திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29



More than a Blog Aggregator

by Udayar Rajenthra

வணங்கா மண். வன்னியில் மனிதப் பேரவலத்தக்குள் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்களுக்கு, மனிதாய உதவிகள் சுமந்து, பிரித்தானியாவில் இருந்து வன்னி நிலம் நோக்கிச் செல்லவிருக்கும் உதவிக்கப்பலுக்கு உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்மக்கள் உதவி வருகின்றார்கள்.

இந்தச் செயற்திட்டம் குறித்து அதன் அமைப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் திரு: மூர்த்தி அவர்களுடனான சந்திப்பு
ஒலி,ஒளி வடிவங்களில் காண்க

'தொடர் பதிவு என்று எழுதுபவர்களே!'ன்னு ஒரு இடுகை நான் இடவும், மக்களும் வந்து படிச்சாங்க...போனாங்க... யாரும் இந்த அரை வேக்காடு சொல்லுறதுல இருந்த பிழையைக் கண்டுங் காணாமப் போயிட்டாங்க! அவ்வ்வ்..... இருந்தாலும் பிழையான தகவலை இட்டதுக்கு நெம்ப வருந்துறேனுங்க. பிழைய வேறொரு பதிவில வந்து சரி செஞ்ச அன்பர் குறும்பனுக்கு மனசார நன்றி சொல்லிகிடுறனுங்க!!

blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை! இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க:

  • ஒரு பதிவர், ஒரு தலைப்பின் பேரில் தொடர்ந்து எழுதுவது தொடர் இடுகை!

  • ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற இடுகை, சங்கிலித் தொடர் இடுகை!!

  • ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைத் தொடர் இடுகை!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!!

ஆகும் காலம் ஆகும்;
போகும் காலம் போகும்!

ஈழத்துத் தமிழ்ச் சொல்லிசை (Tamil Rap) வரலாற்றிலே அண்மையில் பிரபலமாகி வருகின்ற ஒரு கலைஞராக விளங்குபவர் தான் இந்தச் சுஜித்ஜி. சுஜித் கணேசபாலன் என்றழைக்கப்படுகின்ற இந்தச் சுஜித்ஜி அவர்கள் ஈழத்தின் யாழ்ப்பாணத்திலே பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்து வருக்கின்றார். இசைக்கு எல்லை இல்லை என்பதற்கு அமைவாகப் பயணிக்கும் இந்தச் சுஜித்ஜி அவர்களும் இதுவரை 'சிங்கிள்ஸ், 'அடிமேல் அடி' எனும் இரண்டு இசை இறுவட்டுக்களை வெளியிட்டு இருக்கிறார். இவரது அடுத்த இறுவட்டான 'இராவணன்' என்கின்ற இறுவட்டு இந்த வருடத்தில் வெளிவரவிருக்கின்றது.














ஒரு கவிஞனாக, சொல்லிசைக் கலைஞனாக, தாளவாத்தியக் கலைஞனாக விளங்குகின்ற சுஜித்ஜி அவர்களின் பிரபல்யமான பாடல்களாக 'வாழ்வும் வரும் சாவும் வரும்....'
'பொறுத்தது போதும் பொங்க வேணும்....., 'ஈழ தேசம் எங்களின் தேசம்...' அடிமேல் அடி....' 'கதையல்ல நிஜம், பெண்ணே என் காதல் தனைச் சொல்வாயா.... முதலிய பாடல்களைக் குறிப்பிடலாம். இன்றைய நவீன சொல்லிசை என்கின்ற இசை வடிவத்தினூடாக எமது சமூகத்தினிடையே பல மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை விதைத்துப் பாடல்களை இயற்றுகின்ற, பாடல்களைப் பாடுகின்ற இந்தச் சுஜித்ஜி அவர்கள் ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்காக இவ் வருடத்தின் ஆரம்பத்தில் வழங்கிய நேர்காணலை உங்களுக்காக இங்கு தருகின்றேன்.





நீங்கள் யாவரும் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய ஒரு நேர்காணல் இது. ஒலிப் பதிவு செய்கையில் இடம்பெற்ற என்னுடைய கவனக் குறைவால் ஒலித் தெளிவு கொஞ்சம் அதிகமாக உள்ளது. நீங்கள் தான் உங்கள் கணினியின் ஒலி அளவிற்கு ஏற்ப கூட்டிக் குறைத்துக் கேட்க வேண்டும். யாரோ என்னைத் திட்டுவது கேட்கிறது. ம்... கோபப்படாமல் பொறுமையாக நிகழ்ச்சியைக் கேளுங்கோ.... இந் நிகழ்ச்சி பற்றிய உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள். எங்களது சமூகத்திற்குள் இந்தச் சொல்லிசை என்கின்ற இசை வடிவத்தினூடாக மாற்றங்களை ஏற்படுத்த முனைகின்ற இக் கலைஞனை ஊக்கப்படுத்தும் வகையில் உங்களின் உள்ளக் கிடக்கைகளையும் இங்கே சொல்லி விட்டுச் செல்லுங்கள்!





ஒரேயடியாக நேர்காணலைக் கேட்க வைத்து உங்களைச் சலிப்படையச் செய்யக் கூடாது என்பதற்காக இந்த நேர்காணலின் முதற் பகுதியினை இங்கே தருகின்றேன். நேர்காணலின் அடுத்த பகுதிகள் வெகு விரைவில் உங்கள் தமிழ் மதுரத்தில் பதிவேற்றப்படும்...!







நேர்காணலினைக் கேட்க......




Get this widget Track details eSnips Social DNA






இப் பதிவோடு தொடர்புடைய வேறு பதிவுகள்/ பழசுகள் இதோ.....



*உலகத் தமிழ் உறவுகளுக்கு!

*பொறுத்தது போதும் பொங்க வேணும்! தெருத் தெருவாய் நீ இறங்க வேணும்!

*ஈழ தேசம் எங்களின் தேசம்!

*அடி மேல் அடி! காணொளி!

*கொஞ்சம் கொஞ்சம் நில்! வானொலித் தொகுப்பு!

*கொஞ்சம் கொஞ்சம் நில்! வானொலித் தொகுப்பு பாகம்(02)

*பொறாமை!

கருத்துகள் இல்லை: