புதன், 25 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-24

 பொதுமக்களை காக்க இலங்கை ஜனாதிபதி தவறியுள்ளார் - அமரிக்க செனட் உறுப்பினர் ஜோன் கெர : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயங்களில் உள்ள பொது மக்களை பாதுகாக்க தவறியுள்ளதாக அமெரிக்க சென்ட் சபை உறுப்பினர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இது இலங்கையின் சர்வதேச பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். செனற் சபையின் வெளியுறவு சமூகத்தின் தலைவர் ஜோன் கெரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  
இலங்கைப் படையினர் பொதுமக்களை கொலை செய்து வருகின்றனர்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் : இலங்கைப்படையினர் நாள்தோறும் பாதுகாப்பு வலயத்தினுள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் பலியாவதாக நியூயோர்க்கை தளமாகக்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.  
கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/


More than a Blog Aggregator

by ஜ்யோவ்ராம் சுந்தர்
வாழ்க்கையில் எந்தக் காதலியுமில்லாமல் வரண்டிருந்தபோது அதீதன் தன் நண்பன் குமாரிடமிருந்து வினிதாவின் அலைபேசி எண்ணை வாங்கியிருந்தான்.

'என் ஆள்தான், பரவாயில்லை, நீ வச்சுக்கோ' எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டான் குமார்.

வினிதாவிடம் நாளொன்றிற்கு 4 மணிநேரம் மொக்கை போட ஆரம்பித்தான் அதீதன். அவள் மிஸ்ட் கால்தான் கொடுப்பாள், இவன்தான் அழைக்க வேண்டும்.

மெதுவாக டிரைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தான். அவளைக் கல்லூரியில் சென்று விடுவது, அழைத்துக் கொண்டு வருவது என. அப்புறம், காஃபி ஷாப், சினிமா, மகாபலிபுரம் ரிசார்ட் என வளர்ந்தது.

அவளுக்குத் திரைத்துறை விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தன. அந்தப் பழைய பிரபல மா வரிசை நாயகிகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் கதாநாயகிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்தைச் சொன்னாள். ஒரு ரூபாய் நாணயத்தை முலைக்கடியில் வைப்பாராம். நாணயம் விழுந்து விட்டால், அந்த நடிகை தேர்ந்தெடுக்கப்படுவாள். முலை அழுத்திப் பிடித்துக் கொண்டு நாணயம் கீழே விழாவிட்டால் ரிஜக்டட்! வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பான் அதீதன். தன் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம் நாயகன் + பிரபல நாயகியின் வீடியோவைக் காண்பிப்பாள், அல்லது இன்னொரு (இப்போழுது திருமணமாகிவிட்ட) நாயகியும் அவளது காதலனும் இணைந்திருக்கையில் எடுத்த வீடியோவை.

அதீதனின் செல்ஃபோனில் ப்ளூடூத் இல்லாததால் இதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. இதில் அவனுக்கு வருத்தமே.

சில மாதங்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் 'எனக்கு செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பமாகப் போகுது. நிறையப் படிக்கணும், அதனால நாம இனிப் பழக வேண்டாம்' என்றாள். அதீதனுக்கோ வியப்பு.

குமாரிடம் சொன்னான். 'அவளுக்கும் போரடிக்காதா... அதான் மேட்டர் முடிச்சிட்ட இல்ல, அப்புறம் என்ன லூஸ்ல விடு' என்றுவிட்டு பாஸ்கருக்கு ஃபோன் போட்டு வினிதாவின் எண்ணைக் கொடுத்தான்.

'பாஸ்கர் பாவம், நாலஞ்சு தடவை கேட்டுட்டான்...' என்றான்.

எக்ஸாம் போன இடம் தெரியவில்லை. இப்போது பாஸ்கரனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அதீதனும் வேறு ஒருத்தியைத் தேடத் துவங்கிவிட்டான்.
கடும் கடன் சுமையால் வீழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளை, அதிலிருந்து மீட்டு கொண்டு வர, அமெரிக்க அரசு ஒரு லட்சம் கோடி டாலர் ( ஒரு டிரில்லியன் டாலர் ) வரை செலவு செய்ய முன்வந்திருக்கிறது. அமெரிக்க வங்கிகளில் கடன் பெறுபவர்கள், அதற்கு அடமானமாக எழுதி கொடுத்திருக்கும் சொத்துக்கள் இப்போது ஒன்றுக்கும் உதவாததாக இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கிய கடன் தொகையையும் செலுத்தப்படாமல் இருந்து, அந்த சொத்தையாவது விற்று கடனை கழித்து விடலாம் என்று பார்த்தால் அதுவும் விலை போகாமல் இருந்தால் வங்கிகள் என்னதான் செய்யும்?. சொத்தையும் விற்க முடியாமல் கடனையும் திரும்ப வாங்க முடியாமல், கணக்கில் மட்டும் கடனை எழுதி வைத்திருந்தால் போதுமா?. இப்படி ஏராளமான சொத்துக்கள் அமெரிக்க வங்கிகளிடம் சும்மாவே இருக்கின்றன. கடனும் திருப்பி வராமல், சொத்தையும் விற்க முடியாமல் நிறைய வங்கிகள் திணறுகின்றன. அதனால்தான் பல வங்கிகள், வங்கியை நடத்த முடியாமல் திவால் ஆகி வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இப்போது இதனை சரி செய்ய அமெரிக்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி, இந்த உதவாத சொத்துக்களை அமெரிக்க அரசே பெற்றுக்கொண்டு, அதை வைத்து வாங்கிய கடனை வங்கிக்கு கொடுத்து விடும். பின்னர் வேறு ஒரு நாளில் இந்த சொத்துக்களை அமெரிக்க அரசே விற்று அதில் கிடைக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தால் நஷ்டம் ஏற்பட்டாலும் அல்லது லாபம் கிடைத்தாலும் அதனை அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்திற்காக அமெரிக்க அரசு 75 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலர் வரை ( அதாவது ஒரு லட்சம் கோடி டாலர் ) செலவு செய்ய முன் வந்திருக்கிறது. மேலும் இந்த திட்டத்தை ' பப்ளிக் - பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் புரோகிராம் ' படி செயல்படுத்தலாம் என்றும், அதற்காக தனியாரும் இதில் பங்கு பெறலாம் என்றும் அழைப்பு விடப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த திட்டத்தால் அங்குள்ள பங்கு சந்தைகளான டவ் ஜோன்ஸ் குறியீட்டு எண் 500 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ), எஸ் அண்ட் பி குறியீட்டு எண் 54 புள்ளிகள் ( 7.1 சதவீதம் ), நாஸ்டாக் குறியீட்டு எண் 99 புள்ளிகள் ( 6.8 சதவீதம் ) உயர்ந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கும் சென்று விடவில்லை. எங்கள் மக்களுடன்தான் இருக்கிறார். எங்களோடு இருக்கும் மக்கள் இங்கு காலம் காலமாய் வசிப்பவர்கள். அவர்கள் சொந்த மண்ணில்தான் இருக்கிறார்கள். இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் செயல் பட்டது இல்லை. அவ்வாறு செயல்படும் நோக்கமும் எங்களுக்கு கிடையாது.இந்தியாவின் தென்முனையின் பாதுகாப்பு தமிழ் ஈழ மக்களின் நல்வாழ்வோடும், பாதுகாப்போடும் பின்னிப் பிணைந்துள்ளது.

இந்த பிராந்தியத்தின் வலிமை மிக்க நாடு இந்தியா. எப்போதும் எங்கள் பக்கத்தில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இந்திய அரசுடன் நிபந்தனைகள் அற்றதும், தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வை கொண்டதுமான பேச்சுக்களில் ஈடுபட எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை: