வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25


மகளுக்காக கதை கேட்டு வருகிறார் நடிகர் கோவிந்தா. நல்ல கதை, புரொட‌க்சன் கம்பெனி அமைந்தால் மகளின் விருப்பப்படி அவரை நடிகையாக்க தயாராகிவிட்டார் இந்த அன்பு‌த் தந்தை.

கோவிந்தாவின் மகள் நர்மதா சில வருடங்கள் முன் சல்மான் கானுடன் திரைப்பட விழா ஒன்றில் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டார். அன்றிலிருந்து நர்மதாவின் திரைப்பிரவேசம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவரும். என்றாலும் இப்போதுதான் சினிமாவில் நுழைய அவர் சின்சியராக முயற்சி செய்து வருகிறார்.

மகளுக்கு உதவும் பொருட்டு நல்ல கதை மற்றும் கம்பெனியாக தேடி வருகிறார் கோவிந்தா. இந்த இரண்டும் அமைந்தால் மகளை நடிகையாக்க அவர் தயார். எந்த வேடத்தில் நர்மதா நடிக்க வேண்டும் என்பது முதல் எப்படி நடிக்க வேண்டும் என்பது வரை எதிலும் தலையிடுவதாக இல்லை என்றும் தெ‌ரிவித்துள்ளார் கோவிந்தா.

நல்ல கம்பெனி, கதை அமையாதபட்சத்தில் சொந்தமாக படம் தயா‌ரிக்கவும் கோவிந்தா தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவித்துள்ளனர்.

எப்படியும் விரைவில் நர்மதா நடிகையாகிவிடுவார் என்பது மட்டும் உறுதி.

தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அருந்ததீ பல சாதனைகளை‌ப் படைத்து வருகிறது. ஆவியை பற்றிய இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

த்‌ரிஷா தெலுங்கில் நடித்த பல படங்கள் அவரது ஸ்டார் வேல்யூ காரணமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. நந்து, குமரன் படங்கள் அதில் முக்கியமானவை. மகேஷ்பாபு இவற்றில் ஹீரோவாக நடித்திருந்தார்.

தெலுங்கில் மிகப் பெ‌ரிய வெற்றியை ஈட்டிய இந்தப் படங்கள் தமிழில் ஓடவில்லை. மேலும், த்‌ரிஷாவின் மொழிமாற்றுப் படங்களின் மொத்த வசூல் சொற்ப லட்சங்களுக்கு மேல் தாண்டவில்லை. இதே நிலைதான் நயன்தாரா மற்றும் ஸ்ரேயா நடித்த படங்களுக்கும் ஏற்பட்டது.

இவற்றிற்கு மாறாக அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த அருந்ததீ நேரடி தமிழ்ப் படங்களை பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சரத்குமா‌ரின் 1977 படத்தின் இரண்டு வார வசூலை இந்தப் படம் மூன்றே நாளில் எட்டிப் பிடித்திருக்கிறது. அருந்ததீக்குப் பிறகே மாதவனின் யாவரும் நலம் படம் வருகிறது என்பது வியப்பான உண்மை.

அனுஷ்கா தற்போது விஜய்யின் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார். அருந்ததீயின் வெற்றியும், விஜய் படத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பும் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவரை உயர்த்தியிருக்கிறது.

எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதையில் ஹ‌ரிகரன் இயக்கிவரும் படம், பழஸிராஜா. மலையாளப் படமான இதில் மம்முட்டி பழஸிராஜாவாக நடிக்கிறார்.

அவருடன் சரத்குமாரும் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழஸி மகாராஜா ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். இந்திய விடுதலைப் போ‌ரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முதல் இந்தியர் என மலையாளிகளால் கருதப்படுகிறவர். இவரது கதையே எம்.டி.வி.யின் திரைக்கதையில் படமாக்கப்பட்டு வருகிறது.
webdunia photo WD

எம்.டி.வி. திரைக்கதையில் தயாரான ச‌ரித்திரப் படங்கள் வைசாலியும், ஒரு வடக்கன் வீர கதாவும். இரண்டும் பெரும் வெற்றியை ஈட்டின. மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத பெருமைகளாக இவையிரண்டும் கருதப்படுகின்றன. ஒரு வடக்கன் வீர கதாவில் நடித்ததற்காக மம்முட்டிக்கு தேசிய விருது கிடைத்தது.

பழஸிராஜாவில் பத்மப்‌ரியா, கனிகா நடிக்கின்றனர். வில்லனாக சுமன். இவர்களுடன் திலகன், ஜெகதி ஸ்ரீகுமார், மனோ‌ஜ் கே ஜெயன் ஆகியோரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். இதுவரை எந்த மலையாளப் படத்துக்கும் இல்லாத வகையில் இருபது கோடி வரை பழஸிராஜாவுக்காக செலவிட்டிருக்கிறார் தயா‌ரிப்பாளர் கோகுலம் கோபாலன்.

கேரளாவில் மட்டும் படத்தை வெளியிட்டால் இருபதில் ஐந்து மட்டுமே திரும்பக் கிடைக்கும். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழிக்காரர்களும் தங்கள் இனத்தைச் சார்ந்தவர்தான் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் யுத்தத்தை துவக்கினார் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க மலையாள பழஸிராஜாதான் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லும் இந்தப் படத்தை ஏற்பார்களா என்பது விமர்சகர்களின் கேள்வி.

தேசிய விருது கிடைத்து விட்டது என்பதற்காக நடிப்புக்கு மட்டுமே நான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த வட்டத்திலிருந்து மீண்டு வரவே விரும்புகிறேன் என்கிறார் பிரியாமணி.

பருத்தி வீரன் படத்தில் நடித்ததால்தான் பெரும் பிரேக் கிடைத்தது பிரியா மணிக்கு. ஆனால் ஏண்டா அந்தப் படத்தில் நடித்தோமோ என்று புலம்பாத குறையாக அவரது நிலைமை ஆகி விட்டது.

கூடவே தேசிய விருதும் கிடைத்து விட்டதால், ஆர்ட் பட நாயகி ரேஞ்சுக்கு பிரியா மணியை அத்தனை பேரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் அப்செட் ஆகியுள்ளார் பிரியா மணி.

இந்த வளையத்திலிருந்து வெளியே வரும் நோக்கிலேயே பாவாடை தாவணியை மறந்து விட்டு கவர்ச்சியின் பக்கம் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் பிரியாமணி.

தற்போது மணிரத்தினத்தின் ராவணா படத்தில் நடித்து வரும் பிரியா மணி, அடுத்து கன்னடத்தில் முதல் முறையாக நடிக்கப் போகும் (புனீத் ராஜ்குமார்தான் ஜோடி) ராம் படத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் ஏன் கவர்ச்சிகரமாக நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான பதிலைத் தருகிறார் பிரியா மணி. தெலுங்கில் நடித்த துரோணா படத்தில் கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் வந்திருந்தார் பிரியாமணி.

இதுகுறித்து அவர் கூறுகையில், துரோணா படத்தில் எனது காஸ்ட்யூமை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். பிகினி அணிவதில் என்ன தவறு இருக்கிறது.. ரோலுக்குத் தேவைப்பட்டது அணிந்தேன். அது தவறா..

எப்போதாவதுதான் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைக்கும். கமர்ஷியல் சினிமாதான் முக்கியமானது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நான் இழக்க விரும்பவில்லை. அதனால்தான் தேசிய விருது பெற்ற நடிகை என்ற இமேஜிலிருந்து வெளியே வர துடிக்கிறேன்.

நடிப்புடன் கூடிய படங்களுடன் கமர்ஷியல் படங்களையும் சம அளவில் செய்ய விரும்புகிறேன் என்கிறார் பிரியாமணி.
உங்கள் பயார் பாக்ஸ் உலவியை திறந்து about:config என்று டைப் செய்து Enter செய்யவும்.

1.
ஒரு புதிய விண்டோவில் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.


2.I'll be careful,…. என்ற Button ஐ கிளிக் செய்யவும்.


3.அங்கே தோன்றும் Filter bar இல் network.http.pipelining என்று டைப் செய்யவும் . புதிதாக தோன்றும் மூன்று வரிகளில் முதல் வரியில் (network.http.pipelining ) Double click செய்யவும் .அதில் Value என்பது True ஆக மாறியிருக்கிறதா என்று கவனிக்கவும்.


4.அடுத்ததாக உள்ள network.http.pipelining.maxrequest என்பதை Double click செய்து தோன்றும் விண்டோவில் 4 என்பதை 8 ஆக மாறிக்கொள்ளவும்.

5.
கடைசியில் உள்ள network.http.proxy.pipelining என்பதை Double click செய்து False என்பதை True ஆக மாற்றிக்கொள்ளவும்.

6.
இனி about:config விண்டோவில் Right click செய்து New என்பதை select செய்யவும் . அதில் Boolean என்பதை கிளிக் செய்யவும்.








7.
புதியதாக தோன்றும் விண்டோவில் content.interrupt.parsing என்று டைப் செய்து Ok செய்யவும் .








8.
இறுதியாக true என்பதை select செய்து ok செய்யவும் .










நான்
இந்தமுறையில் செய்தபோது முன்னர் இருந்ததை விட வேகமாக செயல்ப்பட்டது.

கருத்துகள் இல்லை: