செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30


மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காதுன்னு பழமொழி சொல்வாங்க... மீனாவின் ஆசையும் அப்படித்தான். ஒரு காலத்தில் ரஜினி, கமலுடன் தூள்கிளப்பிய மீனாவுக்கு, இப்போதுள்ள இளம் நடிகர்களுடனும் ஜோடி போட ஆசை.

ஆனால் அவர்களோ, 'என்ன ஆன்ட்டி பயமுறுத்துறீங்களே...!' என ஆட்டத்திலேயே சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள். கிடைத்த ஒரு வாய்ப்பும் விஜய்காந்தின் மரியாதை படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராகவே அமைந்துவிட்டது.

தெலுங்கிலும் வயதான ஹீரோக்களோடுதான் ஜோடி சேர முடிகிறதாம். அந்த நிலையிலும் கவர்ச்சி காட்ட முயற்சிக்கும் மீனாவை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்துகிறார்களாம் இயக்குநர்கள்.

சரி, இந்த மடம் இல்லாட்டி சந்த மடம் என்று மனதைத் தேற்றிக் கொண்ட மீனாவுக்கு தெலுங்கில் வசமாய் வந்தது ஒரு வாய்ப்பு. படம் வெங்கம்மா. பக்திப் படம்.

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளரான துரைசாமி ராஜு எடுக்கும் இந்தப் படம் தமிழிலும் வரப்போகிறது

(தமிழ் ரைட்ஸ் ராம நாராயணனுக்கா?!).

இந்த வாய்ப்பைத் தொடர்ந்து மேலும் சில பக்தி வாய்ப்புகள் தெலுங்கு கன்னடத்திலிருந்து வருகிறதாம் மீனாவுக்கு.

எப்படியோ வண்டி ஓடினா சரி!
புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் சீமான் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இலங்கைப் பிரச்னை தொடர்பாக, சீமான் புதுச்சேரியில் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தது என்று கூறி அவரை புதுச்சேரி போலீஸôர் பிப்ரவரி 21-ம் தேதி கைது செய்தனர். இதே பிரச்னையில் சீமான் தமிழகத்தின் பாளையங்கோட்டையில் பேசியது தொடர்பாக அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இப்போது புதுச்சேரி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
பாதுகாப்பு வலயங்களில் உள்ள பொதுமக்களில் பலர் உள ரீதியாக பாதிப்படைந்திருப்பதாக வன்னி பிராந்திய உளவியல் சமூக இணைப்பு சமூகம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் இரவு பகலாக பல வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் வாழ்வதாலும், இலங்கை இராணுவத்தின் அன்றாட எறிகணை வீச்சுக்களால் பாதிக்கப்படுவதினாலும், உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


More than a Blog Aggregator

by சின்ன அம்மிணி
இந்த முறை இந்தியாவுக்குப்போனப்பவும் ஒருத்தர் இந்தக்கேள்வியைக்கேட்டார். ஒவ்வொரு தரமும் யாராவது என் கிட்ட கேட்டுடுவாங்க. "செந்திலண்ணாதானே"ன்னு நானும் கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டேன் அவரை. கிட்டத்தட்ட இருபது வருசம் கழிச்சு என்னை பாக்கறார். அவரும் நானும் அடையாளம் கண்டுக்கிட்டது எனக்கே அதிசயமாப்பட்டுது. அவங்கப்பா எங்க ஊர் பஸ்ல ஓட்டுனரா இருந்தார். அதனால அவரை எல்லாருக்கும் தெரியும். இந்த அண்ணா வடக்கே எங்கியோ வேலைல இருந்தார். இப்ப கோவைலயே செட்டில் ஆகிட்டார்.



என் ஒன்று விட்ட சித்தியின் மகன் என்னை வந்து பார்த்தான். அவனையும் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். இப்பொழுது அவனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. நேவியில் பதினைந்து வருடம் பணியாற்றி விட்டு இப்போது P & O Cruise கப்பலில் பாதுகாப்பு வேலையில் இருக்கிறான். பால்ய வயது சம்பவங்களை நினைவு கூர்ந்தோம்.

'அக்கா, அந்த மாதிரி வாழ்க்கை இனி வராது இல்லையா' என்றான்.



ஒருத்தங்களை நான் சந்திக்க தோதுப்படவில்லை. இவங்களை என் கோலங்கள் கதையின் கதாநாயகின்னு சொல்லலாம். புற்றுநோய் மூளைக்கு பரவிவிட்டதாம். மருத்துவனைக்கும் வீட்டுக்குமாய் இருக்கிறார்களாம். மருத்துவர்கள் கை விட்டுவிட்டனர். போய்ப்பார்க்க முடியவில்லை என்று இன்னும் மனதில் ஒரு அரிப்பு. இப்பொழுதுதான் வாழ்க்கையில் ஒரளவுசெட்டில் ஆகியிருந்தார்கள். அதற்குள் இப்படி வந்திருக்கிறது.



இந்தியாவில் ஆறு வாரங்களில் 5 வாரங்கள் இணையம் இல்லை. வீட்டில் மோடம் என்னவோ ரிப்பேர். அதை சரிபார்க்க so called experts வந்து இருமுறை முயற்சி செய்து தோற்றுப்போனார்கள். கடைசியில் BSNL compatible மோடம் ஒண்ணு வாங்கி கன்பிகர் பண்ணி மாட்டியதும் சரியாச்சு. எப்பன்னா நான் கிளம்பறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி.



இப்ப கோவைக்கு வெளிநாட்டு விமான சேவை இருக்கறது ரொம்ப வசதியா இருக்கு. திரும்ப மெல்பர்ன் வரும்போது விமானத்துக்காக காத்துட்டு இருந்தொம். போர்டிங் போகப்போன போது ஐந்து அதிகாரிகள் ஒருவரை நிறுத்தி விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். இங்கு வந்ததும் தான் வீட்டில் சொன்னார்கள். நீ போன அதே பிளைட்டில் ஒருத்தர போதைப்பொருள் கடத்தினதா பிடிச்சிருக்காங்க என்று.



தொழிலதிபர் சஞ்சயிடம் மட்டும் போனில் பேச முடிந்தது. நேரில் பார்க்க முடியவில்லை. அவரும் பிஸி. நானும் தான்.



இங்கே வந்ததும் மறுநாள் வேலைக்குப்போகணும். இருந்த அலுப்பில் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். இப்போ மூணு நாளா காய்ச்சல். இன்னைக்குதான் கொஞ்சம் பரவாயில்லை. எல்லா பதிவுகளையும் தமிழ்மணத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் படித்துக்கொண்டிருக்கிறேன்.



பழமைபேசி மலங்க மலங்க நல்லா முழிச்சிருக்கார்.



துளசி டீச்சர் எனக்கு வசதியா லீவு போட்டுட்டாங்க.



தளபதி நசரேயன் ரயில்ல மஞ்சளழகிக்கு அண்ணனான கதை சூப்பர்.



தாமிரா - ஆதிமூலகிருஷ்ணன் ஆகிட்டார். எனக்குத்தெரிஞ்சு இவரோட சேத்து பதிவுலகத்துல மூணு கிருஷ்ணர்கள். யுவ கிருஷ்ணா, பரிசல் மத்தவங்க.(சுதேசமித்திரனை சந்திச்சேங்க ஆதிமூலகிருஷ்ணன்)



கார்க்கி ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள். தாமிரா என்ற ஆதிமூல கிருஷ்ணனுக்கும் வாழ்த்துக்கள். மாதவராஜ் அவர்கள் பதிவுகள் எல்லாம் அருமை.



குசும்பன் அடுத்த நட்சத்திரமாம். அன்னன்னைக்கு படிக்காட்டியும் தேடிப்பிடிச்சு படிக்கும் பதிவுகள்ல ஒண்ணு குசும்பருடையது.



------- ----------



அப்பப்போ பதிவு போட்டு நானும் இருக்கேன்னு சொல்லிக்கணும். இல்லாட்டி நானும் என்னை ஞாபகம் இருக்கான்னு உங்க கிட்ட கேக்க வேண்டி வருமே :)
கணினி உலகை கலவரப்படுத்திக் கொண்டுள்ளது இந்த Conficker கணினி Worm. கணினி தொழில்நுட்பத்தில் Worm என்பது தன்னை போலவே மற்றொரு பிரதியை உருவாக்கி கொள்ளும் ஊறு விளைவிக்க கூடிய சிறிய கணினி மென்பொருள்.முக்கியமாக நெட்வொர்க் இணைப்புகளில் உள்ள கணினிகளை குறி வைத்து அவற்றுள் சென்று ஒளிந்து கொண்டு பின்னர் இதனுடன் இணைக்கப்பட்ட Payload எனும் சிறிய கணினி நிரல் கட்டளைகளை ஏற்று அதன்படி செயலாற்றும்.இதை போன்ற ஒரு

கருத்துகள் இல்லை: