறியப்பட்டது. அதில் உள்ள நார்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி சிஸ்டம் ரெஸ்டோர் வசதியை இயக்குகையில் தடை செய்வது கண்டறியப்பட்டது. எனவே சிஸ்டம் ரெஸ்டோர் வசதியை இயக்க முயற்சிக்கையில் நார்டன் தொகுப்பின் செயல்பாட்டினை நிறுத்தி வைப்பது கட்டாயமாகிறது. இதற்குக் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.

1.நார்டன் தொகுப்பின் மெயின் விண்டோவிற்குச் செல்லவும்.

2.ஆண்டி வைரஸ் அல்லது நார்டன் Internet Security டேபில் கிளிக் செய்திடவும்.

3.இதில் பேசிக் செக்யூரிட்டி என்பதில் Autoprotect என்பதன் மேல் இடது புறமாகக் கிளிக் செய்து கான்பிகர்(configure) என்பதனைத் தேர்ந்தெடுக் கவும்.

4.இடது புறமாகக் கிடைக்கும் பிரிவில் Miscellaneous என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


5.வலது புறம் உள்ள பிரிவில் "Turn on protection for my Symantec product" என்ற இடத்தில் கிளிக் செய்து டிக் அடையாளத்தை நீக்கவும்.


6.பின் ஓகே கிளிக் செய்து இப்போது மேற்கொண்ட செட்டிங்ஸ் முழுவதும் சேவ் செய்து வெளியேறவும்.

இனி சிஸ்டம் ரெஸ்டோர் இயக்கி கம்ப்யூட்டரை பாதுகாப்பான முந்தைய இடத்திற்கு மீட்கவும். பின் மீண்டும் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து மேலே குறிப்பிட்ட வழிகளில் நார்டன் தொகுப்பில் சென்று பாதுகாப்பு பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பாதுகாப்பினை மீண்டும் உறுதிப்படுத்தவும்.

23.03.2009. அமெரிக்க குழந்தைகளை விட இந்திய மற்றும் சீன குழந்தைகள் படிப்பதில் அதிக திறமையுடன் இருக்கின்றனர். அவர்களை விட அதிக வசதிகள் இருந்தும் அமெரிக்க குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஒபாமா பேசுகையில்; அமெரிக்க குழந்தைகளை விட இந்தியா மற்றும் சீன குழந்தைகள் படிப்பில் திறமையாக இருக்கிறார்கள். இதற்கு பெற்றோர்கள், பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது. அதற்குக் காரணம் நீங்கள் தான். அமெரிக்க குழந்கைள் வீட்டுக்கு [...]

கருத்துகள் இல்லை: