வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

இன்று நாம் கடக்கும் ஒவ்வொரு தினங்களும் இலங்கையின் குடிமக்களாக எமக்கு மிக முக்கியமான தினங்கள். இலங்கையின் கொடூரமான யுத்த வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு மனிதப் பேரழிவுகள் நடக்கும் தினங்களில் நாம் வாழ நேரிட்டிருக்கிறது. வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிர்ரைவுபெர்ரக்காத்திருக்கிறது. புதிய அத்தியாயங்கள் எப்படி இருக்கப் போகின்றது என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போகும் நாட்களை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். 30 வருடகால யுத்தமும் அதன் அனர்த்தங்களும் அடுத்து வரப்போகும் அத்தியாயத்தில் வரவிடாமல் பார்க்க வேண்டிய தருணமும் இதுவே.
மீண்டும் ஒரு முறை தவறிழைக்கும் பட்சத்தில் அழிவுகள் பாரதூரமானதாக இருக்கும். சிதறும் உடலின் துகள்கள் காற்றின் ஒவ்வொரு துணிக்கைகளிலும் கலந்துவிடும். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, தலித், வேளாள, பார்ப்பன, உடரட்ட, பிட்டரட்ட.... என யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும். ஒவ்வொருவரும் தத்தம் குழுவைக் காக்க பேரம் பேசப் புறப்பட்டால் சக மனிதனின் பிணங்களை மிதித்தே செல்ல வேண்டி இருக்கும்.
1.வரலாற்றைப் பதிந்து வைக்க மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான ஊடகங்களைக் கையாண்டிருக்கிறார்கள். கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் எனப் பல வகையான வரலாற்றுப் பதிவுகள் நம்முன் உள்ளன. நவீன வரலாற்றுப் பதிவில் அதிமுக்கியம் வாய்ந்ததும் பொருத்தமானதுமாக புகைப்படங்களே கருதப்படுகின்றன.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
இருட்டும் நேரம். ஒருவன் ஓடிப்போய் ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு வந்தான்.

"என்ன செய்கிறாய்?" — அவர்

"இருட்டை விரட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றான் அவன். இவர் சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"இல்லாத ஒன்றை எப்படி விரட்ட முடியும்?"

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, "என்ன சொல்கிறீர்கள்? இருட்டு என்பது இல்லாத ஒன்றா…?"

"ஆமாம். இருட்டு என்று தனியாக ஒன்றுமில்லை, வெளிச்சம் இல்லாத நிலை தான் அது!

"ஓர் இடத்தில் வெளிச்சம் இருந்தால் வெளிச்சமாக உள்ளது என்கிறோம். அந்த இடத்தில் வெளிச்சம் இல்லை என்றால் இருட்டு என்கிறோம், அவ்வளவு தான். ஆக அந்த இடத்தில் இருப்பதும் இல்லாமல் போவதும் வெளிச்சம் தான்.

"இருட்டு என்று தனியாக ஏதோ ஒன்று ஓடி வந்து அங்கே உட்காருவதில்லை. இருட்டு என்ற ஒன்று ஏற்கனவே இருப்பதாகவும் வெளிச்சத்தை கண்டவுடனே அது எழுந்து ஓடிப் போவதாகவும் நினைத்துக் கொள்கிறோம். வெளிச்சம் இல்லைமை தான் இருட்டு என்பதைப் புரிந்து கொள்!"

கையில் விளக்கை வைத்திருப்பவன் சிந்திக்க ஆரம்பித்தான். இருட்டில் வெளிச்சத்தை வைத்திருக்கிறவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

நம் மனதிற்குள் பயம் என்று சொல்கிறோம் இல்லையா…? அதுகூட அந்த இருட்டு மாதிரி தான். வெளிச்சம் இல்லாமை — இருட்டு — என்கிறோம் அல்லவா? அது மாதிரி அன்பு இல்லாமை தான் பயம்.

அன்பு என்கிற விளக்கை ஏற்றுகிறபோது அங்கே பயம் என்கிற இருட்டு இருப்பதில்லை.

நன்றி' (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2007 இதழ் )
& http://srinig.wordpress.com/2007/11/08/deepavali-2007/
போர்டு ஐகானின் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயருகிறது. ஏப்ரலில் இருந்து அதன் விலை 1.5 சதவீதம் வரை உயருகிறது என்று போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ், அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் நாங்கள் இந்த விலை உயர்வை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு குறைந்து, நேற்று அதன் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.50.70 ஆக குறைந்திருந்தது என்றார். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், காருக்கான பாகங்களை இறக்குமதி செய்யும்போது அதிகம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் நாங்கள் காரின் விலையை உயர்த்தவேண்டியிருக்கிறது என்றார் அவர். கடந்த நவம்பரில் தான் போர்டு நிறுவனம், ஐகான் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் காரை வெளியிட்டது. அதன் பெட்ரோல் காரின் விலை ரூ.4.59 லட்சமாகவும் ( எக்ஸ் - ஷோரூம் டில்லி ) டீசல் காரின் விலை ரூ.5.19 லட்சமாகவும் இருக்கிறது. இருந்தாலும் இப்போது விலை உயர்த்தியிருப்பது அதன் ஆரம்ப கட்ட மாடல் ஐகானுக்கு தான். மற்ற மாடல்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுதான் இருக்கிறது. இப்போது பெட்ரோல் மாடல் கார்களுக்கு கிராக்கி அதிகரித்து வருவதால், நாங்களும் பெட்ரோல் மாடல் ' ஐகான் ' மற்றும் ' பியஸ்டா ' கார்களை அதிக அளவில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார் வார்க்.
நன்றி : தினமலர்

nights will be break 2006 செப்டம்பரில் திருவனந்தபுரத்தில் ஜான் ஆபிரஹாம் நினைவு ஆவணப்பட, குறும்பட தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் நான் இயக்கியிருந்த இரவுகள் உடையும் திரைப்படமும் (படம் பார்க்க விரும்புவர்கள் இங்கு செல்லவும்) பங்கு பெற்றது. முழுமையாக ஐந்து நாட்கள் உட்கார்ந்து நுற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து வலைப்பக்கம் ஆரம்பித்த புதிதில் எத்தனை கோணம் எத்தனை பார்வை என்று பதிவிட்டிருந்தேன். திரைப்பட விழா குறித்தும், திரையிட்ட படங்கள் குறித்தும் அதில் விரிவாக எழுதியிருந்தேன்.

விரிவாக எழுதாத ஒரு விஷயத்தை சுருக்கமாகவேனும் இப்போது சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. திரைப்பட விழாவின் ஒவ்வொரு நாள் மாலையிலும் திரைப்படங்களை இயக்கியவர்களோடு பார்வையாளர்களின் சந்திப்பு என்னும் நிகழ்ச்சி நடந்தது. சினிமா குறித்த அறிவும், ரசனையும் எவ்வளவு முக்கியமானவை என்பதை அங்கு நடந்த உரையாடல்கள் உணர்த்தின. பொழுது போக்காக எடுத்த ஒரு குறும்படத்தின் இயக்குனரை வறுத்து எடுத்து விட்டனர். இத்தனைக்கும் படம் ஒன்றும் மோசமில்லை. "இந்தப் படம் எதற்கு எடுத்தீர்கள்' என்று ஆரம்பித்து அவரிடம் தொடர்ந்த விவாதங்களில் கடும் கோபம் இருந்தது. இயக்குனரும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். ம்ஹூம்... கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. சினிமா குறித்த அறிவும், ரசனையும் படம் எடுத்தவர்களைக் காட்டிலும், பார்வையாளர்களிடமே அதிகம் இருந்ததை பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள்! டூயட் பாட்டெல்லாம் எடுத்திருந்த இன்னொரு இயக்குனர் இதையெல்லாம் பார்த்துவிட்டு அடுத்தநாள் அவருடைய அமர்வுக்கு வராமலேயே மாயமாகிவிட்டார்.

அவர்கள் திரும்ப திரும்பச் சொல்லியதில் இவைகள்தாம் முக்கியமானவை. சினிமா என்பது மற்ற எந்தத் துறையை விடவும், தொழிலை விடவும் முக்கியமானது, நுட்பமானது. வித்தியாசமானது. ஒரு சமூகத்தில் மிகப் பெரும் விளைவுகளை சலனமற்று உள்ளுக்குள் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. மனித மனங்களில் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இறுதி நாளில் படங்களைத் தேர்வு செய்து அறிவித்த சிறப்பு மிக்க இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனும் இதையேச் சொன்னார். சினிமாக் கலைஞர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி, மிகுந்த கவனத்தோடு சினிமாவை உருவாக்க வேண்டியுள்ளது. பொழுது போக்கிற்காக வருகிறவர்கள், பொழுது போக்காக மட்டும் பார்த்துச் செல்வதில்லை. அவர்களை அறியாமல் சினிமா அவர்களைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது. படம் பார்க்க வருகிறவர்களை மதிக்கிற பண்பு வேண்டும்.  'எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பூசு' என்று சொல்வதற்கும், அதைக் கேட்பதற்கும் என்ன அறிவும், ரசனையும் தேவைப்படுகிறதோ?  அப்படி என்ன பொழுது போக்கு இருக்கிறதோ?

சினிமா, மற்றும் அதில் அறிவுக்கும், ரசனைக்கும் என்ன பதம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாம் ஜான் ஆபிரஹாமைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரேவோடு பயணம் செய்ய வேண்டும். ஷியாம் பெனகலின் கண்களுக்குள் ஊடுருவ வேண்டும். எது அறிவு என்று தெளிந்தால், யார் அறிவற்றவர்கள் எனச் சொல்ல வேண்டியதில்லைதான்.

அந்த உரையாடலை இனி நாம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.....

 

*


கிரிக்கெட் பைத்தியமாகி (டோணி பைத்தியம் இல்லையாம்) விட்ட லஷ்மி ராய், ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போறாராம்.

சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமற்ற சியர் லீடராக கலக்கினார் லஷ்மி ராய்.

அவருக்கும், டோணிக்கும் இடையே டீல் ஏற்பட்டு விட்டதாக கூட செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டதால் சோகமாகியுள்ளார் லஷ்மி ராய். இருந்தாலும் சில போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போகிறாராம் லஷ்மி.

நான் அவனில்லை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கும் லஷ்மி ராய், அதற்கான போட்டோ ஷூட்டுக்காக சென்னை வந்திருந்தார்.

அப்போது அவரிடம், டோணியிடமிருந்து ஏதாவது சிறப்பு அழைப்பு வந்ததா மேடம் என்று கேட்டபோது, அய்யா, அப்படியெல்லாம் பேசாதீங்கள். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். வேறு எதுவும் இல்லை. இருவருமே எல்லையைத் தாண்டியதில்லை.

இந்த மீடியாக்கள் ரொம்ப மோசம். அவர்கள்தான் என்னையும், டோணியையும் இணைத்து வைத்துப் பேசி வருகின்றனர். அதை பலமுறை நான் தெளிவாக்கி விட்டேன். எனக்கு விளையாட்டு மீது ஆரவம் உண்டு. அதிலும் ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு கிரிக்கெட் பைத்தியமாகி விட்டேன்.

ஐபிஎல் வரும் வரை நான் எந்த ஸ்டேடியத்திற்கும் போய் போட்டிகளைப் பார்த்ததே இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளைப் பார்க்க வர வேண்டும் என போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் வந்தேன். ஆனால் அதை தேவையில்லாமல் மீடியாக்கள் பெரிதாக்கி விட்டன என்று அலுத்துக் கொண்டார் லஷ்மி ராய்.

சரி உங்களது ஜோடியை முடிவு செய்து விட்டீர்களா என்று கேட்டபோது, நான் விதியை நம்புபவள். எனது லைப் பார்ட்னர் யார் என்பது எனக்குத் தெரியாது என்றார் விச்ராந்தியாக.

தற்போது தமிழில் நான்கு படங்கள் இருக்கிறதாம் லஷ்மி ராய்க்கு. அதில் சிம்புதேவனின் எரும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம் படமும் ஒன்று. இதில் கெளபாய் டைப் வேடத்தில் வருகிறாராம். இரண்டு மலையாளப் படங்களும் இருக்கிறதாம்.

மலையாளப் படமான பிளாக் ஸ்டாலியனுக்காக கேரளாவுக்கு ஷூட்டிங் போயிருந்த நமீதாவை ரசிகர்கள் மொய்த்து எடுத்து விட்டனராம். படாதபாடு பட்டு நமீதாவை மீட்டனராம்.

நமீதா நடித்த கவர்ச்சிகரமான தமிழ்ப் படங்கள் மூலம் கேரளாவிலும் நமீதாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். இந்த நிலையில் பிளாக் ஸ்டாலியன் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் நமீதா. இது நமீதாவின் முதல் மலையாளப் படம்.

பிரமோத் பப்பன் இயக்குகிறார். கலாபவன் மணிதான் நாயகன். இப்படத்தில் நமீதா லாரா சிங் என்ற பார் டான்ஸர் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்திற்காக பெரும் தொகையை அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனராம். மலையாள சினிமாவில் எந்த நாயகியும் இதுவரை வாங்கியிராத சம்பளமாம் இது.

சமீபத்தில் அதிராம்பள்ளி பகுதியில் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது நமீதா வந்திருப்பதைக் கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டோடி வந்துள்ளனர். நமீதாவை கிட்டக்கப் போய் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், அவருக்கு படப்பிடிப்பு முடியும் வரையில் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.

ஆனால் அதையும் தாண்டி பொங்கிப் பெருகி விட்டனர் ரசிகர்கள். நமீதாவை முற்றுகையிட்ட ரசிகர்களிடமிருந்து அவரை அரும்பாடுபட்டு மீட்டனராம்.

இருந்தாலும் இதனால் நமீதா அப்செட் ஆகவில்லையாம். மாறாக தன் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போய் விட்டாராம்.

இதுகுறித்து நமீதா கூறுகையில், எனது ரசிகர்களை நான் நேசிக்கிறேன். அவர்களது அன்பையும், அதனால் ஷூட்டிங் ஸ்பாட்களில் ஏற்படும் இடையூறுகளையும் நான் பெரிதுபடுத்துவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த வழிகளில் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

நிறைய மலையாளப் படங்களில் நடிக்க நான் தயார். கிளாமர் கேரக்டர்கள் கொடுத்தால் கூட நான் ரெடிதான்.

பிளாக் ஸ்டாலினியனில் எனக்கு கிளாமர் ரோல்தான். ஆனால் நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சியில்தான் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். அந்த லொகேஷன் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் பசுமைதான். அருமையான கிளைமேட். இந்தியாவிலேயே படப்பிடிப்புக்கு உகந்த அருமையான லொகேஷன் இதுதான் என நினைக்கிறேன்.

இங்கு இந்த அருவியின் பின்னணியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையும் எனக்கு வந்து விட்டது என்றார் நமீதா.

ஆம்பிவேலியில் வீடு வாங்கியாகி விட்டது, அடுத்து அதிராம்பள்ளியா...?

கருத்துகள் இல்லை: