ஞாயிறு, 29 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-28



More than a Blog Aggregator

by கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI

இணையதளத்தில் பரப்பி விடப்பட்டுள்ள கான்பிகர் சி என்ற கம்ப்யூட்டர் வைரஸ் ஏப்ரல் 1ல் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கான்பிகர் சி வைரஸ் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் பல கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கச் செய்யும் வகையில் அது புரோகிராம் செய்யப்பட்டிருக்கலாம் என்று லண்டன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதலால் எச்சரிக்கையாக இருங்கள்…



நன்றி –தினக்கரன்
துறைமுகமில்லாத, இன்னுமே முற்பதிவு செய்யாத ஒரு கற்பனைக் காகித கப்பலுக்கு தேரோட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஒரு கப்பல் போக வேண்டுமானால். முதலில் கப்பல் கம்பனிகளை தொடர்பு கொண்டு. செல்ல இருக்கும் நாடு, என்ன பொருள் கொண்டு போகப் போகின்றோம். எத்தனை மெட்டிக் டண் கொண்டு போகப் போகின்றோம் என்று சொல்லி அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும். அவர்கள் தங்களது கப்பல் சேவை அப்பகுதிக்கு உண்டு எனில் எத்தனை டண் பொருள், பெல்லட் (ஆறு அடி நீளம்.அகலம்.உயரம்) களில் அடைக்கப் பட்டதா.அல்லது கன்டய்னர்களில் (20 அடி)அடைக்கப் பட்டதா அல்லது "பல்க்"(குவியலாக)ஆகவா. எந்த துறை முகத்தில் பொருளை தருவீர்கள்.அப்பொருளை எந்த துறை முகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கேள்விக் கொத்து அனுப்புவார்கள்.

இவைகளுக்கு அதி குறைந்தது இரண்டு வாரம் எடுக்கும்.

ஏற்றுமதிக்கட்டணம் பேசப்படும். ஒரு வழிப்பாதை என்றால். அதாவது வரும் போது வெற்றுக் கப்பல்தான் திரும்பிவர வேண்டுமானால் கட்டணம் இரட்டிப்பாக இருக்கும். சில கப்பல் கம்பனிகளுக்கு அந்த குறிப்பிட்ட நாடுகளில் முகவர்கள் இருப்பார்கள். இங்கிருந்து புறப்படுவதற்கு ஒரு மாதம் முன்னரே தமது முகவருக்கு அறிவிப்பார்கள். நாங்கள் 21 நாட்களில் கொழும்பு துறை முகம் வருகின்றோம். யாராவது இங்கிலாந்துக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமானால் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். எங்களது கப்பலில் ஏற்ற முடியும் என அறிவிப்பார்கள.;

அதே நேரம் கொழும்புத்துறை முகத்தை தொடர்பு கொண்டு தமது கப்பல் பற்றிய சகல விபரங்களையும் ( கப்பலின் நீள அகலம்,கொள்ளளவு, நிறம், என்ன கொடி பறக்கவிடப் பட்டிருக்கும், எத்தனை ஊழியர், எத்தனை கப்டன் என்பது முதல் அதற்குள் அமைந்துள்ள கிச்சன் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது வரை) அனுப்பி. நாங்கள் வரும் போது உங்கள் துறைமுகத்தில் எங்கள் கப்பலை நிறுத்த இடவசதி உண்டா இல்லாவிடின் எத்தனை நாட்களில் இதை ஏற்படுத்தி தருவீர்கள் என "துறைமுக மாஸ்டருக்கு" பக்கம் பக்கமாக பெக்ஸ் அனுப்பு வார்கள்.

அங்கிருந்து வரலாம். நீங்கள் தரித்து நிற்பதற்கு இவ்வளவு கட்டணம் அறவிடுவோம். மேலதிகமாக தரித்து நிற்பதற்கு மேலதிக கட்டணம் இரட்டிப்பாக அறவிடுவோம் என பதில்வரும். இல்லை இப்போது இடமில்லை என்றால் இங்கிலாந்தில் துறைமுகத்தில் இருந்து நங்கூரத்தையே எடுக்க மாட்டார்கள்.

சாதாரணமாக இங்கிலாந்தில் இருந்து சிறிலங்கா செல்ல 14 நாட்கள் தொடக்கம் 21 நாட்கள் எடுக்கும். கடல் கொந்தளிப்பு, கடல் காற்றின் திசை மாற்றங்களை தீர்மானித்து நாட்கள் வேறுபடும்.

வணங்கா மண் புறப்பட்டு வன்னிக் கரைக்கு 600 கடல் மைல் பரப்புக்கப்பால் நிற்க வேண்டும். மோட்டுச்சிங்களவன் மாதிரி ஒரு மோட்டு வெள்ளையன் ஒத்துக் கொண்டால்.

வணங்காமண் கொழும்பு செல்ல போவதில்லை. எனவே கட்டணம் இரட்டிப்பு.சரி. வன்னிக் கடலில் நிற்க ஒவ்வொரு நிமிடத்திற்கும் கப்பல் கம்பனி பணம் அறவிடும்.அப்படி வைத்துக் கொள்வோம். பணமும் தயார்.

மக்களிடம் அடித்து சத்தியம் பண்ணியாயிற்று. 29ம் திகதி கப்பல் புறப்படும். ஐரோப்பிய மக்களை நினைத்தால்தான் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. ஹோட்டலுக்கு சாப்பிட போனல் உப்பில்லை, புளியில்லை எனவும், பாருக்கு தண்ணி அடிக்கப் போனால் போத்தலை குலுக்கிப் பார்த்துவிட்டும் பேரம் பேசும் மக்கள் துறைமுகமில்லாத, இன்னுமே முற்பதிவு செய்யாத ஒரு கற்பனைக் காகித கப்பலுக்கு தேரோட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றனர். வாழ்க தமிழீழம்.

– அ.விஜயகுமார்-

தேணி இணையம்



More than a Blog Aggregator

by தெ. சுந்தரமகாலிங்கம்
"தேர்தலுக்கு சீட் கேட்டு வந்திருக்கிறியே. உன் பரம்பரை எப்படி?"

"தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா மொழிப் போர்த் தியாகி."

"கட்சியில எவ்வளவு நாளா இருக்குற?"

"என் 18 வயசுல இருந்துங்க. கட்சி நடத்துன ஆறு போராட்டங்கள்லேயும் கலந்து சிறைத் தண்டனை பெற்றிருக்கேனுங்க."

"பண வசதி எப்படி?"

"விண்ணப் படிவம் வாங்குறதுக்கே பலரிடத்துல நன்கொடை பெற வேண்டியதாச்சு."

"சரி. நீ போகலாம். அடுத்த ஆள்..."

கனத்த உடம்புடனும் கனத்த சூட்கேசுடனும் வந்தார் ஒருவர்.

"என்னென்ன தகுதி இருக்கு?"

"என் சாதிக்காரங்க தொகுதியில மெஜாரிட்டி கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து நம்ம தொழிலுங்க!"

"கட்சியில எப்பச் சேந்தீங்க?"

"இப்பவே சேந்துடறேனுங்க!"

"எவ்வளவு செலவழிக்க முடியும்?"

"இப்போதைக்கு ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமுங்க!"

"நீங்க போகலாம்."

கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் உடனடியாக ஒரு மனதாக இரண்டாவதாக வந்தவரை வேட்பாளராக்க முடிவு செய்தனர்!

House of Saddam

ஆறுமணிநேரம் உட்கார்ந்து இந்த படத்தை பார்த்தேன்.ஆனால் துளி கூட போர் அடிக்கவில்லை.நீங்கள் வரலாற்று ஆர்வலராக இல்லாதிருக்கும் பட்சத்தில் படத்தின் மேல் பெரும் வெறுப்பே வந்துவிடும்.

படத்தின் கதை என்பது சதாமின் வாழ்க்கை வரலாறுதான்.படத்து கதாபாத்திரங்கள் இயல்பான நடிப்பால் நம்மை கவர்கின்றனர்.குறிப்பாக சதாமாக நடித்த யிகால் நவோர்....துரோகம் செய்து ஓடிப்போன மருமகனை "நீ என் மகளின் கணவன்.என் பேரபிள்ளைகளின் தகப்பன்.உன்னை நான் கொல்வேனா?பயப்படாமல் மீண்டும் பாக்தாதுக்கு வா" என தேனொழுக பேசி அழைத்துவிட்டு போனை வைத்துவிட்டு கோட்டை சரிசெய்துகொண்டு வில்லத்தனமான லுக் விட்டுக்கொண்டு நடக்கும் அந்த காட்சி அசத்தலோ...அசத்தல்.அவரது முகபாவத்தை பார்த்தவுடனேயே மருமகன் இராக் திரும்பினால் என்ன நடக்கும் என புரிந்துவிடுகிறது.

சதாமின் இரண்டாம் மனைவி சமீராவை தன் வயப்படுத்தும் காட்சியும் அபாரம்.சமீராவின் கணவன் முன்னே அவளை அனைத்து முத்தமிடுகிறார் சதாம்."அவள் என் மனைவி" என பதறுகிறார் கணவர்.."நான் நீயாக இருந்தால் இதை கண்டுகொள்ள மாட்டேன்" என முணுமுணுக்கிறார் சதாமின் மருமகன்..சதாம் திரும்பி கனவனை பார்க்கிறார். அவன் முகத்தில் தோல்விக்களை. வெற்றிப்புன்னகையுடன் முத்தத்தை தொடர்கிறார் சதாம்.

சதாம் ஒரு பள்ளியில் நுழைகிறார்.அங்கே இருக்கும் உன் குழந்தையிடம் தேனொழுக கேட்கிறார்.."கண்ணே..உன் அப்பா சதாம் ஆட்சியை பற்றி வீட்டில் என்ன பேசுவார்?"..அந்த குழந்தை என்ன பதில் சொல்லும் என்ற அதிர்ச்சி நம் மனதில் ஏற்படுகிறது..குழந்தை ஒரு வினாடி யோசிக்கிறது...பிறகு "சதாம் நீடூழி வாழவேண்டும் என அப்பா சொல்வார்" என்கிறது."நல்லது" என புன்னகைத்தபடி பள்ளியை விட்டு வெளியேறுகிறார் சதாம்.

இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராணுவத்துக்கு பயந்து ஒளிந்திருக்கும் நிலையில் சதாமின் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது.மகன்களின் மரணசெய்தியை சதாம் கம்பீரமாக ஏற்கிறார்..ஏரிக்கரையில் சோகமாக மீன் பிடிக்கிறார்.ஆனால் கடைசியில் கோழையை போல் துப்பாகீ குண்டு சத்தம் கேட்டதும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைகிரார்.அவர் மார்பில் அமெரிக்க வீரனின் கால் பூட்ஸ் அழுத்துகிறது..

"நான் சதாம்.இராக்கிய ஜனாதிபதி.அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இனி தயார்" என்கிறார் சதாம்.

இராக்கிய மொழி அறியாத அமெரிக்க படைதளபதி 'இவர் என்ன சொல்கிறார்?" என வீரனிடம் கேட்கிரார்.

"இவர் இராக்கிய ஜனாதிபதியாம்.பெயர் சதாம் உசேனாம்.அமெரிக்க அரசுடன் பேசூவார்த்தைக்கு தயாராம்" என்கிறார் மொழிபெயர்ப்பு பணியை செய்யும் அமெரிக்கர்.

"ஓ..." என்கிறார் அமெரிக்க கமாண்டர்..அந்த "ஓ"வில் தான் எத்தனை இளக்காரம்....

சதாமின் மகன் உதய் உசேனாக நடிக்கும் பிலிப் அர்தித்தி இயல்பான நடிப்பில் கலக்குகிறார்.பார்ட்டியில் அழகான பணிபெண்னை சந்திக்கிறார்..கைவிரலில் ஒரே சொடக்கு "ஏய்..வா இங்கே..."அந்த பணிப்பெண்ணுக்கு பின்னால் நிற்கும் ஆண் வேலையாட்கள் முகத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாக ஒட்டியிருக்கிறது.

உதய் உசேன் சைக்கோபாத்.அந்த சைக்கோ பாத்திரத்தை பிலிப் ஆர்தித்தி அழகாக செய்கிறார்.மச்சானை அடிக்கடி வெறுப்பேற்றுவது ரசமான காட்சி...சதாமிடம் உதயை பற்றி அடிக்கடி போட்டு கொடுப்பார் மச்சான்.அதிலிருந்து தப்பி வரும் உதய் ஒரு காட்சியில் மச்சானிடம் கூறுகிறார்.."இதோ பார்.என் அப்பாவுக்கு உன்னை மாதிரி நிறைய உறவினர்கள் இருக்கலாம்.ஆனால் அவருக்கு இருப்பது ஒரே முதல் மகன்..அது நான் தான்.."


இவ்வாறு, குடித்துக் கூத்தடிக்கும் "பப்'' கலாச்சாரத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த ஸ்ரீமான் ராமனின் நாமகரணத்தையே தனது திருப்பெயராக சூட்டிக்கொண்ட அமைப்புதான் கருநாடக மாநிலத்தை சேர்ந்த "ஸ்ரீராமசேனை''. இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் அண்மையில் மங்களூரில் ஒரு கேளிக்கை மதுவிடுதிக்குள் (பப்) நுழைந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களை மானபங்கப்படுத்தினர்.

இந்திய கலாச்சாரத்தையும், "இந்து'ப் பெண்களையும் மேற்கத்திய கலாச்சார சீரழிவிலிருந்து காப்பதற்காகவே அவதாரமெடுத்துள்ளதாக சொல்லுகிறான், ஸ்ரீராம சேனையின் தலைவன் பிரமோத் முத்தலிக். ""இந்துப் பெண்களை கலாசார முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிக்கும் அயல்நாட்டு அரக்கனிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்று கூறும் இவர்கள், அயல்நாட்டு அரக்கனிடமிருந்து பெண்களை காப்பதெல்லாம் இருக்கட்டும்; உள்ளூர் சாமியார்களிடமிருந்தும், சங்கராச்சாரிகளிடமிருந்தும் பெண்களை யார் காப்பாற்றுவது?
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/

கருத்துகள் இல்லை: