வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-27

நீடாமங்கலம் மார்ச் 27 : முதல்வர் கருணாநிதி பகுத்தறிவு பேசி ஆன்மீகவாதிகளை கேலி செய்து வருகிறார். ஆனால் அவரது துணைவியார் பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயஸ்வரர் குரு பரிகார கோவிலில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.



அங்கிள் சஞ்சய் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவ படுத்தியிருக்கிறார்!
அவருக்கு எனது நன்றி

*****************************

பட்டாம் பூச்சி எனக்கு ரொம்ப பிடித்த இனம். ஆனாலும் சிறுவயதில் அதை பிடித்து பிய்த்து எறிந்து விளையாடியுள்ளதை இங்கே ஒப்புகொள்கிறேன். தப்பு தான் ஆனா அப்போ தெரியாதே!
கொஞ்சம் வளர்ந்த பிறகு இயற்கையின் மேல் அளவில்லா காதல் வந்தது! உயிர்களின் மேல் மதிப்பு வந்தது. அதிலிருந்து நான் உயிர்களை வதம் செய்வதில்லை!

பட்டாம்பூச்சி இனத்திலிருந்து தான் பட்டு சேலை தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், பல முறை மண்டை வீங்க பூரிகட்டையில் அடிவாங்கியும் பட்டுசேலை எடுத்து தர முடியாது என்று சொல்லிவிட்டேன். (இக்கனாமிக் வீக் பிரச்சனை நம்மளோட இருக்கட்டும்)

ஒரு விசயத்தை யோசிக்கும் போது பட்டுசேலை தயாரிப்பை ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. எதோ ஒரு வகையில் அவர்கள் இயற்கையை சமன் செய்து விடுகிறார்கள், பட்டுபுழு வளர்க்க ஒருவித செடி வளர்க்க வேண்டுமாம், அதனால் நமக்கு ஆக்சிசன் கிடைக்குமே. அதனால இதை கண்டுக்காம விட்டுவிடுவதே சாலச்சிறந்தது.

***********************************

இந்த விருதை நாம் சிலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது வலையுலக விதி!
ஆரம்பத்தில் புதிய பதிவர்களிடம் சுற்றி கொண்டிருந்த பட்டாம் பூச்சி விருது அங்கிள் சஞ்சய் வரை சென்று விட்டது. அவர் எனக்கெல்லாம் மூமூமூத்த்த்த்த்ததததத பதிவர். அவருக்கே கொடுக்கும் போது நான் காலரை தூக்கிவிட்டு வாங்கி கொள்ளலாம்.

நானெல்லாம் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் சைக்கிள் புதிதாக ஓட்ட வந்த சிறுவன் போல் இருந்தேன். பெடல் பண்ண தெரியாது. பிரேக் பிடிக்க தெரியாது. எப்படி செல்ல வேண்டும். எங்கே செல்ல வேண்டும் எதுவுமே தெரியாது! ஆனால் புதிதாய் எழுத வந்த பதிவர்கள் வரும்போதே மோட்டார்பைக்கில் தான் வருகிறார்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார்கள்! உங்களுடய குழு மனப்பான்மை பிடித்திருக்கிறது, ஆனால் அதில் ஒரு பேரிழப்பு இருக்கு! அதை ஒரு பதிவாக சொல்கிறேன்!

சரி இதை நான் யாருக்கு கொடுப்பது! ஏற்கனவே இருக்கும் பிரபலங்கள் பல உயரிய விருதுகளை வாங்கி விட்டார்கள். அவர்களிடம் போய் இந்த விருதை கொடுப்பது, சாருவுக்கு மானிட்டர் சரக்கு வாங்கி தருவதற்கு சமம். அதனால் மேலும் புதிவ பதிவர்களுக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்தலாம்.(விதிவிலக்குகளும் உண்டு)

**************************

தமிழ்நெஞ்சம்
கணிணிதுறை சந்தேகங்களை தீர்த்து வைக்கும் இவர். தற்போது குட்டிகதைகள் எழுதி வாழ்வியல் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறார்.

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சிக்கே பட்டாம்பூச்சி விருது கொடுத்த எனக்கு யாராவது "பெரிய வால்" விருது கொடுப்பிங்களா?

பப்பு
நகைச்சுவையிலும், எடுத்து கொள்ளும் விசயத்திலும் இவருகென்று தனி நடையை பயன்படுத்துகிறார், இவருக்கு வெகு விரைவில் வெகுஜன ஊடகத்தில் வாய்ப்பு கிடைக்கலாம்,
தொடர்ந்து எழுதுங்கள் பப்பு.

கிஷோர்
நகைச்சுவை, சீரியஸ் என கலந்து கட்டி அடிக்கிறார்! நல்ல மொழி நடை நேரில் உட்கார்ந்து பேசுவது போல் இருக்கும்! இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்! வேகம் எடுத்தார் நாம் அண்ணாந்து தான் பார்க்கனும்

பிரபா
பிரபலங்களின் மிக சிறந்த கவிதைகளை தொகுத்து வழங்குவது இவரது தனிச்சிறப்பு!
அப்பப்ப மொக்கைகளும் எழுதுவார்! இப்போ எதுக்கோ வெயிட் பண்ண சொல்லியிருக்கிறார், பார்ப்போம்


More than a Blog Aggregator

by சே.வேங்கடசுப்ரமணியன்.

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளர் திரு.சி.செல்வமோகனகுமார் அவர்கள் திங்கள், வெள்ளி ஆகிய தினங்களிள் புற நோயாளிகளைப் பார்வையிடுகிறார்.

செவ்வாய் கிழமை சேப்ளாப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்திற்கும்,
புதன் கிழமை காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் விஜயம் செய்கிறார்.

பிரதி வியாழக்கிழமைகளிள் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுற்று முறையில் பள்ளி சிறார் நலத்திட்ட பள்ளிக்குச்செல்லும் மருத்துவக்குழுவில் பங்கேற்கிறார்.

புற‌நோயாளிக‌ளாக‌ வ‌ரும் முதியோர்க‌ளிள் காட்டிராக்ட் என‌ப்ப‌டும் க‌ண் புரை நோய் உள்ள‌வ‌ர்க‌ளில் த‌குதியான‌வ‌ர்க‌ளை தேர்ந்தெடுத்து இல‌வ‌ச‌ க‌ண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கிறார்.
தோக‌ம‌லை வ‌ட்டார‌த்தில்

மொத்த ம‌க்க‌ள் தொகை 86404.
மொத்த‌ கிராம‌ம் 90
மொத்த‌ ப்ள்ளிக‌ள் 77

இவ‌ர‌து ப‌ரிந்துரையிப‌டி க‌ண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ண்ட‌வ‌ர்க‌ள், ம‌ற்றும் இல‌வ‌ச‌ க‌ண்ணாடி பெற்றுக்கொண்ட‌ ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ள் விவ‌ர‌ம் இங்கே.இது பிப்ர‌வ‌ரி 2009 வ‌ரையிலான‌ அள‌வீடு.

children play

 

அவனும் அவளும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

முடிந்து போன பற்பசையிலிருந்து, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என நிறைய சேகரித்து, வீட்டிற்கு வெளியே, முன்பக்க ஜன்னல் ஓரம் சமையலறை ஒன்றை அமைத்திருந்தார்கள். இரண்டு நாளைக்கு முன்னால், கடிகாரத்திலிருந்து தூக்கிப் போட்ட பேட்டரிகள் அங்கு சிலிண்டர்களாகவும், டார்டாயிஸ் வைக்கிற தட்டு அதன் மேல் கேஸ் ஸ்டவ்வாகவும் உருமாறியிருந்தன.

அரிசி முடிந்துவிட்டதென்று சொல்லி சமையல் சாமான்கள் வாங்க அவள் லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவன் சீட்டுக்கட்டு ஒன்றை பையிலிருந்து எடுத்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான். லிஸ்ட் வாங்கியதும், சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு குழாயிலிருந்து செடிக்குத் தண்ணீர் ஊற்றும் டியுபிலிருந்து வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டான்.

கொஞ்சதூரம் போனவன் திரும்பி வந்து அவளிடம், "ஒனக்கு ரோஸ் கலர்ல ஒரு சுடிதாரும் வாங்கி வர்றேன்" என்றான்.

 

 

*

ஒருபக்கம் அசின் நல்லமுத்துக்குமார் பிரச்சனையால் நிம்மதியிழந்தாலும், இன்னொரு பக்கம் கேல்வின் கேர், ஆனோ கிரேட்ஸ் என பல விளம்பரங்களில்  அசத்தி வருகிறார். லேடஸ்டாக இவர் பாண்டலூன் ரிடேய்லின் "பிக் பசார் மார்கெட்ஸ்"-ன் அம்பேசடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு இவர் ஒப்பந்தமாகியுள்ளது கோலிவுட்டில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. பாண்டலூன் பிக்பசாரின் நான்கு விளம்பரங்களில் இவர் நடிக்க உள்ளார். பாண்டலூன் பிராடக்டுகளை ஏற்கனவே கிரிகெட் வீரர் தோனி விளம்பரப்படுத்தி வருகிறார். ஒரு விளம்பரத்தில் அசின்  தனியாகவும், மற்ற மூன்று விளம்பரங்கள் தோனி நியுசிலாண்டிலிருந்து திரும்பி வந்தவுடன் அவருடன் இணைந்தும் நடிக்கவுள்ளார். வோக்,வெர்வ் என அட்டைப்படங்களில் அசத்திய அசின் பாண்டலூன்-பேஷனிலும் அசத்தவுள்ளார். கலக்குங்க அசின்...!
திமுக கூட்டணியில் மீண்டும் பாமகவை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. இதற்காக அன்புமணியை மிரட்டி கூட பார்த்தது. ஆனால் கடைசியில் அந்த முயற்சி பலிக்காமல் போய்விட்டது. காரணம் கருணாநிதி குடும்பத்தில் உள்ள பவர் பாலிட்டிக்ஸ்தான் என்று விபரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பாமகவுன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு கொண்டு வந்து கருணாநிதியிடம் நல்ல பெயர் வாங்க மாறன் சகோதரர்கள் ஒரு பக்கமும், கனிமொழி இன்னொரு பக்கமும், மூத்த அமைச்சர்கள் சிலர் இன்னொரு பக்கமும் தீவிரமாக முயற்சித்தனர். ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி முதல்வரை சந்திக்க கூடிய சூழல் ஏற்படும் போது, இன்னொரு தரப்பு அதை ஏதாவது ஒன்றை சொல்லி தடுத்துவிடுவார்கள். இப்படியே இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் பற்றி அறியாத பாமக கருணாநிதியை நெருங்க முடியாமலேயே வெளியேற்றப்பட்டுவிட்டதாக திமுக தலைமை கழகத்தில் பேசுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: