செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

நண்பர்கள் இருவர், ஒருவர் ஆத்திகர் மற்றொருவர் இறை மறுப்பாளர்

ஆத்திக நண்பர் : உங்க விஞ்ஞானத்தால் ஒரு உயிரை தோற்றுவிக்க முடியுமா ?

நாத்திகர் : விஞ்ஞானத்தால் உயிரை பெருக்க முடியும். ஒரு நெல்லை விதைத்தால் 10க்கும் மேற்பட்ட நெற்கதிர்களை பெற முடியும், விந்தையும் கருமுட்டையும் இணைத்து கருத்தறிக்க வைக்க முடியும்

ஆத்திகர் : எதுவும் இல்லாமல் நெல்லை உருவாக்க முடியுமா ?

நாத்திகர் : எதுவும் இல்லாமல் யார் நெல்லை உருவாக்கினார்கள் ?

ஆத்திகர் : கடவுள் உருவாக்கினார்

நாத்திகர் : நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா ?

ஆத்திகர் : கடவுள் படைக்காமல் நெல் என்ற ஒரு உணவு பொருள் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை

நாத்திகர் : செத்த எலியை கண்டு கொள்ளாமல் விடு, மறுநாள் அதன் மீது புழுக்கள் பெருகும், அதை கடவுளா கொண்டு வந்துவிடுகிறார்

ஆத்திகர் : புழுவையும் படைத்தது கடவுள் தான்

நாத்திகர் : நான் இந்த வெளையாட்டுக்கு வரவில்லை

ஆத்திகர் : இறைவனின் இருப்பை நீ ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்

நாத்திகர் :நான் இருக்குன்னு சொல்லி என்னுடைய கடவுள் பெயரைச் சொன்னால் என்னை விட்டுவிடுவியா ?

ஆத்திகர் : முதலில் ஒப்புக் கொள் அதன் பிறகு உன்னோட கடவுள் யாருன்னு சொல்லு

நாத்திகர் : ஆமாம் இருக்கு, என்னோட கடவுள் பெயர் பூனை

ஆத்திகர் :என்னது பூனையா ?

நாத்திகர் : யோவ் என்னைய்யா ? கடவுளை ஒப்புக் கொள் என்று சொன்னே, நானும் இருக்கு, எனக்கும் நம்பிக்கை இருக்கு, என்னோட கடவுள் பெயரைச் சொன்னால் பழிக்கிறியா ?

ஆத்திகர் : பூனையெல்லாம் கடவுளாக இருக்க முடியுமா ?

நாத்திகர் :அப்ப உன்னோட பிரச்சனை கடவுள் இல்லை, கடவுள் பெயரும் அதன் கட்டமைப்பும் தான்

ஆத்திகர் அது வந்து....கடவுள் என்றால் படைத்தல் காத்தல் அழித்தல் இதெல்லாம் செய்யனும் வேத புத்தகமெல்லாம் இருக்கனும்

நாத்திகர் : என்னோட பூனையும் இதெல்லாம் செய்யும், குட்டிப் போடும், வீட்டைக் காக்கும், எலியை அழிக்கும்....ம் வேத புத்தகம்........இனிமேல் தான் எழுதனும்

ஆத்திகர் : அது மிகச் சாதாரண வேலை, கடவுளின் தகுதிக்கு இதெல்லாம் போதாது, உன்னுடைய பூனை கடவுள் அல்ல

நாத்திகர் : என்னோட கடவுளை நான் எதிரே பார்க்கிறேன்....உன்னுடைய கடவுள் கற்பனை

ஆத்திகர் : பூனை எப்படி கடவுளாகும் ?

நாத்திகர் : எனக்கு பூனைதான் கடவுள்

ஆத்திகர் : நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்

நாத்திகர் : அப்ப என் கடவுளை நீ மறுக்கிறாய்



*****

தன்னுடைய நம்பிக்கைக்கும், கட்டமைக்கும் உட்பட்டத்தையே கடவுள் என்று நம்புகிறார்கள், உண்மையிலேயே இங்கு நாத்திகன் என்று குறிப்பிடுவது எதோ ஒரு மாற்று மதத்தைத் சேர்ந்தவரைத் தான். ஏனெனில் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே, மற்ற மதத்தினரின் கடவுள் பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். இந்த கூத்தில் நாத்திகனுக்கு கடவுள் நம்பிக்கை ஊட்ட முயல்வதும், கூடவே நாத்திகர்கள் பிறரை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றும் தூற்றுகிறார்கள்

கல்லூரி கட்டணத்தை செலுத்த வசதியின்மையால் ரோமானியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியொருவர் தனது கன்னித் தன்மையை 50,000 ஸ்ரேலிங் பவுனுக்கு இணையத்தளம் மூலம் ஏலத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனது கன்னித் தன்மையை நிரூ பிப்பதற்கான மருத்துவ சான்றிதழ் தன்னிடமுள்ளதாக அலினா பேர்சியா என்ற மேற்படி யுவதி ஜேர்மனிய இணையத்தளம்மூலம் செய்யப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ரோமானியாவின் பண்டைய நகரமான கராகலைச் சேர்ந்தவராவார்.

இந்த ஏலவிற்பனையின் மூலம் தனது எதிர்கால கணவராக வரக் கூடிய கண்ணியமும் மரியாதையும் மிக்க ஒரு மனிதரை சந்திக்க முடியும் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அலினா பேர்சியா தெரிவித்தார்.

இந்த ஏல விற்பனையில் வெற்றி பெறுபவர் வார இறுதி நாட்களை தன்னுடன் கழிக்க முடியும் எனவும் ஆனால் எங்காவது சுற்றுப் பயணம் செய்யவோ அன்றி ஹோட்டல் ஒன்றில் தங்கவோ விரும்பினால் அதற்கான பணத்தையும் அந்நபரே செலவிட வேண்டும் எனவும் அலினா பேர்சியா கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவியொருவர், தனது முதுமாணி கற்கை நெறிக்காக தனது கன்னித் தன்மையை ஏலத்தில் விட்டிருந்தார்.

இந்த ஏல விற்பனையில் சுமார் 10,000 ஆண்கள் பங்கேற்றிருந்தனர்.



முல்லைத்தீவு புதுக்குடியிருப்புக்கு கிழக்கில் புலிகளின் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்ட புலிகளுக்கும் படையினருக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளின் இறுதி விநியோகப் பாதையும் படையினரால் கைப்பற்றப் பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் இருந்து இரணைப்பாலைப் பகுதியை நோக்கி விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புலிகளின் அணிமீது இராணுவத்தின் 58வது படையணியினரும் எட்டாவது தாக்குதல் அணியினரும் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது புலிகளில் ஒன்பதுபேர் பலியானதுடன், மேலும் 11பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சமரில் உயிரிழந்த புலிகள் மூவரின் சடலங்களையும் அவர்களின் ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Sri Lanka War Situation - 29.03.2009



Wanni Operation 29 th March 2009




மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பூர்த்திசெய்யவே மனிதநேய உதவி அமைப்புக்கள் விரும்புகின்றனவே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட அவை விரும்பவில்லையென ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமை அமைப்புக்களும், உதவி அமைப்புக்களும் விடுதலைப் புலிகளுக்கு உதவவும், மோதல்களை அதிகரிக்கச் செய்வதற்குமே முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதநேய உதவித் திணைக்களத்தின் தலைவர் கென்ற்கின்ஸ்சி, "நாம் இலங்கை அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கவே விரும்புகின்றோம். எதிரிகளாகவல்ல" எனக் கூறியுள்ளார்.

"மனிதநேய விவகாரங்களில் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்களைப் பூர்த்திசெய்ய உதவுவதே எமது பாத்திரம்" என்றார் அவர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்களால் இடம்பெயர்ந்து நாளாந்தம் 1000 பேர் முகாம்களில் அனுமதிக்கப்படுவதாக வவுனியாவிலுள்ள முகாம்களுக்கு விஜயம் செய்திருந்த கென்ற்கின்ஸ்சி கூறினார்.

இடம்பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்களை அரசாங்கம் சரியான முறையில் கவனித்துக்கொண்டாலும், பெரும் எண்ணிக்கையானவர்கள் முகாம்களில் இருப்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றிவர முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு முகாம்களிலுள்ள மக்களைவிட அதிகமான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடையில் ஈடுபட்டிருப்பதையே முகாம்களில் காணப்பகூடியதாகவுள்ளது என அவர் கூறினார். "அங்கு பெருமளவான இராணுவத்தினர் உள்ளதுடன், பொதுமக்கள் முகாம்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு நடமாடும் சுதந்திரம் இல்லை" என்றார் அவர்.

பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து இந்த வருடம் 53,000 மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலை ஏறனும்ன்னு நினைச்சப்பவே பயம் வந்துருச்சு...போன தடவை பட்ட கஷ்டம் எல்லாம் ஞாபகம் வந்தது ...செய்த கூத்து நினைவுக்கு வ்ந்தது.....மலையையே அண்ணாமலைநாதரா நினைச்சு ஏறு எந்த கஷ்டமும் வராதுன்னு குருநாதர் ஆசிர்வாதம் செஞ்சு அனுப்பினாரு.....உண்மைதான் போகிறப்ப சிவசிவ ன்னு சொல்லிட்டு போனேன் இரண்டேகால் மணி நேரத்தில் ஏறிட்டேன்.....சில விஷயங்கள் புரியவே இல்லை....அங்கு மட்டுமே உள்ள வித்தியாசமான மரம் ,செடி,கொடிகள் வேறு எங்கும் நான் கண்டதில்லை........

வர்ரப்ப நான்கு மணி நேரம் ஆகி விட்டது .........உடம்பை குலுக்கி எடுத்த உணர்வு........பாதம் நோந்து போய் இருந்தது ஆனால் மனம் பறந்தது.......

இன்னும் இரண்டு அமாவாசை போகனும்......


நான் நினைச்சதை விட பஸ் ,ஆட்டோ வசதி அமாவாசை அன்று அதிகம்......
முன்னாடி எல்லாம் பக்கத்து ஊர்காரக மட்டும் வந்துகிட்டு இருந்தாக...ஆனா விகடனில் வந்தப்புறம் சேலம்,சென்னை வாசிகள் மிக அதிகம் .....அன்னதானம் பஞ்சமில்லாமல் மலையின் மேலேயும் கீழேயும் நல்லா நடக்கு.......இங்கேயும் ஒருத்தன் பூஜை,அன்னதானம் நடத்துறதா இண்டெர்நெட்டில் பணம் சுட்டுட்டதா தகவல்...

ஆனா நமக்கு தெரிஞ்ச இடத்துல லோக்கலில் வசூல் செய்து அமாவாசை தோறும் அன்னதானம் கொடுக்குறாங்க....நான் கூட அங்கு தான் சாப்பிட்டேன்...சுத்தமோ சுத்தம்...பின் அங்கு நன்கொடை கொடுத்து வந்தோம்.....ஓரு கிலோ அரிசி முதல் நன்கொடை வாங்குறாங்க,...

போகிற வழியில நாவல்மரசுனை ஒன்னு இருக்குது ....எனக்கு முதலில் ஒருமாதிரியாக இருந்தது ஆனா தண்ணீர் சுவையோ அருமை.................
இது ஒரு சங்கிலிப் பதிவு. யூடியூப் வீடியோ ஒன்றின் விமர்சனம். இது என்னுடைய நண்பன் ஒருவன் (பீட்டர் ப்ளாக் வைத்திருப்பவன் காட்டியது) இதைப் பற்றி சில வரிகள் நான் எழுதி, இது போலொன்றை வேறொரு (அல்லது பல) வலைப்பதிவருக்கு காட்டி அவரையும் எழுத சொல்லும் முயற்சி. அவ்வளவே.

மேட் என்ற இந்த இளைஞர் இப்படி வெட்டியாக ஒரு நடன அபினயத்தின் மூலம் உலகப்புகழ் அடைந்திருக்கிறார். சும்மா இருந்தவரை... "ஏலேய்! நீ எப்பவும் கோடாங்கி மாதிரி ஒரு டாண்ஸ் ஆடுவியே! அப்படி ஒரு ஸ்டெப் போடுலே! வீடியோ எடுக்கணுமாம் பயபுள்ள!" என்ற வேண்டுகோளுக்கிணங்கி லுலுவாயிக்கு செய்த சேஷ்டையை அவரது நண்பர் நெட்டில் விட வெவ்வேறு நாடுகளை சார்ந்த மக்கள் இதை ரசித்து எங்க ஊருக்கும் வந்து ஒரு ஆட்டம் போடுறீங்க்களா அப்பு?"-னு கேட்டதுல கொரியாவோட ராணுவம் மட்டும் புக முடிந்த இடத்தின் காவலர்கள், மடகஸ்கர் காடுகளின் குரங்க்குகள், பபுவா நியூ கினியாவின் காட்டுவாசிகள் கூட எல்லாம் ஆடிட்டு வந்திருக்காரு மேட்! பிரபலமாவதற்கு தான் எத்தனை வழிகள்! புதுசு புதுசா வர்றாங்களேய்யா!



இதனை யாரிடம் கைமாற்றி விடுவதென்று பார்க்கையில் எனக்கு தெரிந்த ஒரே பதிவர் வால்பையன் ஐயாவிடம் மாற்றலாம் என்று அவரிடம் கேட்டேன். 'பென்னி லாவா' பற்றி தெரியுமா-ன்னு கேட்டதற்கு, அது யாரு பிகரா-ன்னு அப்பாவியா கேட்டாரு! அவருக்காக இதோ லிங்க்.

கருத்துகள் இல்லை: