செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

டபுள் டச் ஹாலிடே க்ளாசிக்



More than a Blog Aggregator

by rammalar
A
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 24:36)
ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர் குடிகாரனா வருவார். அவரை மக்கள் குடிகாரனா பாத்தா நல்ல இருக்காதுன்னு, அவரை மனசாட்சி கேள்வி கேக்குற மாதிரி ஒரு பாடலை வைத்து அவரின் இமேஜை சரிய விடாமலிருக்க எடுக்க்பட்ட பாடல் தான் இந்த பதிவின் தலைப்பு. "முன்னுரை எல்லாம் போதும் விசயத்த சொல்லுபா"ங்கிறீங்களா பொறுங்க.. இவ்ளோ தூரம் பின்னாடி எம்.ஜி.யாரை எல்லாம் இழுத்து வந்திருக்கேன்னா விசயம் இல்லாமலா? அதே மாதிரி என் மனசாட்சி
'Hello'க்குத் தமிழ்ல என்னன்னு பார்த்தோம் இல்லீங்களா?! அதையொட்டி யோசிக்கையில எங்கூடவே ஏழாம் வகுப்புல இருந்து, பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, இப்ப Montreal நகரத்துல இருக்குற என்னோட நண்பனோட ஞாவகம் வந்திச்சி.

அவனும், நானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்துலதான் Toronto வந்து, படிக்கிறோம் பேர்வழின்னு அங்க குப்பை கொட்டிட்டு இருந்தோம். அப்பவே, அவனோட பேச்சு வழக்கு மாறினா மாதிரி இருந்துச்சி. படிப்பு முடிஞ்சதும் அவனுக்கு கல்யாணம் ஆச்சுது. அந்த அம்மணியும் அவனும் மருந்துக்கு கூட தமிழ்ல பேசுறது கிடையாது. அவரு, எங்கூடப் பேசும்போதும் அப்படியே அள்ளி விடுவாரு. அப்பப்ப வாங்கிக் கட்டிக்கவும் செய்வாரு.

அப்படித்தானுங்க, ஒரு நாள் Hello'க்குத் தமிழ்ல என்னன்னு கேட்டு ஒரே கிண்டல்! நாம தகவலைச் சொன்னவுடனே, 'Ta-Ta க்குத் தமிழ்ல என்ன?'ங்குறான். 'Good-Bye க்குத் தமிழ்ல என்ன?'ங்குறான். நான் திருப்பிக் கேட்டேன், 'திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?'ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!

இந்த மாதிரி ஆட்களுக்குங்க தமிழைக் கண்டா ஒரு இளக்காரம். மஞ்சள்க் காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு ஊர்வழில சொல்வாங்க. அந்த மாதிரி, தமிழ்ல எதையும் கேலியாத்தான் பாப்பாங்க இவங்க. தாய்மொழி முதல்தாரம். அடுத்தடுத்து கால நேர சூழ்நிலைக்களுக்கு ஏத்தமாதிரி மத்ததுகளும் அமைஞ்சு போகுது. ஒன்னு, முதல் தாரத்துக்கு ஏத்த மரியாதை குடு. இல்லையா, எல்லார்த்துக்கும் தனி இடத்தைக் குடுத்துட்டுப் போ. அதெப்படி, அவங்களுக்கு முதல்குடி மனசளவுல ரெண்டாந்தாரமாவும், ரெண்டாந்தாரம் ஒசத்தியாவும் ஆகுதுன்னுதான் புரியலை?!

உண்மை நிலவரம் என்னன்னா, ஆங்கிலமொழி பேசுற, 90% வெள்ளைச் சாமிகளுக்கே Tah-Tah, Good-Bye இதுகளுக்கான வெவரந் தெரியாது. இந்தப் பொழப்புல இவனுங்க அலம்பல் வேற? உண்மையாலுமே, தமிழ்ல அர்த்தம் கேக்குறத நாம பாராட்டுறோம். இப்படி வெறுப்பேத்தறதுக்குன்னே கேட்டா, நாமளும் கேப்பமில்ல?

அவங்கதைய விடுங்க, இப்ப நாம வெவரத்துக்கு வருவோம். 'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம். இது இப்படி இருக்க, ஆங்கிலம் பேசுற வேறொரு வட்டாரத்துல, கடவுள் உன்னோடு இருப்பார் அன்பேங்ற அர்த்தத்துல, tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.

இந்த பின்னணியில ta-taக்கு தமிழாக்கம், 'ஆண்டவன் ஆசியுறுக'ங்ற பொருள்ல 'ஆஆ'ன்னு வெச்சிக்கலாம்ன்னு நான் சொன்னா, நீங்க ஏத்துகிடவா போறீங்க?! 'Ta Ta'தான் சொல்லியாகணுமா? எதோ ஒன்னு நீங்க சொல்லிகிங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனிப் போய் பொழப்பு கிழப்பைப் பாக்கலாம்! இஃகிஃகி!!

மொழி தவறினவன், வழி தவறுவான்!



சமீபத்தில் என் இரும்புக் குதிரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு நண்பனைப் பார்க்கப் போனேன்.

அவன் கடை மெயின் ரோட்டிலேயே இருப்பதால்... ரோட்டைக் கிராஸ் பண்ணிப் போக வேண்டிய நிலை.

சர்ர்ர்ர்ர்...! புர்ர்ர்ர்ர்...! என்று ஒரே வாகன சந்தடி...

நான் எப்பவும் ரோடு என்று வந்தாலே... சர்வ ஜாக்கிரதையாகத்தான் என் வீல்சேரை கையாளுவேன்.

சாலையின் இரு புறமும் சற்று நேரம் கவனித்துவிட்டு...

வாகனங்கள் வராத சின்ன கேப்பில்....
சர்ரென்று என் குதிரையை செலுத்தினேன்.

பாதி ரோடு கிராஸ் பண்ணியிருப்பேன்.

அப்பத்தான் அது நடந்தது.

(சரிடா..! பில்டப் போதும்டா...! மேட்டருக்கு வா..!)

என் பாக்கெட்டில் செல்ஃபோன் கத்த ஆரம்பிச்சுது.

செம்ம டென்ஷன்..! இந்நேரத்துல யாரு..?

சரி மொதல்ல ரோட்டை கிராஸ் பண்ணுவோம்.

அப்புறமா யாருன்னு பாப்போம்-ன்னு எப்பிடியோ கிராஸ் பண்ணி முடிச்சுட்டு ஒரு பாதுகாப்பான இடத்துல நிறுத்திட்டு...

ம்ஹ்ம் அப்பவும் செல் சத்தம் ஓயலை.

அவசரமா எடுத்துப் பாத்தா,...

எதோ ஒரு செல் நம்பர்தான் டிஸ்ப்ளே ஆகுது..!

யாராயிருக்கும்...? ஒரு வேளை முதலாளியோ..?

இல்லாட்டி வேறு யாராவது முக்கியமான விஷயமாய் அழைப்பார்களோ?

சரி... பாப்போம்- என்று ஆன் பண்ணி காதில் வைத்து "ஹலோ" என்றேன்.

(நான் ரோட்டை கிராஸ் பண்ணது, செல் அடிச்சது... சிந்தனை, எடுத்து பேசினது வரை எல்லாமே 45 வினாடி சமாச்சாரமுங்க..!)

எதிர் முனையில வந்தக் குரலை கேட்டுட்டு.... வந்துச்சு பாருங்க எரிச்சல்.

"உங்களுக்கு இந்த் சேவை வேண்டுமா..? எண் 5- ஐ அழுத்துங்க. அந்த சேவை வேணுமா எண் 6- ஐ அழுத்துங்க?"

எனக்கு வந்த கோபத்துக்கு செல்போன் கம்பெனிக்காரன் மட்டும் எதிர்ல மாட்டியிருந்தான்னா...
கொரவளைய கடிச்சுத் துப்பியிருப்பேன். (சும்மா பேச்சுக்குத்தாங்க...! நிஜமாவே கால்ல விழுந்து கெஞ்சியிருப்பேன். எதுக்கு வம்பு?)

இந்த அனுபவம் அப்ப மட்டும்தான்-னு இல்லைங்க.

என்னிடம் ஏர்செல், ரிலையன்ஸ் என்று 2 எண்கள் உண்டு.

சமயத்துல ரொம்ப அதி முக்கியமான வேலையில் இருப்போம்.

ரொம்ப முக்கியமா யாருக்கிட்டயாவது பேசிக்கிட்டு இருப்போம்.

அப்பதான் ஒரு அனாமதேய எண்ணிலிருந்து கால் வரும்.

முன்னாடில்லாம் இது போல சிறப்புச் சலுகைகளை அறிவிக்க என்றே 5 இலக்க எண்கள் இருக்கும்.

5 இலக்க எண் என்றாலே நாம் தெரிந்து கொண்டு, தேவை இல்லைன்னா எடுக்காமலே கட் பண்ணிருவோம்.

இப்ப இதுக்குன்னே வெவ்வேறு 10 இலக்க செல்ஃபோன் எண்களிலிருந்து இம்சைகள் வந்தபடி இருக்கின்றன.

என் ரிலையன்ஸ் மொபைலில் ஒருநாளைக்கு 10-க்கு மேற்பட்ட SMS- கள். எல்லாமே அந்த ஆஃபர்... இந்த ரீசார்ஜ் ஆஃபர் என்பதாகத்தான் இருக்கும்.

இதுகளை எரேஸ் பண்றதுக்குள மண்டை காய்ஞ்சிடும்.

ஏனுங்க பாஸ்..!

இந்த மாதிரி கஷ்டம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா?

இந்த இம்சை அழைப்புகளைத் தடுக்க எந்த கன்ஸ்யூமர் கோர்ட்டும் இல்லையா?

ஒரு கம்பெனியின் சிம்கார்டு வாங்குகிறோமென்றால் இந்த இம்சைத் தலைவலிகளை பொறுத்துக் கொண்டுதான் ஆகணுமா?

நமக்குன்னு தேர்ந்தெடுக்கற உரிமை எல்லாம் இல்லையா?

சொல்லுங்க பாஸ்...? சொல்லுங்க...?

"அப்பிடியே இங்க க்ளிக் பண்ணி இந்த ரகசிய வீடியோக் காட்சியையும் கொஞ்சம் பாத்துட்டு போயிடுங்க பாஸ்...! "

[Valid Atom 1.0]
[Valid Atom 1.0]

கருத்துகள் இல்லை: